சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக கூட்டணியை ஆதரித்து பிரச்சாரம் செய்ய உள்ளதாக தேவேந்திரர் தன்னார்வ அறக்கட்டளை மாநில தலைவர் தங்கராஜ் தெரிவித்தார்.
பெரம்பலூரில் நேற்று செய்தியாளர்களிடம் அவர்கூறியது: பட்டியலினத்தவர் பட்டியலில் உள்ள குடும்பன், காலாடி, பண்ணாடி, கடையன், பள்ளன், தேவேந்திர குலத்தான், வாதிரியார் ஆகிய 7 உட் பிரிவுகளையும் ஒன்றிணைத்து தேவேந்திரகுல வேளாளர் என அறிவிக்க வேண்டும் என்ற எங்களது கோரிக்கையை ஏற்று மத்திய அரசுக்கு, தமிழக முதல்வர் பழனிசாமி பரிந்துரைத்தார். இதை ஏற்று 7 பட்டியலின உட்பிரிவை சேர்ந்தவர்களை தேவேந்திரகுல வேளாளர் என்றழைக்கும் சட்டத்திருத்த மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.
எங்களது கோரிக்கையை ஏற்று செயல்படுத்திய பிரதமர் மோடி, முதல்வர் பழனிசாமி ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கும்வகையில், தமிழக சட்டப் பேரவை தேர்தலில் பாஜக கூட் டணியை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்வோம்.
தமிழகத்தில் எங்களது சமுதாயத்தை சேர்ந்த வாக்காளர்கள் 60 லட்சம் பேர் உள்ளனர். இதனால் அதிமுக கூட்டணிக்கு 50 முதல் 70 தொகுதிகளில் கூடுதல் வெற்றி வாய்ப்புது என்றார்.
பேட்டியின்போது, மாவட்டத் தலைவர் செல்வக்குமார் உடனி ருந்தார்.
பிறவிப் பெருங்கடலைக் கடந்து அழியாத பேரின்ப நிலையைப் பெற, வழிகள் உள்ளன. இறை ... |
உடல் உழைப்பு குறைந்துபோய், தசைகளுக்கான உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகள் போன்றவற்றை மேற்கொள்ள நேரமேயில்லாமல் ... |
மஞ்சள் நிறத்துல இருக்குற எலுமிச்சையை உங்களுக்கு நன்றாக தெரிஞ்சிருக்கும். எலுமிச்சை பழம், காய்,இலை ... |