பழங்கால வாகனங்கள் தொடர்பாக மத்தியமோட்டார் வாகன விதிகளில் திருத்தம்

பழங்கால வாகனங்கள் தொடர்பான மத்தியமோட்டார் வாகன விதிகளில் 1989, திருத்தம் கொண்டுவருவது தொடர்பாக, பொதுமக்களின் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் பெறுவதற்கான அறிவிப்பை, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம், நவம்பர் 25ம் தேதி வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்புமூலம், பழங்கால வாகனங்களின் பதிவை முறைப்படுத்த சாலை போக்குவரத்து அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. பாரம்பரியமிக்க பழையவாகனங்களின் பதிவை முறைப்படுத்த, தற்போது எந்தவிதிமுறையும் இல்லை. அதனால், மோட்டார்வாகன சட்டத்தில், பழங்கால வாகனங்களைப் பதிவு செய்வதற்கான துணைவிதிகள் 81, ஏ,பி,சி,டி,இ,எப்,ஜி என துணை விதிகளாக சேர்க்க உத்தேசிக்கப்பட்டுள்ளன.

இந்தவரைவு விதிகள்படி, பழங்கால(வின்டேஜ்) வாகனங்கள் என்றால் பதிவுசெய்து 50 ஆண்டுகளுக்கு மேலானவையாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வாகனத்தின் உடல் பகுதியிலும், இன்ஜினிலும் கணிசமான மாற்றம் இருக்ககூடாது.

நடைமுறை: பழங்கான வாகனங்களின் பதிவுக்கான விண்ணப்பங்களை பரிவாகன்(“PARIVAHAN”) இணைய தளத்திலேயே மேற்கொள்ளவேண்டும்.

* அனைத்து மாநில பதிவு ஆணையங்களும், பழங்கால வாகனங்கள் பதிவுக்கு தனிஅதிகாரியை நியமிக்க வேண்டும்.

* பழங்கால வாகனங்கள் பிரிவின் கீழ் பதிவுசெய்வதற்கு, வாகனம் தகுதியானதா என்பதை ஆய்வுசெய்ய மாநிலங்கள் குழு ஒன்றை அமைக்கவேண்டும்.

• அனுமதி வழங்கப் பட்டால், 10 இலக்கத்தில் ஆங்கில எழுத்துக்கள் மற்றும் எண்கள் ஒதுக்கீடு செய்யப்படும். இது 10 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும். ‘‘XX VA YY **’’ என்ற முறையில் எண்கள் ஒதுக்கீடு செய்யப்படும். இதில் XX என்பது மாநில குறியீட்டையும், VA என்பது பழங்கால வாகனத்தையும், YY என்பது இரண்டு எழுத்துதொடரையும், மீதமுள்ள 4 இலக்கங்கள் 0001 முதல் 9999 வரை இடம்பெறும்.

* புதிய பதிவுகட்டணம் ரூ.20,000. அதைத் தொடர்ந்த மறுபதிவு கட்டணம் ரூ.5,000.

* பழங்கால வாகனசட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டால், அந்த வாகனங்களின் மறுவிற்பனை அதே சட்ட விதிகளின்படி மேற்கொள்ளப்பட வேண்டும்.

* வாகன கண்காட்சி, எரிபொருள் நிரப்புவதற்கு மற்றும் பராமரிப்புபணிக்காக மட்டும் பழங்கால வாகனங்களை ரோட்டில் பயன்படுத்தவேண்டும்.

இதன் நோக்கம், இந்தியாவில் பழங்கால வாகனங்களைப் பாதுகாப்பதும், மேம்படுத்துவது ஆகும்.

இந்தவரைவு விதிகள் குறித்த ஆட்சேபணைகள், ஆலோசனைகள் மற்றும் கருத்துக்களை, மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகத்தின் மோட்டார்வாகன சட்ட இயக்குனருக்கு director-morth@gov.in என்ற இ-மெயில் முகவரியில் இந்தஅறிவிப்பு வெளியான 30 நாட்களுக்குள் அனுப்பலாம்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மாற்றம் வேண்டும் என்பதில் மக்க ...

மாற்றம் வேண்டும் என்பதில் மக்கள் உறுதி தமிழக பாஜக தலைவர் அண்ணா மலை என் மண், ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை த ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை தனது நண்பன் என கூறுகிறது ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை நண்பனாக கருதுகிறது’ என பிரதமா் ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வரு ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வருவது அசோக் சிங்ஹல் அயோத்தி என்றால் ஶ்ரீ ராமனுக்கு அடுத்து நினைவுக்குவருவது அசோக் ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்தநாடாக மாறும் என்று ...

111 பதக்கங்கள் என்பது சிறிய எண்ணி ...

111 பதக்கங்கள் என்பது சிறிய எண்ணிக்கை அல்ல ஆசியபாரா விளையாட்டில் இந்தியாபெற்ற 111 பதக்கங்கள் என்பது சிறிய ...

தேசியக் கொடி அவமதிப்பு திமுக ம ...

தேசியக் கொடி அவமதிப்பு  திமுக மன்னிப்பு கேட்க வேண்டும் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்திற்கு இந்திய தேசியக் கொடியை கொண்டு ...

மருத்துவ செய்திகள்

கொடிமுந்திரிப் பழத்தின் பயன்

கொடிமுந்திரியோ பழத்திற்குச் சுரம், அருசி, அதிக தாகம், உடல்புண்கள், இரைப்பு, கஷாயம், இரத்த ...

Down Syndrome என்றால் என்ன? அதைப் பற்றிய விழிப்புணர்வு எல்லோருக்கும் தேவையா ?

கண்டிப்பாக Down Syndrome பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு ...

ஆடாதொடையின் மருத்துவ குணம்

ஆடாதொடை இலையை தேவையான அளவு எடுத்து ஒரு சட்டிக்கு வேடுகட்டி, ஒரு டம்ளர் ...