மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஜனவரி 14ஆம் தேதி மீண்டும் சென்னைவருகிறார். இது பாஜக தொண்டர்கள் மத்தியில் மீண்டும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் வருகையின்போது அதிமுக-பாஜக இடையே தொகுதி உடன்பாடு இறுதிசெய்ய வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சிலமாதங்களே இருப்பதால், தமிழக அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தலை சந்திப்பதற்கு தமிழக அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. எந்தகட்சியுடன் கூட்டணி அமைப்பது என்பது தொடர்பான வியூகங்களும், காய்நகர்த்தல்களும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அதிமுக-பாஜக கூட்டணி வரும் சட்டமன்றத் தேர்தலிலும் தொடரும் என்பது உறுதியாகி இருக்கிறது. அதேபோல் முதல்வர் வேட்பாளர் சர்ச்சை இருகட்சிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதற்கு தீர்வுகாணும் வகையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா வரும் ஜனவரி 14ஆம் தேதி முக்கிய முடிவெடுப்பார் என கூறப்படுகிறது.
ரஜினி அரசியல் களத்திற்கு வருவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தநிலையில், ஏற்கனவே நவம்பர் 21 ஆம் தேதி அமித்ஷா சென்னைவந்தார். தற்போது ரஜினி அரசியல் முடிவு பாஜக மற்றும் அவரது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில், அமித்ஷாவின் தமிழகவருகை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. அவர் அதிமுக-பாஜக இடையே தொகுதி உடன்பாடு இறுதிசெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் சட்டசபை தேர்தல் குறித்து பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அப்போது நடிகர் ரஜினிகாந்த் உடல் நலம்குறித்தும் அவர் விசாரிக்க வாய்ப்பு உள்ளது எனவும் கூறப்படுகிறது.
குளிர்ச்சியின் காரணத்தால் ஏற்படும் சுரம், இருமல், அஜீரணத்தால் ஏற்படும் தொல்லைகள், வயிற்று உப்பிசம், ... |
கீரைகளில் உப்புச் சத்துக்களும், உலோகச் சத்துக்களும், வைட்டமின் என்னும் உயிர்ச் சத்துக்களும் உள்ளன. ... |
முருங்கைக் காய் மலச்சிக்கலை சரி செய்யும் . வயிற்றுப் புண்ணை போக்கும் மேலும் ... |