நாகர்கோவிலில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய உள்துறை அமைச்சர் அமித் ஷா செட்டிகுளம் முதல் வேப்பமூடுவரை ரோடுஷோ மூலம் தொண்டர்களை உற்சாக படுத்தினார். கன்னியாகுமரி லோக்சபா இடைத்தேர்தல் பாஜக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்னன் மீண்டும் போட்டியிடுகிறார். தேர்தல்பிரசாரத்திற்கு குமரி மாவட்டத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்றுகாலை நாகர்கோவில் வந்தார். பின்னர் கார்மூலம் சுசீந்திரம் சென்று தாணுமாலையன் சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.
பின்னர் வீடுவீடாக சென்று மோடி அரசின் சாதனைகள் அடங்கிய துண்டுபிரசுரங்களை வழங்கி பிரசாரம் செய்தார். பின்னர் கார் மூலம் நாகர்கோவில் இந்துகல்லுரி அருகிலுள்ள நீலவேணியம்மன் கோயிலில் தரிசனம் செய்துவிட்டு, செட்டிகுளம் ஜங்ஷனில் இருந்து அலங்கரிக்கப்பட்ட திறந்தலாரியில் ஏறி சாலையின் இருபுறமும் கூடியிருந்த பல்லாயிரக் கணக்கான கட்சி தொண்டர்களை பார்த்து கையசைத்தபடியே மக்களை சந்தித்தார். அமித் ஷாவுடன், முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்னன்,தமிழக பாஜக தலைவர் முருகன், தமிழக தேர்தல்பொறுப்பாளர் சி.டி ரவி, தமிழக அரசின் டெல்லிபிரதிநிதி தளவாய் சுந்தரம், மாவட்ட செயலாளர் அசோகன், முன்னாள் நகராட்சி தலைவர் மீனா தேவ் ஆகியோர் உடன்வந்தனர்.
மதியம் 12.50மணிக்கு வேப்பமூடு பகுதியில் காமராஜர் சிலைக்கு ஆளுயர ரோஜா பூ மாலை அணிவித்து அமித்ஷா மரியாதை செலுத்தினார். பின்னர் அங்குகூடியிருந்த பல்லாயிரக்கணக்கான தொண்டர்ஙளை பார்த்து கையசைத்த படி தலைக்குனிந்து வணங்கினார். பின்னர் கார் மூலம் மணிமேடை வழியாக வடசேரி பஸ்ஸ்டாண்ட் பின்னால் உள்ள உடுப்பி ஓட்டலில் தேர்தல்தொடர்பாக கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டார்.
இதன் பின்னர் அமித்ஷா கூறியதாவது: தமிழகத்தில் பா.ஜ.,- அ.தி.மு.க., கூட்டணியை பெருவாரியான ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற வைக்க வேண்டும். பொன். ராதாகிருஷ்ணனை கன்னியாகுமரி லோக்சபா தொகுதிமக்கள், பார்லிமென்டிற்கு அனுப்ப வேண்டும். இந்த தேர்தல் மூலம் தமிழகத்தில் ஒரு மிகப்பெரிய மாற்றம் வரவேண்டும்
ஜீரணமாகாத காரணத்தால் புளிச்ச ஏப்பம், சாப்பிட்ட உணவு மேல் கிளம்பி விடுதல், வாயில் ... |
நுண்புழுக் கொல்லியாகவும், முறைநோய் வேப்பிலையை நன்றாக அரைத்து, அதன் சாற்றை எடுத்து தினமும் ... |
சிறுகுறிஞ்சா இலையை எடுத்துக் கொண்டு, தேவையான அளவு நாவல் கொட்டைகளை வெய்யிலில் காயவைத்து ... |