ராஜஸ்தான் மாநில உள்ளாட்சித் தேர்தலில் பாஜக பெரும் வெற்றி

ராஜஸ்தான் மாநில உள்ளாட்சித்தேர்தலில் ஆளுங்கட்சியான காங்கிரஸுக்கு பெரும்பின்னடைவு ஏற்பட்டுள்ளது. மாநிலத்தின் 21 மாவட்ட ஊராட்சிகளில் 11 இடங்களில் பாஜக முன்னிலைவகிக்கிறது. காங்கிரஸுக்கு 5 மாவட்ட ஊராட்சிகள் மட்டுமே கிடைத்துள்ளன.

கடந்த நவம்பர் 23, நவ.27, டிசம்பர் 1, டிச.5 என 4 கட்டங்களாக ராஜஸ்தானில் ஜில்லாபரிஷத், பஞ்சாயத் சமிதி உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. 4,371 பஞ்சாயத்து சமிதி, 636 ஜில்லா சமிதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.

வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்றுவரும் நிலையில் பாஜக முன்னிலை பெற்றுள்ளது.

4371 வார்டுகளில் 1835 இடங்களை பாஜக கைப்பற்றியுள்ளது. காங்கிரஸ் 1718 வார்டுகளில் வெற்றிபெற்றுள்ளது. சுயேட்சைகள் 413 இடங்களில் வென்றுள்ளனர்.

இதுதொடர்பாக பாஜக தேசியத்தலைவர் ஜெ.பி.நட்டா தனது ட்விட்டர் பக்கத்தில், “ராஜஸ்தான் பஞ்சாயத்து ராஜ், ஜில்லாபரிஷத் தேர்தலில் கிராமப்புற வாக்காளர்கள், விவசாயிகள், பெண்கள் என அனைவரும் எங்கள்மீது நம்பிக்கை வைத்து வாக்களித்துள்ளனர்.

இந்தவெற்றி கிராமப்புற மக்கள், ஏழைகள், விவசாயிகள், தொழிலாளர்கள் பிரதமர் மோடி மீது கொண்டுள்ள நம்பிக்கையின் அடையாளம்” என பதிவிட்டுள்ளார்.

இந்த உள்ளாட்சித்தேர்தல் முடிவு முன்னாள் பாஜக தலைவர் ஹனுமான் பேனிவாலின் ராஷ்டிரிய லோக் தந்திரிக் கட்சிக்கு குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்றுத்தந்ததுள்ளது.

பாஜக கூட்டணிக் கட்சியான இக்கட்சி 56 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. நகாவூர் பகுதியில் ஹனுமன் பேனிவால் கிங்மேக்கர் என அறியப்படுபவர்.

உள்ளாட்சித் தேர்தலில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 16, பகுஜன் சமாஜ்கட்சி 3, தேசியவாத கட்சி 1 இடத்திலும் வென்றுள்ளன.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பிஎம் விஸ்வகர்மா திட்டம் தொடங் ...

பிஎம் விஸ்வகர்மா திட்டம் தொடங்கப்பட்டது பிஎம் விஸ்வகர்மா திட்டத்தை பிரதமர் நரேந்திரமோடி டெல்லியில் நேற்று ...

இந்தியாவின் கலாசாரத்தின் மீது ...

இந்தியாவின் கலாசாரத்தின் மீது தாக்குதல் சுவாமி விவேகானந்தர், லோக்மான்ய திலகருக்கு உத்வேகம்அளித்த சனாதன தர்மத்தை ...

யாத்திரையை திசை திருப்பும் திம ...

யாத்திரையை  திசை திருப்பும் திமுக தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலையின் "என் மண், என் ...

ஏ.ஆர்.ரஹ்மான் தமிழகத்தின் சொத்த ...

ஏ.ஆர்.ரஹ்மான் தமிழகத்தின் சொத்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தமிழகத்தின் சொத்து. அவரைவைத்து அரசியல் செய்யக்கூடாது ...

மோடியின் மேக் இன் இந்தியா சிறப் ...

மோடியின் மேக் இன் இந்தியா சிறப்பு; மோடி பாராட்டு இந்திய பிரதமர், ‘இந்தியாவில் தயாரிப்போம்’ என்ற ஒரு செயல்திட்டத்தை ...

சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்க ...

சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்து கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும் நாட்டில் சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்து கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும் ...

மருத்துவ செய்திகள்

மகிழம் பூவின் மருத்துவக் குணம்

மகிழம் பூ குடி தண்ணீர் மகிழம் பூவைச் சுத்தம் பார்த்து எந்தக் கிருமியும் இல்லாமல் ...

செம்பரத்தையின் மருத்துவக் குணம்

செம்பரத்தை பூவை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைக்குத் தடவிவரத் தலைமுடி நன்கு நீண்டு வளரும்.

அதிக சப்தத்துடன் குறட்டை ஆரோக்கியத்துக்கு கேடு

அதிக சப்தத்துடன் குறட்டை விட்டு தூங்குபவர்களை பார்க்கும் போது, நிம்மதியாகத் தூங்கிறார் என்று ...