வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர்வரையிலான புதிய மெட்ரோ ரயில்சேவையை பிரதமர் நரேந்திரமோடி தொடக்கிவைத்தார்.
ரூ.3,370 கோடி மதிப்பில் கட்டிமுடிக்கப்பட்ட மெட்ரோ ரயில் பகுதி-1 விரிவாக்க சேவையை பிரதமர் மோடி காணொலி வாயிலாக இன்று (பிப்.14) தொடக்கிவைத்தார்.
9.06 கிலோ மீட்டர் மெட்ரோ வழித்தடம் வடசென்னையை சென்ட்ரல் மற்றும் விமான நிலையத்துடன் இணைக்கும்.
வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் வரையிலான புதியமெட்ரோ ரயிலை பெண் ஓட்டுநர் ரீனா இயக்கினார்.
கடற்கரை – அத்திப்பட்டு இடையே 4-வது ரயில் பாதை:
இதேபோன்று சென்னை கடற்கரை – அத்திப்பட்டு இடையே 4-வது ரயில் பாதையை பிரதமர் நரேந்திரமோடி தொடக்கி வைத்தார்.
துறைமுக போக்கு வரத்து நெரிசலை குறைக்க ரூ.293.40 கோடி செலவில் 22.1 கிலோ மீட்டர் தூரம் ரயில்பாதை மக்கள் பயன்பாட்டிற்காக தொடங்கி வைக்கப்பட்டது.
இந்த ரயில்பாதை சென்னை, எண்ணூர், துறைமுகங்களை இணைப்பதுடன் முக்கிய தளங்கள்வழியாக செல்லும்.
மயிலாடுதுறை – திருவாரூர் இடையே ரயில்பாதை:
மயிலாடுதுறை – திருவாரூர் இடையே மின்மயமாக்கப்பட்ட ஒற்றை லைன் ரயில் பாதையையும் தொடக்கிவைத்தார்.
ரூ.423 கோடி மதிப்பில் 228 கிலோ மீட்டர் தூரம் மின் மயமாக்கப்பட்ட ரயில் பாதையை விரைவான போக்குவரத்திற்கு உதவும்.
மின்மய மாக்கப்பட்ட ரயில் வழித்தடத்தால் எழும்பூர் – கன்னியாகுமரி இடையே ரயில்வே லைனை மாற்றவேண்டிய அவசியம் ஏற்படாது.
இந்தத் திட்டம் தொடக்கி வைக்கப்பட்டதன் மூலம் ரயில் எரிபொருளுக்கான செலவில் நாளொன்றுக்கு ரூ.14.61 லட்சம் மிச்சமாகும்.
ரு.1000 கோடியில் ஐஐடி வளாகத்திற்கு அடிக்கல்:
செங்கல்பட்டு மாவட்டம் தையூரில் ஆயிரம்கோடி ரூபாய் மதிப்பில் ஐஐடி டிஸ்கவரி வளாகம்கட்ட பிரதமர் அடிக்கல் நாட்டினார்.
ஐஐடி டிஸ்கவரி வளாகத்தில் முதல்பகுதி 2 லட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமையவுள்ளது.
பொடுகு காரணமாக தலையில்_அரிப்பு போன்றவை ஏற்படும். இதுபோன்ற பொடுகு பிரச்னையை திர்க சில ... |
நீரிழிவுநோய் உடையவர்களுக்கு இந்த அட்டவணையில் சில மாற்றங்களைச் செய்து கொள்ள வேண்டும். அதற்கு ... |
சிவப்பு சித்ர மூல வேர்ப்பட்டையை நன்கு உலர்த்தி பொடித்து தேன் அல்லது பாலில் ... |