தமிழகம் உள்பட 8 மாநிலங்களில் கொரோனா பரவல் 24 மணி நேரமும் தடுப்பூசி போடலாம்

தமிழகம் உட்பட 8 மாநிலங்களில் கொரோனாபரவல் மீண்டும் அதிகமாகி வரும் நிலையில், காலநேரமின்றி 24 மணி நேரமும் தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த சிலமாதங்களாக படிப்படியாக கட்டுக்குள் இருந்த கொரோனா வைரஸ் பரவல், கடந்த சிலநாட்களாக மீண்டும் அதிகமாகி வருகிறது. இங்கிலாந்து, பிரேசில், தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட நாடுகளில் உருவான உருமாறிய கொரோனாவும், இந்தியாவில் தற்போது பரவிவருகிறது. இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை பிரதமர் மோடி கடந்த ஜனவரி 16ம் தேதி தொடங்கிவைத்தார்.

இதில், முதல் கட்டமாக சுகாதாரப் பணியாளர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அடுத்தகட்டமாக, கடந்த 1ம் தேதி முதல் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், இணைநோய் உடைய 45 வயதுக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இது அரசு மருத்துவமனைகளில் இலவசமாகவும், தனியார் மருத்துவ மனைகளில் ரூ.250 கட்டணத்திலும் போடப்படுகிறது. இதற்காக, கோ-வின் 2.0 செயலிமூலம் மூத்த குடிமக்கள் ஆர்வத்துடன் முன்பதிவு செய்துவருகின்றனர். மேலும், நேரடியாக வந்து தடுப்பூசி போடுவதில் ஆர்வம் காட்டுகின்றனர்.

இந்நிலையில், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, பஞ்சாப், குஜராத், டெல்லி, அரியானா, மத்திய பிரதேசம் மாநிலங்களில் கடந்த சிலநாட்களாக கொரோனா பரவல் மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது. இதனால், இந்தமாநிலங்களின் பாதிப்பு விவரங்களை மத்திய அரசு ஆய்வு செய்து வருகிறது. இந்நிலையில், மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ வர்தன் நேற்று வெளியிட்ட டி விட்டர் பதிவில், “தடுப்பூசி போடுவதற்கான காலநேரத்தை அரசு நீக்கி உள்ளது. மக்கள் தங்களின் வசதிக்கேற்ப, 24 மணி நேரமும் அரசு, தனி்யார் மருத்துவமனைகள், மையங்களில் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்,’ என்று கூறியுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அடுத்த ஆண்டில் நான்மீண்டும் வர ...

அடுத்த ஆண்டில் நான்மீண்டும் வருவேன் வளர்ச்சிக்கு ஆர்வமுள்ள வட்டாரங்கள் என்ற நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் ...

காந்தி ஜெயந்தியையொட்டி தூய்மை ...

காந்தி ஜெயந்தியையொட்டி தூய்மைப் பணியில் ஈடுபட்ட மோடி காந்தி ஜெயந்தியையொட்டி பிரதமர் நரேந்திரமோடி, உள்துறை அமைச்சர் அமித் ...

பேச்சுசுதந்திரம் குறித்து யார ...

பேச்சுசுதந்திரம் குறித்து யாரும் எங்களுக்கு பாடம் நடத்த வேண்டாம் “கனடாவில் இந்திய துாதரக அதிகாரிகள் மிரட்டப்படுவதால், அவர்களுக்கு மிகப்பெரிய ...

பிஎம் விஸ்வகர்மா திட்டம் தொடங் ...

பிஎம் விஸ்வகர்மா திட்டம் தொடங்கப்பட்டது பிஎம் விஸ்வகர்மா திட்டத்தை பிரதமர் நரேந்திரமோடி டெல்லியில் நேற்று ...

இந்தியாவின் கலாசாரத்தின் மீது ...

இந்தியாவின் கலாசாரத்தின் மீது தாக்குதல் சுவாமி விவேகானந்தர், லோக்மான்ய திலகருக்கு உத்வேகம்அளித்த சனாதன தர்மத்தை ...

யாத்திரையை திசை திருப்பும் திம ...

யாத்திரையை  திசை திருப்பும் திமுக தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலையின் "என் மண், என் ...

மருத்துவ செய்திகள்

முருங்கைப் பட்டை | முருங்கை பட்டை மருத்துவ குணம்

முருங்கை பட்டையை நன்றாக சிதைத்து அதனுடன் சிறிது உப்பு சேர்த்து வீக்கங்களின் மீது-வைத்து ...

நம் உடலில் இரத்தத்தில் சர்க்கரை இருக்க வேண்டிய அளவு

உணவு உண்ணும் முன்பாக 60 – 110 மில்லிகிராம்% (வெறும் வயிற்றில் எடுக்க ...

Down Syndrome என்றால் என்ன? அதைப் பற்றிய விழிப்புணர்வு எல்லோருக்கும் தேவையா ?

கண்டிப்பாக Down Syndrome பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு ...