கல்யாணராமன் குண்டர் சட்டத்தில் கைது கண்டிக்கத்தக்கது

நபிகள் நாயகம் பற்றி அவதூறாக பேசியதாக கூறி கைது செய்யப்பட்ட பாஜக நிர்வாகி  கல்யாணராமன் குண்டர் சட்டத்தில் கைது செய்யப் பட்டுள்ளார். இது கண்டிக்கத்தக்கது.

சில இஸ்லாமிய தலைவர்கள் மேட்டுப்பாளையத்தில் நடந்த நிகழ்ச்சியில் இந்து கடவுள்களை கடுமையாக விமர்சித்து பேசியதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக சார்பில் மேட்டுப்பாளையத்தில் ஜனவரி 31ம் தேதி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது அக்கட்சியின் நிர்வாகி கல்யாணராமன் நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரைக் கண்டித்து தமிழகம் முழுவதும் இஸ்லாமிய அமைப்பினர் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.

இதையடுத்து கைது செய்யப்பட்ட அவர் ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் இவரை குண்டர் சட்டத்தின்கீழ் அடைக்க வேண்டும் என்று கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அர.அருளரசு, மாவட்ட ஆட்சியர் கு.ராசா மணியிடம் பரிந்துரைத்திருந்தார். இதன்பேரில் பாஜக நிர்வாக கல்யாணராமனை குண்டர் சட்டத்தின் கீழ் அடைக்க மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி வியாழக்கிழமை உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவின் நகல், ஈரோடு சிறையில் உள்ள கல்யாணராமனிடம் அளிக்கப்பட்டது.ஆனால் இந்துக்கடவுள்களை ஆண்டாண்டு காலமாக விமர்சித்து வருபவர்களுக்கு என்னதான் தண்டனை.

One response to “கல்யாணராமன் குண்டர் சட்டத்தில் கைது கண்டிக்கத்தக்கது”

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

அல்லிப் பூவின் மருத்துவக் குணம்

அல்லிப் பூ குளிர்ச்சி உள்ளது. உடலுக்கும் குளிர்ச்சியைத் தரவல்லது. எனவே உடலில் காணும் ...

கீரையில் இருக்கும் சத்துக்கள் வீணாகாமல் அப்படியே கிடைக்க

கீரையில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் வீணாகாமல் அப்படியே முழுமையாக கிடைக்க, முதலில் கீரைகளை ...

பீட்ரூட்டின் மருத்துவக் குணம்

பீட்ரூட் சாறு புற்றுநோய்க்கு கொடுத்தால் குணமாகிவிடும். பீட்ரூட்டில் மேலும் பல மருத்துவ பயன்கள் ...