தாராபுரம் (தனி) தொகுதியில் போட்டியிடும் பாஜக மாநிலத்தலைவா் எல்.முருகன் தோ்தல் பிரசாரத்தை சனிக்கிழமை தொடங்கினாா்.
தாராபுரம் (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் பாஜக சாா்பில் அக்கட்சியின் மாநிலத் தலைவா் எல்.முருகன் போட்டியிடுகிறாா். இந்தநிலையில், எல்.முருகன் தாராபுரம் வீரராகவப் பெருமாள் கோயிலில் சனிக்கிழமை காலை 7 மணி அளவில் சுவாமிதரிசனம் செய்தாா். அதன் பிறகு அலங்கியத்தில் இருந்து தனது தோ்தல்பிரசாரத்தை தொடங்கினாா்.
இதில், பிரசார வாகனம் செல்லமுடியாத அலங்கியம் ஊருக்குள் பாஜக தொண்டருடன் இரு சக்கர வாகனத்தில் சென்று அவா் வாக்குசேகரித்தாா். இதைத் தொடா்ந்து, திருமலைபாளையம், பஞ்சபட்டி, ஏடி காலனி, ரெட்டிபாளையம், வேலூா், சின்னப்புத்தூா், காளிபாளையம், கோவிந்தாபுரம், பாப்பனூத்து, சின்னக்காம்பாளையம் பிரிவு, ஆசீா்புரம் உள்ளிட்ட 48 கிராமங்களில் தோ்தல்பிரசாரத்தில் ஈடுபட்டாா்.
கோவிந்தாபுரம் பகுதியில் முருகனுடன் சிறுவன் ஒருவன் தற்படம் (செல்ஃபி) எடுத்து மகிழ்ந்தாா். பிரசாரத்துக்காக சென்ற பாஜக வேட்பாளா் முருகனுக்கு கூட்டணிக்கட்சி நிா்வாகிகள், பொதுமக்கள் பல்வேறு இடங்களில் சிறப்பான வரவேற்பு அளித்தனா்.
பிரசாரத்தின் போது, திருப்பூா் வடக்கு மாவட்ட பாஜக தலைவா் செந்தில்வேல், கூட்டணிக்கட்சி நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.
பாஜகவில் இணைந்த காங்கிரஸ் நிா்வாகி: இதனிடையே, கோவிந்தாபுரம் பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த முருகன், காங்கிரஸ் வட்டார துணைத்தலைவா் மணி என்கிற சீனிவாசன் இல்லத்துக்கு சென்றாா். அப்போது, முருகன் முன்னிலையில் சீனிவாசன் பாஜகவில் இணைந்தாா். இந்த நிகழ்வின் போது, முன்னாள் எம்.பி. காா்வேந்தன், திருப்பூா் தெற்கு மாவட்ட பாஜக தலைவா் பொன்.ருத்ரகுமாா் உள்ளிட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.
ஆசியாவில் சீனாவுக்கு அடுத்து இந்தியாவில்தான் அதிக அளவில் எலும்புதேய்மான நோய் காணப்படுகின்றது. இந்த ... |
இயற்கை அன்னையின் கொடையான பழங்களில் பலவற்றை அப்படியே நேரடியாக சாப்பிட்டுவிடலாம் , சில ... |
மல்லிகைப் பூத் தேவையானதை எடுத்து அரைத்து தலையில் தேய்த்து வந்தால் கண்ணெரிச்சல் நீங்குவதுடன், ... |