அயோத்தி ராமர்கோயில் கட்டுமானத்துக்கு குடியரசு தலைவர் 5 லட்சம் நன்கொடை

அயோத்தி ராமர்கோயில் கட்டுமான பணிகளை மேற்கொள்ள 5 லட்சத்து 100 ரூபாயை குடியரசு தலைவர் ராம்நாத்கோவிந்த் நன்கொடையாக அளித்துள்ளார்.

உத்தரப் பிரதேசத்திலுள்ள அயோத்தியில் அமையவுள்ள ராமர் கோயிலுக்குக் கடந்தாண்டு ஆகஸ்ட் 5ம் தேதி பிரதமர் நரேந்திரமோடி அடிக்கல் நாட்டினார். கொரோனா பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு இடையே இந்நிகழ்ச்சி நடைபெற்றது

சுமார் 161 அடி உயரத்தில் அமையவுள்ள இந்த ராமர்கோயில், மூன்று தளங்களையும் 318 தூண்களையும் கொண்டிருக்கும் வகையில் வடிவமைக்க பட்டுள்ளது. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவுசீக்கிரம் கட்டுமான பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது

இந்நிலையில், கோயில் கட்டுமானத்திற்கு தேவையான நிதியைச்சேகரிக்கும் பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன. இதற்காக ஸ்ரீ ராம் ஜன்மபூமி அறக்கட்டளை சார்பில், அதன் இணைத்தலைவர் கோவிந்த் தேவ் கிரிஜி மகாராஜ் இன்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்தார்.

அவருடன் வி.எச்.பி. அமைப்பின் செயல்தலைவர் அலோக் குமார், கோயில் கட்டுமான குழுவின் தலைவர் நிருபேந்திர மிஸ்ரா உள்ளிட்டவர்களும் இருந்தனர். இந்நிலையில், கோயில் கட்டுமானத்திற்கு குடியரசு தலைவர் ராம்நாத்கோவிந்த் 5 லட்சத்து 100 ரூபாயை நன்கொடையாக அளித்தார்.

பிகார் தலைநகர் பாட்னாவில் நிதிசேகரிக்கும் பணி தொடங்கப்பட்டது. அப்போது பேசிய பாஜகவின் சுஷில்குமார் மோடி, “பிகாரில் உள்ள ஒவ்வொரு இந்து குடும்பமும் ராமர் கோயிலுக்கு தங்களால் முடிந்த பங்களிப்பை அளிக்கும் என்று நம்புகிறேன். கோயிலுக்கு எவ்வளவு நிதி தேவைப்பட்டாலும், மக்களின் ஒத்துழைப்புடன் அதை எங்களால் சேமிக்கமுடியும் என்று நான் நம்புகிறேன்” என்றார்.

மாற்று மதத்தினருக்கு ராமர் கோயிலுக்கு நிதி அளிக்கலாமா என்று செய்தியாளர் கேள்விக்கு பதிலளித்தவர், “தாராளமாக அளிக்கலாம். ஆனால் ஒருமசூதி கட்டப்படுகிறது என்றால் அங்கிருக்கும் இஸ்லாமியர்களே அதிக பங்களிப்பை அளிப்பார்கள். அதேபோல ராமர் கோயிலுக்கு இந்துக்கள் அதிகளவில் பங்களிப்பை தரவேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்” என்றார்.

கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அயோத்தியில் ராமர்கோயிலை கட்ட உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது. அதைத்தொடர்ந்து ராமர் கோயிலுக்கான திட்டம் தீட்டப்பட்டு, அடிக்கல் நாட்டப்பட்டது. கோயில் கட்டுமானத்திற்கு தேவையான நிதிதிரட்ட 10, 100 மற்றும் 1000 ரூபாய் டோக்கன்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக்க பாஜக உறுதிபூண்டுள்ளது மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை திரும்பக் கொண்டு வருவதற்காக ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

மருத்துவ செய்திகள்

கல்யாண முருங்கை

முள்முருக்கு, முள்முருங்கை என அழைக்கப்படும் கல்யாண முருங்கை முழுவதும் முட்களைக் கொண்ட மென்மையான ...

நீரிழிவுநோய் உடையவர்களுக்கு உணவு முறை

நீரிழிவுநோய் உடையவர்களுக்கு இந்த அட்டவணையில் சில மாற்றங்களைச் செய்து கொள்ள வேண்டும். அதற்கு ...

உடல் உறுப்புகளின் சீனக் கடிகாரம்

சீன தேசத்தில் தோன்றிய அக்குபஞ்சர் மருத்துவத்தில் கூறியபடி மனித உடலில் உள்ள முக்கியமான ...