திரிணமுல் காங்கிரசிலிருந்து ஓடும் எம்.எல்.ஏ.,க்கள்

மே.வங்கத்தில் ஆளும்திரிணமுல் காங்கிரசிலிருந்து இரண்டுதலைவர்கள் விலகிய நிலையில், மற்றொரு எம்எல்ஏ., கட்சியில் இருந்து விலகியுள்ளார்.

மே.வங்க மாநிலத்தில் விரைவில் சட்டசபைதேர்தல் நடைபெற உள்ளது. திரிணமுல் காங்கிரஸ், பா.ஜ., உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக தயாராகிவருகின்றன. இந்நிலையில், திரிணமுல் காங்கிரசில் இருந்து சுவேந்து அதிகாரி மற்றும் ஜிதேந்திர திவாரி ஆகியோர் விலகினர். தங்களது விலகலுக்கான கடிதத்தை, கட்சிதலைவரும் முதல்வருமான மம்தா பானர்ஜியிடம் வழங்கியுள்ளனர்.

இன்னும் சிலநாட்களில் அமித்ஷா மேற்கு வங்கத்திற்கு செல்ல உள்ளார். அப்போது, இருவரும் , அமித்ஷா முன்னிலையில் பா.ஜ.,வில் இணைவார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது. அதில் சுவேந்து அதிகாரி, கடந்த 2016 சட்டசபை தேர்தலில் திரிணமுல் காங்கிரஸ் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியவர் . அக்கட்சியின் உள்ளூர் தலைவர்கள் 50 பேர் இவரின் கட்டுப்பாட்டில் உள்ளனர் என தெரிகிறது. மம்தாவின் உறவினர் அபிஷேக் பானர்ஜியுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக அவர் கடந்தமாதம் அமைச்சர் பதவியில் இருந்து விலகினார். பின்னர் கட்சியில் இருந்தும் விலகினார். இன்னும் சில அதிருப்தியாளர்கள், ஆளுங்கட்சியில் இருந்துவிலகி பா.ஜ.,வில் இணையக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், திரிணமுல் காங்கிரஸ்கட்சி எம்எல்ஏ., ஷில்பத்ரா தத்தாவும் கட்சியிலிருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்கள் உள்ள நிலையில், 2 நாளில் 3 எம்எல்ஏ.,க்கள் அடுத்தடுத்து விலகியது திரிணமுல் காங்கிரசுக்கு சிக்கலை ஏற்படுத்தி யுள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவு நோய் குறைந்த அளவு கலோரி தரும் உணவை சாப்பிட்டுவந்தால் குணமாகிவிடும்

உலகம் எங்கும் நீரிழிவு நோய் மக்களை பெரிய அளவில் வாட்டி வதக்கி வருகிறது ...

தலைவலி குணமாக

விரவி மஞ்சளை விளக் கெண்ணையில் முக்கி விளக்கில் காட்டி சுட்டு அதன் புகையை ...

நிலவேம்புவின் மருத்துவக் குணம்

காய்ச்சல் அகற்றியாகவும், பசி உண்டாக்கியாகவும், தாது பலம் உண்டாக்கியாகவும் செயல்படுகிறது.