பாஜக வலுவான நிலையில் உள்ளது

மயிலாடுதுறையில் பா.ஜ.க நிர்வாகி இல்லத்திருமண விழாவில் கலந்துகொள்ள வந்த பா.ஜ.க மாநிலத் துணைதலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.

செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, ’புதுச்சேரி மாநிலத்தில் நியமன எம்எல்ஏ-க்கள் ஓட்டுப்போட தகுதிஉள்ளது. அதற்கு சட்டத்தில்வழிவகை உள்ளது. தொடர்ச்சியாக புதுச்சேரியில் எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துவருகிறார்கள். நியமன எம்எல்ஏக்கள் அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்கிறார்கள். என்னை பொருத்தவரை நியமன எம்எல்ஏக்கள் ஓட்டுப்போட தகுதி உடையவர்கள். தர்மேந்திரபிரதான் பெட்ரோல் டீசல் விலையை ஜிஎஸ்டி வரி விதிப்பில் கொண்டுவர வேண்டும் என்று கூறியுள்ளார். வருமான இழப்புவரும் என்பதால் மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. பெட்ரோல், டீசல் விலையை கட்டுக்குள் கொண்டுவர மத்திய அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.”

, ’சர்வதேச அளவில் உள்ள பெட்ரோல், டீசல் விலையை கொண்டு விலைநிர்ணயம் செய்து வருகிறோம். மக்கள் அச்சப்பட தேவையில்லை. பெட்ரோல், டீசல் விலை கட்டுப்படுத்தப்படும். தேசிய ஜனநாயகக் கட்சியின் மிகப்பெரிய கட்சி அதிமுக. முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமியை முன்னிறுத்தி தேர்தல் களத்தை சந்திப்போம். பாஜக வலுவான நிலையில் உள்ளது. சேலத்தில் மாநாடு எழுச்சியுடன் நடைபெற்றது. விழுப்புரத்தில் அமித்ஷா பங்கேற்கும் மாநாடு நடைபெற உள்ளது. பெண்கள் பாஜகவின் பக்கம் சாய்ந்துள்ளனர். சசிகலாவை அதிமுகவில் இணைக்க நாங்கள் முயற்சி செய்யவில்லை. சசிகலா அதிமுகவில் சேருவாரா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

முருங்கைக் காயின் மருத்துவ குணம்

முருங்கைக் காய் மலச்சிக்கலை சரி செய்யும் . வயிற்றுப் புண்ணை போக்கும் மேலும் ...

முயற்சியின் அளவே தியானம்

சாதனா என்றால் அப்பியாசா" அல்லது 'நீடித்த பயிற்சி" என்று பொருள். நீடித்த பயிற்சி ...

எருக்கின் மருத்துவக் குணம்

இதன் இலையை வதக்கி கட்டிகளுக்குக்கட்ட அவை பழுத்து உடையும். செங்கல்லை பழுக்க காய்ச்சி ...