அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோபைடனுக்கு பிரதமர் நரேந்திர மோடி தொலை பேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோபைடனுக்கு தொலைபேசி வாயிலாக வாழ்த்துக்களை தெரிவித்தாக குறிப்பிட்டுள்ளார். இந்திய – அமெரிக்க உறவின் முக்கியத்துவம் குறித்து தாங்கள் உரையாடியதாக தெரிவித்துள்ள பிரதமர் மோடி, இருநாடுகளும் முன்னுரிமை கொடுக்கவேண்டிய பிரச்னைகள், கொரோனா தொற்று, காலநிலை மாற்றம் மற்றும் இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் ஒத்துழைப்பு உள்ளிட்டவை குறித்து விவாதித்ததாகவும் பதிவிட்டுள்ளார்.
இதேபோல், அமெரிக்க துணைஅதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட கமலா ஹாரிசுக்கும் அன்பான வாழ்த்துக்களை தெரிவித்ததாக பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார். அவரதுவெற்றி, இந்திய-அமெரிக்க உறவுகளுக்கு மிகப் பெரிய பலமாக விளங்கும் என்றும், கமலா ஹாரிஸின் வெற்றி துடிப்பான இந்திய-அமெரிக்க சமூகத்தினருக்கு மிகுந்தபெருமை மற்றும் உத்வேகம் அளிப்பதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
கருத்தரிப்பு என்பது வியாதியில்லை. அது ஒரு உடல் ரீதியான மாற்றம். இதைச் ... |
எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு நல்ல குளிர்சியுண்டாகும். ... |
மனித உடலின் இடுப்புக்கு மேலே இருபுறமும் விலா எழும்புக் கூண்டுக்குள் மறைந்து இருப்பவை ... |