மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் ஆயுஷ்மையங்களில் சிகிச்சை பெறும் திட்டத்துக்கு மத்திய சுகாதாரத் துறை ஒப்புதல் வழங்கியுள்ளது.
இதன்படி தனியார் ஆயுர்வேத, யோகா மற்றும் இயற்கை வைத்திய மையங்கள் மத்திய அரசின் சுகாதார திட்டகுழுவில் இணைக்கப்படும்.
இந்த மையங்களில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம். மக்களிடையே ஆயுஷ்சிகிச்சை முறைகள் பிரபலம் அடைந்து வருவதால், இந்த நடவடிக்கையை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் எடுத்துள்ளது.
முன்மாதிரி திட்டமாக முதலில் தில்லி மற்றும் தேசிய தலைநகர் மண்டலத்தில் உள்ள ஆயுஷ் சிசிச்சைமையங்கள், மத்திய அரசின் சுகாதார திட்ட குழுவில் ஓராண்டுக்கு இணைக்கப்படும். அதைத்தொடர்ந்து இத்திட்டத்தை மற்ற இடங்களுக்கு விரிவுபடுத்துவது குறித்து பரிசீலிக்கப்படும்.
சாதாரணமாக வேலை செய்கின்ற பெண்களுக்குத் தேவைப்படுகின்ற கலோரியை விட மாதமாய் இருக்கிற கர்ப்பிணிகளுக்கு ... |
நீரிழிவுநோய் உடையவர்களுக்குப் பல்வேறு காரணங்களால் திடீரென இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு குறைந்து விடும். ... |
அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டியவை: இனிப்பு சேர்க்கப்பட்ட பழ ரசங்கள்; பால் சம்பந்தப்பட்ட உணவுகள்; ... |