பாஜக சார்பில் வெற்றிவேல் யாத்திரையில் கொண்டு வரப்பட்ட ஐம்பொன் வேலை, திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோயில் உண்டியலில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் நேற்று காணிக்கையாக செலுத்தினார். யாத்திரை நிறைவுவிழா பொதுக்கூட்டம் இன்று (டிச.7) திருச்செந்தூரில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால்,போலீஸார் அனுமதி மறுத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழக பாஜக சார்பில் வெற்றிவேல் யாத்திரை கடந்த நவ.6-ம்தேதி திருத்தணியில் தொடங்கியது. இந்தயாத்திரை முருகப்பெருமானின் அறுபடைவீடுகள் வழியாக திருச்செந்தூரில் டிச.6-ம் தேதி நிறைவடையும் எனவும், டிச.7-ம் தேதி திருச்செந்தூரில் நிறைவுவிழா பொதுக்கூட்டம் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் நேற்று காலை திருச்செந்தூர் வந்து செந்திலாண்டவர் கோயிலில் சுவாமி தரிசனம்செய்தார். முன்னதாக வெற்றிவேல் யாத்திரையில் கொண்டுவந்த வேலுடன், அவர் தங்கியிருந்த ஹோட்டலில் இருந்து கோயிலுக்கு நடந்தே வந்தார். கோயிலில் சுவாமிதரிசனம் செய்த பிறகு, தங்க கொடிமரம் அருகில் உள்ள உண்டியலில், தான் கொண்டுவந்த ஐம்பொன்னால் ஆன சுமார் 3 அடி உயர வேலை காணிக்கையாக செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தமிழ் கடவுள் முருகனை போற்றும் கந்தசஷ்டி கவசத்தை மிகவும் அருவருக்கத்தக்க வகையில் திரித்துவெளியிட்டனர். இதை யாரும் கேள்வி கேட்கவில்லை. 4 பேரை தமிழக அரசு கைதுசெய்தது. கைது செய்யப்பட்ட செந்தில்வாசன் என்பவர் திமுகவின் ஐடி பிரிவில் வேலைசெய்ததாக கூறியுள்ளார். திமுகவும் அதை மறுக்கவில்லை. எனவே, இதன் பின்னணியில் இருப்பவர்கள் குறித்து தமிழ்மக்களுக்கு எடுத்துச் சொல்வதற்காக வேல்யாத்திரை தொடங்கப்பட்டது.
சுவாமிமலை, பழமுதிர்ச் சோலை, திருப்பரங்குன்றம் வழியாக திருச்செந்தூர்வந்து முருகப்பெருமானிடம் வேலை காணிக்கையாக செலுத்தி இருக்கிறேன். யாத்திரை நிறைவு நிகழ்ச்சி திருச்செந்தூரில் இன்று (டிச.7) நடக்கிறது. மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் கலந்துகொள் கிறார் என்றார்.
மரம் , செடி, கொடி, புல், பூண்டு என்று இயற்கையின் கொடையான அனைத்து ... |
ஆண்மைக் குறைவுள்ளவர்கள், வெள்ளை வெங்காயச் சாருடன் தேன் கலந்து இரண்டு, மூன்று வாரங்களுக்குக் ... |
இது சோற்றுக் கற்றாழைப் பால் ஆகும். இதைக் கரியாபோளம், சோம்பரம் என்ற பெயர்களால் ... |