மேற்குவங்கம் 11 பேர் கொண்ட குழுவுடன் தயாராகும் பாஜக…

பீகார் மாநிலத்தில் ஆட்சியைக் கைப்பற்றியதை தொடர்ந்து அடுத்தஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களில் கவனம்செலுத்த ஆரம்பித்துள்ளது பாஜக.

2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தமிழகம், மேற்குவங்கம், அசாம், புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தல்நடைபெற உள்ளது. இதனைக் கருத்தில்கொண்டு பல்வேறு மாநிலங்களுக்குப் புதிய பொறுப்பாளர்களை, அண்மையில் பா.ஜ.க நியமித்தது. குறிப்பாக அதிக கவனம் செலுத்தவேண்டிய மாநிலமாக, மேற்கு வங்கத்தை பா.ஜ.க தேர்ந்தெடுத்துள்ளது. 16 உறுப்பினர்களை மட்டுமே மேற்கு வங்க சட்டசபையில் கொண்டுள்ள பா.ஜ.க கடந்தண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் மொத்தமுள்ள 42 இடங்களில் 18 இடங்களை கைப்பற்றி திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சியளித்தது. அங்கு கடந்த சில ஆண்டுகளில் மிகப்பெரிய வளர்ச்சியைப் பெற்றுள்ள பா.ஜ.க இம்முறை சட்டசபைத்தேர்தலில் மம்தாவுக்குப் போட்டியாக உருவெடுக்க முயன்று வருகிறது. எனவே இதற்காக மேற்குவங்க பாஜக பொறுப்பாளராக மூத்த தலைவர் கைலாஷ் விஜய் வர்கியாவை நியமித்தது பா.ஜ.க.

இந்நிலையில், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தேர்தலை எதிர்கொள்ளத் திட்டமிடவும், அதற்கான பணிகளை மேற்பார்வையிடவும், 11 பேர்கொண்ட குழு ஒன்றை அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. முழுவதும் முக்கியத் தலைவர்களை கொண்டு அமைக்கபட்டுள்ள, இந்தக்குழுவில் கட்சி பொதுச்செயலாளர்கள் கைலாஷ் விஜயவர்ஜியா மற்றும் துஷ்யந்த் கவுதம், சுனில் தியோதர், வினோத் தவ்தே, வினோத் சோன்கர், ஹரிஷ் திவேதி, அமித்மால்வியா, மாநிலத் தலைவர் அமித் சக்ரவர்த்தி ஆகியோர் இடம்பிடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பாஜகவின் திட்டப்படி, மேற்குவங்கத்தை ஐந்து மண்டலங்களாகப் பிரித்து, இந்தக்குழு தேர்தல் பணியாற்றும் என்றும், வேட்பாளர்தேர்வும் இக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையிலேயே இருக்கும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தக் குழுவை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பா.ஜ.க தேசியதலைவர் ஜே.பி நட்டா ஆகிய இருவரும் வழிநடத்த உள்ளதாகவும், இந்தக்குழுவில் உள்ள சில தலைவர்கள் கொல்கத்தாவில் ஏற்கனவே ஆலோசனைக்கூட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

முடி கருமையாக

நெல்லிக்காய் தினமும் ஒன்று சாபிட்டால் முடி கருமையாக வளரும். ஆலமரத்தின் இளம்பிஞ்சு ,வேர், காயவைத்து ...

துளசியின் மருத்துவக் குணம்

எந்த வகை விஷத்தையாவது, சாப்பிட்டு விட்டதாகத் தெரிந்தால், துளசி இலையைக் கொண்டு வந்து ...

ஆரைக்கீரை தரும் மருத்துவக் குணங்கள்

நான்கு இலைகளையும் ஒரு காலையும் கொண்டு நன்கு நீருள்ள இடங்களில் சிறப்பாக வளர்ந்து ...