பிரதமரின் உறவே ஆனாலும் இல்லை சலுகை

குஜராத்மாநிலம் ஆமதாபாத் மாநகராட்சி தேர்தலில், போட்டியிட விரும்பி. பிரதமர் மோடியின் சகோதரர்மகள் சோனல் மோடி தாக்கல் செய்த மனுவை,கட்சி தலைவர்களின் உறவிர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படாது என்ற புதியவிதியை காரணம் காட்டி, பா.ஜ., நிராகரித்துவிட்டது.

பிரதமர் மோடியின் சகோதரர் பிரஹலாத்மோடி. இவர், நியாய விலைகடை வைத்துள்ள இவர், குஜராத்தில் உள்ள நியாயவிலை கடைகள் சங்கத்தின் தலைவராகவும் உள்ளார். இவரது மகள், சோன்மோடி. இவர், விரைவில் நடைபெற உள்ள ஆமதாபாத் மாநகராட்சி தேர்தலில், போடக்தேவ் வார்டில் இருந்து போட்டியிட சீட் கேட்டிருந்தார். ஆனால், சமீபத்தில், வேட்பாளர் பட்டியலை பா.ஜ., வெளியிட்டது. இதில் சோனல் பெயர் இடம்பெறவில்லை. எந்தவார்டிலும் போட்டியிட அவருக்கு வாய்ப்பு வழங்கபடவில்லை. இதற்கு, வரும்தேர்தலில் போட்டியிட, கட்சி தலைவர்களின் உறவினர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படாது என்ற விதிமுறை காரணமாக தெரிவிக்கபட்டுள்ளது.

இதுதொடர்பாக பா.ஜ., மாநில தலைவர் சி.ஆர்.பாட்டீல் கூறுகையில், வரும் தேர்தலில் கட்சி தலைவர்களின் உறவினர்களுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாது என விதிமுறை வகுக்கப்பட்டது. விதிமுறைகள் அனைவருக்கும் சமம்தான். இவ்வாறு அவர் கூறினார்.

சோனல்மோடி கூறுகையில், பா.ஜ., தொண்டர் என்ற அடிப்படையில்தான் வாய்ப்பு கேட்டேன். பிரதமரின் உறவினர் என்பதற்காக வாய்ப்பு கிடைக்கவில்லை. வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும், வழக்கமான கட்சிதொண்டராகவே செயல்படுவேன். இவ்வாறு அவர் கூறினார்.

பிரஹலாத் மோடி கூறுகையில், எனது குடும்ப உறுப்பினர்கள், விருப்பமான முடிவை எடுக்க சுதந்திரம் உள்ளது. எனது குடும்பத்தினர் பிரதமர் மோடியின் பெயரை பயன்படுத்த வில்லை. அதனை பயன்படுத்தி எந்த சலுகையையும் அனுபவிக்கவில்லை. நாங்கள் சொந்தமாக உழைத்துவாழ்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஸ்டிக்கர் ஒட்டும் கனிமொழி

ஸ்டிக்கர் ஒட்டும் கனிமொழி குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் மத்தியஅரசின் திட்டத்துக்கு, கனிமொழி ...

அயோத்திக்கு 34 சிறப்பு ரயில்… ம ...

அயோத்திக்கு 34 சிறப்பு ரயில்… மொத்த செலவும் மத்திய அரசே உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் கடந்தமாதம் ராமர் கோயில் திறக்கப்பட்டது. ...

அரசியலுக்காக பேசும் பேச்சுக்க ...

அரசியலுக்காக பேசும் பேச்சுக்கள் வலியை ஏற்படுத்துகிறது இந்தியாவை வளர்ந்த நாடாக்க பிரதமர் மோடி சபதம் ஏற்றுள்ளார். ...

கட்சியில் வாரிசுகள் இருக்கலாம ...

கட்சியில் வாரிசுகள் இருக்கலாம்.  கட்சியே வாரிசுகள் கையில் இருப்பது ஆபத்து லோக்சபா தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 400 இடங்களில் ...

எங்கள் குழந்தை ராமர் இனி கூடாரங ...

எங்கள் குழந்தை ராமர் இனி கூடாரங்களில் வசிக்க மாட்டார் ராமச்சந்திர மூர்த்திக்கு ஜெயம் உண்டாகட்டும் ராமச்சந்திர மூர்த்திக்கு ஜெயம் உண்டாகட்டும் வணக்கத்திற்குரிய ...

பாகுபாடு, திருப்தி படுத்தும், அ ...

பாகுபாடு,  திருப்தி படுத்தும், அரசியல் பிரச்சனைகளை வளர்த்தது நம்பாரதம் 1,500 ஆண்டுகளாக அன்னியரை எதிர்த்து போராடியது வரலாறு. ...

மருத்துவ செய்திகள்

முகத்தில் எண்ணெய் வழிவதை தடுக்க

வெள்ளரி காயை, தினசரி காலையில் எழுந்ததும் முகத்தில் தேய்த்துவர முகத்தில் அதிகமாக எண்ணெய் ...

வாய் துர்நாற்றம் குணமாக

எலுமிச்சை அளவு கொத்தமல்லி தழைகளை சுத்தம் செய்து வாயில் போட்டு மென்று 5 ...

ஆண்மையை அதிகமாக்கும் வழிகள்

அரைக்கீரை 100 கிராம் –மிளகு 10 கிராம், கொத்தமல்லி இலை 50 கிராம், ...