குஜராத்தில் சர்தார் வல்லபாய்பட்டேல் பிறந்த நாள் விழாவில் பேசிய பிரதமர் நரேந்திரமோடி, “மன்னும் இமயமலை எங்கள் மலையே’ என்ற பாரதியாரின் கவிதைகளை மேற்கோள் காட்டி உரையாற்றினார். உலகிலுள்ள மிகஉயர்ந்த மலையாகிய இமயமலையை உடையநாடு. வற்றாத கங்கை நதியை உடையநாடு. வேதங்களை உடைய நாடு என்று பெருமை பொங்க கூறியுள்ளார் பிரதமர் மோடி.
மேலும் அவர் பேசியதாவது , “மன்னும் இமயமலை எங்கள் மலையே’ என்ற பாரதியாரின் கவிதைகளை மேற்கோள் காட்டிபேசினார்.
பிரதமர் மோடி பொதுவாகவே பேசும்போது திருக்குறளை மேற்கோள் காட்டி பேசுவார். அயோத்தி ராமஜென்ம பூமியில் கம்பராமாயாணத்தை மேற்கோள் காட்டி பேசினார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சுதந்திர தின உரையிலும் பாரதியாரின் கவிதைகளை மேற்கோள் காட்டி பேசியிருக்கிறார்.
சர்தார் வல்லபாய் பட்டேலின் பிரமாண்ட சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்திய மோடி..
மன்னும் இமயமலை யெங்கள் மலையே
மாநில மீதிது போற்பிறி திலையே!
இன்னறு நீர்க்கங்கை யாறெங்கள் யாறே
இங்கிதன் மாண்பிற் கெதிரெது வேறே?
பன்னரும் உபநிடநூ லெங்கள் நூலே
பார் மிசை யேதொரு நூல்இது போலே?
பொன்னொளிர் பாரதநா டெங்கள் நாடே
போற்றுவம் இஃதை எமக்கில்லை ஈடே என்று பேசினார் மோடி.
உலகிலுள்ள மிகஉயர்ந்த மலையாகிய இமயமலையை உடைய நாடு. வற்றாத கங்கை நதியை உடைய நாடு. வேதங்களை உடையநாடு என்று பெருமை பொங்க கூறியுள்ளார் பாரதியார். இந்த அற்புதமான கவிதையை இன்றைய தினம் மேற்கோள்காட்டி பேசியுள்ளார் பிரதமர் மோடி.
இமயமலைக்கு தனியாக யாரும் சொந்தம் கொண்டாட வேண்டாம் என்று சொல்லும் வகையிலும் இந்தியாவின் பெருமையை உலகிற்கு உணர்த்தும் வகையிலும் பாரதியின் கவிதையை மேற்கோள் காட்டிப் பேசியுள்ளார் பிரதமர் மோடி.
ஆண்மைக் குறைவுள்ளவர்கள், வெள்ளை வெங்காயச் சாருடன் தேன் கலந்து இரண்டு, மூன்று வாரங்களுக்குக் ... |
இலவங்கப்பத்திரி மூலம் பிரமேகம், கடுமையான காய்ச்சல், குளிர்சுரம், ஆஷ்துமா போன்றவைகளைக் குணப்படுத்தலாம். பெண்களுக்கு ... |
செம்பரத்தை பூவை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைக்குத் தடவிவரத் தலைமுடி நன்கு நீண்டு வளரும். |