தெலுங்கானா, புதுச்சேரி என இரட்டை குழந்தைகளாக பாவிப்பதுடன் அதனை கையாளும்திறனும், மருத்துவரான எனக்கு உள்ளது என புதுச்சேரி துணைநிலை ஆளுநராக பொறுப்பேற்று கொண்ட பின்னர் தமிழிசை சவுந்திர ராஜன் தெரிவித்துள்ளார்.
இன்று பதவியேற்று கொண்ட பின் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
என் மீது நம்பிக்கைவைத்து கூடுதல் பொறுப்பு கொடுத்துள்ளார்கள். பதவிப் பிரமாணத்தின் போது தமிழில் உறுதிமொழி எடுக்கவேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவு. துணைநிலை கவர்னராக இல்லாமல், மக்களுக்கு துணைபுரியும் கவர்னராக இருப்பேன். தெலுங்கானா, புதுச்சேரி என இரட்டை குழந்தைகள் என் கையில் உள்ளது. இரட்டை குழந்தைகளை கையாளும்திறன் மருத்துவரான எனக்கு உள்ளது.
இந்திய தடுப்பூசியை வெளிநாட்டினர் அதிகம் வாங்குகின்றனர். ஆனால், நமதுநாட்டில் குறைவாக உள்ளது வேதனையாக உள்ளது. தடுப்பூசி போட்டுகொள்ள தயங்கக்கூடாது. கவர்னர் மற்றும் முதல்வரின அதிகாரம் எனக்குதெரியும். அவரவர் அதிகாராத்திற்கு உட்பட்டு ஜனநாயக முறைப்படி செயல்படவேண்டும் என்பது எனது விருப்பம்.
அரசு மீதான பெரும்பான்மை தொடர்பான கோப்பை இன்னும் பார்க்கவில்லை. இதுதொடர்பாக அனைவரையும் ஆலோசித்து முடிவு செய்யப்படும். சட்டத்திற்கு உட்பட்டு அரசியல் நகர்வுகள் இருக்கும். எனது ஒவ்வொரு நகர்வும் புதுச்சேரி மக்களின் நலனுக்காக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் போன்றவற்றைப் பொடித்து இரவில் படுக்கும்முன் ஒரு தேக்கரண்டியளவு வெந்நீரில் ... |
நீரிழிவுநோய் கட்டுப்பாட்டில்,உடற்பயிற்சி மிக முக்கிய இடத்தைப் பெறுகிறது. எனவே நீரிழிவுநோய் உடையவர்கள் தொடர்ந்து ... |
அரச இலைக் கொழுந்தை விழுதாக அரைத்து நெல்லிக்காய் அளவும் பாலில் கரைத்து, காலையில் ... |