மேற்குவங்கத்தில் பாஜக தேசிய தலைவா் ஜெ.பி.நட்டா சென்றவாகனம் மீது சிலா் கற்களை வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மேற்கு வங்க டிஜிபி மற்றும் தலைமைச் செயலருக்கு மத்திய உள்துறை அமைச்சகம் சம்மன் அனுப்பியுள்ளது.
மேற்குவங்க தலைமைச் செயலாளரும், காவல்துறை டிஜிபியும், விரைவில் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு வரவழைக்கப்பட்டு, அரசியல் வன்முறை மற்றும் இதர குற்றங்களைத் தடுக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் மற்றும் மாநிலத்தில் சட்டம் ஒழுங்குநிலவரம் குறித்து விளக்கம் அளிக்க வேண்டியதிருக்கும் என்று கூறப்படுகிறது.
மேற்கு வங்க மாநிலத்தில் சட்டம் – ஒழுங்கு நிலைமைகுறித்து ஆளுநர் ஜக்தீப் தன்கரின் அறிக்கை, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு இன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால், மேற்கு வங்க மாநிலத்தில் பாஜக தேசியத்தலைவர் நட்டாவின் வருகையின்போது பாதுகாப்புக் குறைபாடு ஏற்பட்டது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் எழுப்பிய கேள்விகளுக்கு இதுவரை மாநில அரசுதரப்பில் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.
இந்தத் தாக்குதலுக்கு ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியை பாஜக குற்றம்சாட்டியுள்ளது. இந்தத்தாக்குதலில், குண்டு துளைக்காத கண்ணாடி பொருத்திய காரில் சென்ற ஜெ.பி.நட்டா பாதிப்பு இன்றி தப்பியபோதும், அவருடன் சென்ற பிற பாஜக தலைவா்களின் காா் கண்ணாடிகள் உடைந்ததோடு, சிலா்காயமும் அடைந்தனா்.
பன்றிக்காய்ச்சல் இன்புளூயன்சியா எச்1 என் 1 என அழைக்கப்படுகிறது. இதில் மூன்று வகை ... |
சின்னம்மைக்கு காரணம் 'வேரிசெல்லா' என்கிற வைரசாகும், இது காற்றின் மூலம் பரவ கூடியது. ... |
காய்ச்சல் அகற்றியாகவும், பசி உண்டாக்கியாகவும், தாது பலம் உண்டாக்கியாகவும் செயல்படுகிறது. |
2backgammon