இம்முறை, இந்தியாவின் பட்ஜெட்டில், வளர்ச்சியில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது என கூறி, பட்ஜெட் அறிவிப்புகளை வரவேற்றுள்ளது, பன்னாட்டு நிதியம்.
இதுகுறித்து, பன்னாட்டு நிதியத்தின் தகவல்தொடர்பு இயக்குனர் ஜெர்ரி ரைஸ் கூறியதாவது: இந்தியாவின் பட்ஜெட், வளர்ச்சியில் மிகுந்தகவனம் செலுத்தி உள்ளது. குறிப்பாக, ஆரோக்கியம், கல்வி, பொது உள்கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்தப் பட்டுள்ளது.இவை முழுமையாக அமல்படுத்தப் பட்டால், இந்தியாவின் வளர்ச்சி மேலும் வலுவானதாக அமையும்.
பட்ஜெட்டில், உணவு மானியங்களை சேர்ப்பதன்மூலம், நிதி வெளிப்படை தன்மையை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதையும் நாங்கள் வரவேற்கிறோம். அதேபோல், நிதித்துறையை மேலும் வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம், மேலும், அதுகுறித்த நடவடிக்கைகளின் விபரங்களை எதிர்பார்க்கிறோம். இவ்வாறு, அவர் கூறினார்.
கொடிமுந்திரியோ பழத்திற்குச் சுரம், அருசி, அதிக தாகம், உடல்புண்கள், இரைப்பு, கஷாயம், இரத்த ... |
நாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் ஒரு பிடி வீதம் எடுத்து மண் சட்டியிலிட்டு ... |
இது சோற்றுக் கற்றாழைப் பால் ஆகும். இதைக் கரியாபோளம், சோம்பரம் என்ற பெயர்களால் ... |