பட்ஜெட் புதிய உத்வேகத்தை கொடுக்கும் – பிரதமர் மோடி

இந்த பட்ஜெட் மக்களுக்கு புதிய உத்வேகத்தை அளிக்கும் என நம்புகிறேன் என பார்லி வளாகத்தில் நிருபர்கள் சந்திப்பில் பிரதமர் மோடி தெரிவித்தார்.

பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று துவங்கியது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டு கட்டங்களாக நடக்க உள்ளது. முதற்கட்டம், பிப்., 13ல் முடிகிறது. மார்ச் 10ல் துவங்கும் இரண்டாம் கட்ட கூட்டத்தொடர், ஏப்., 4 வரை நடக்க உள்ளது. கூட்டத்தொடரில் பங்கேற்க வந்த பிரதமர் மோடி பார்லி வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

ஏழைகள், நடுத்தர மக்களுக்கு செல்வங்களை வழங்கும்படி லட்சுமியை வேண்டுகிறேன். ஏழைகள், நடுத்தர வர்க்கத்தினருக்கு அன்னை லட்சுமி தேவியின் அருள் கிடைக்க வேண்டும். மகாலட்சுமி வெற்றியையும், விவேகத்தையும் தருபவர். பட்ஜெட் தாக்கலுக்கு முன் அன்னை லட்சுமியை வழிபட்டு விட்டு வருகிறேன். 3வது முறையாக, சேவையாற்ற நாட்டு மக்கள் வாய்ப்பு அளித்துள்ளனர். இந்த பட்ஜெட் மக்களுக்கு புதிய உத்வேகத்தை அளிக்கும் என நம்புகிறேன்.

மூன்றாவது முறை ஆட்சியில் பா.ஜ., அரசு தாக்கல் செய்யும் முதல் முழு பட்ஜெட். புத்தாக்கத்துக்கான பட்ஜெட் ஆக இருக்கும். அனைவருக்குமான திட்டங்கள் இந்த பட்ஜெட்டில் இடம் பெறும். மக்களின் மேம்பாட்டிற்காக நாள்தோறும் பணியாற்றி வருகிறேன். 3வது முறை ஆட்சி காலத்தில் போர்க்கால அடிப்படையில் பணியாற்றி வருகிறோம். பட்ஜெட் கூட்டத் தொடரில் ஏராளமான மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளன. பல வரலாற்று சிறப்பு மிக்க மசோதாக்கள் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது.

மத்திய, மாநில அரசுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். மக்களின் மேம்பாட்டுக்காக தொடர்ந்து பாடுபடுவோம். செயல்பாடு, மாற்றம் என்பது தான் எங்களின் தாரக மந்திரம். மகளிர் முன்னேற்றத்திற்காக பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன. 2047 ல் வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற கனவை நிறைவேற்ற பட்ஜெட் கூட்டம் வழிகாட்டும். நாளை தாக்கலாகும் மத்திய பட்ஜெட் நாட்டின் வளர்ச்சியை மேலும் உறுதி செய்யும். இந்தியாவின் வளர்ச்சிக்கு அனைத்து எம்.பி.,களும் பங்களிப்பார்கள் என நம்புகிறேன். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தமிழ் மொழியை வியாபாரமாக பயன்பட� ...

தமிழ் மொழியை வியாபாரமாக பயன்படுத்தும் திமுக தமிழ் மொழியை வியாபாரமாகவும், அரசியல் செய்யவும் மட்டுமே, தி.மு.க., ...

அமித்ஷாவுக்கு பாஜக தலைவர் நன்ற� ...

அமித்ஷாவுக்கு பாஜக தலைவர் நன்றி தெரிவித்துள்ளார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேற்று முன்தினம் பா.ஜ., ...

140 கோடி மக்களின் நம்பிக்கை – பி� ...

140 கோடி மக்களின் நம்பிக்கை – பிரதமர் மோடி பெருமிதம் 'மஹா கும்பமேளா நிகழ்ச்சி நிறைவடைந்தது. 140 கோடி இந்தியர்கள் ...

ரஷ்யா செல்கிறார் பிரதமர் மோடி

ரஷ்யா செல்கிறார் பிரதமர் மோடி இரண்டாம் உலகப்போரின் 80ம் ஆண்டு வெற்றி விழா கொண்டாட்டத்தில் ...

தொகுதி மறுசீரமைப்பு பற்றி ஸ்டா ...

தொகுதி மறுசீரமைப்பு பற்றி  ஸ்டாலின் சொல்வது பொய் – அமித்ஷா குற்றச்சாட்டு 'லோக்சபா தொகுதி மறுசீரமைப்பு பற்றி தமிழக முதல்வர் ஸ்டாலின் ...

2026-ல் திமுகவை வீட்டுக்கு அனுப்ப� ...

2026-ல் திமுகவை வீட்டுக்கு அனுப்புவது உறுதி – அண்ணாமலை 'தமிழகத்தில் நீங்கள் என்ன குட்டிக்கரணம் போட்டாலும், 2026ல் நீங்க ...

மருத்துவ செய்திகள்

உடல் பலம் பெற

100 எறுக்கம் பூக்களை எடுத்து அதை நன்றாக உலர்த்தி, லவங்கம், சாதிக்காய், சாதிப்பத்திரி ...

கருத்தரித்த முதல் 3 மாதங்களில் என்ன செய்யலாம், என்ன செய்யக் கூடாது ?

கருத்தரிப்பு என்பது வியாதியில்லை. அது ஒரு உடல் ரீதியான மாற்றம். இதைச் ...

ஆடுதீண்டாப்பாளையின் மருத்துவக் குணம்

சிலந்திப்பூச்சி விஷம், கருங்குஷ்டம், கரப்பான், ரோகம் இவை ஆடுதீண்டாப்பாளை மூலம் குணமாகும். உடல்பலம் ...