பார்லிமென்ட் வளாகத்தில் இண்டியா கூட்டணி போராட்டம் புறக்கணித்தது சமாஜ்வாதி

பார்லிமென்ட் வளாகத்தில், இன்றும் (டிச.,05) இண்டியா கூட்டணிக்கட்சியை சேர்ந்த எம்.பி.,க்கள் போராட்டம் நடத்தினர்.

பார்லிமென்ட் குளிர்காலகூட்டத்தொடர் நவம்பர் 25ம் தேதி துவங்கியது. கூட்டம் துவங்கி முதல் நாளில் இருந்து, எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று (டிச.,03) காலை 11 மணிக்கு இரு அவைகளும் கூடின. லோக்சபாவில் எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். சபாநாயகர் ஓம் பிர்லா அமைதி காக்கும் படி, பலமுறை எச்சரித்தார்.

எதிர்க்கட்சிகள் எம்.பி.,க்கள் துளிஅளவும் கூட கண்டுகொள்ளாமல், தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதனால், அவையை மதியம் 2 மணி வரை ஒத்திவைத்து ஓம்பிர்லா உத்தரவிட்டார். அதேநேரத்தில், எதிர்க்கட்சிகள் அமளி காரணமாக, ராஜ்யசபா மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

இதற்கிடையே, பார்லிமென்ட் வளாகத்தில், காங்கிரஸ் எம்.பி.,யும், எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் மற்றும் இண்டியா கூட்டணிக் கட்சியை சேர்ந்த எம்.பி.,க்கள் போராட்டம் நடத்தினர். அதானி விவகாரத்தில் பார்லி., கூட்டுக்குழு விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் எனஎதிர்க்கட்சி எம்.பி.,க்கள் வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தில், சமாஜ்வாதி, திரிணமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி.,க்கள் பங்கேற்கவில்லை.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நாம் விழித்தால் கலப்படத்தை முழ ...

நாம் விழித்தால் கலப்படத்தை முழுமையாக நீக்கலாம் – அண்ணாமலை ''கலப்பட பொருள் இருந்தால், கடைக்காரரிடம் நாம் கேள்வி எழுப்ப ...

இந்தியாவில் விமான பயணம் செய்வோ ...

இந்தியாவில் விமான பயணம் செய்வோர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு உள்நாட்டு விமான போக்குவரத்து சந்தையில் சிறப்பான வளர்ச்சியை பெற்றுள்ள ...

சீனா செல்கிறார் வெளியுறவு செயல ...

சீனா செல்கிறார் வெளியுறவு செயலர் மத்திய வெளியுறவு அமைச்சக செயலர் விக்ரம் மிஸ்ரி, வரும் ...

குடியரசு தின விழாவில் பங்கேற்க ...

குடியரசு தின விழாவில் பங்கேற்க இந்தோனேசியா அதிபர் இந்தியா வந்தார் டில்லியில் நடக்கும் நாட்டின் 76வது குடியரசு தின விழாவில் ...

கொள்கை ரீதியான திட்டங்களை 10 ஆண் ...

கொள்கை ரீதியான திட்டங்களை 10 ஆண்டுகளில் நிறைவேற்றிவிட்டோம் – அமித் ஷா ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது ...

டங்ஸ்டன் ஏலம் ரத்து : மக்களின் க ...

டங்ஸ்டன் ஏலம் ரத்து : மக்களின் கோரிக்கையை ஏற்றது மத்திய அரசு உள்ளூர் மக்களின் கோரிக்கையை ஏற்று, மதுரை அருகே அமைய ...

மருத்துவ செய்திகள்

மாதுளையின் மருத்துவக் குணம்

மார்புவலியைத் தணித்து, இதயத்திற்கு ஊட்டமளிப்பது மாதுளை. வயிற்று எரிச்சலை உடனடியாக குணப்படுத்துகிறது மாதுளைச் ...

உடற்பயிற்சியின் அவசியம்

கொழுப்புச்சத்தைக் குறைத்து உடலை சிக்கென்று ராணுவ வீரர் போல ஆக்க வேண்டுமா? ஜிம்முக்கு ...

வாய் துர்நாற்றம் குணமாக

எலுமிச்சை அளவு கொத்தமல்லி தழைகளை சுத்தம் செய்து வாயில் போட்டு மென்று 5 ...