தமிழக சட்டமன்றதேர்தல் முடிவுகள் படிப்படியாக வெளியாகி கொண்டிருக்கின்றன. திமுக கூட்டணி ஆட்சியை கைப்பற்றுவது உறுதிசெய்யப்பட்டு விட்டது. ஆனால் எத்தனை தொகுதிகள் கிடைக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
அதிமுக, திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட கட்சிகளில் வெற்றிபெற்றவர்களின் விவரங்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இதில் கவனிக்கத்தக்கது அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜகவின் வெற்றி. ஏனெனில் 1996ஆம் ஆண்டில் பாஜகவின் முதல் எம்.எல்.ஏ வெற்றி பெற்றார். இதையடுத்து 2001ல் திமுக கூட்டணியில் இடம் பிடித்த பாஜக 4 இடங்களில் வென்றது.
அதன்பிறகு வெற்றி வாய்ப்பு கிடைக்கவில்லை. எனவே 20 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் தமிழக சட்டமன்றத்திற்குள் நுழைய பாஜகவிற்கு வாய்ப்பிருக்கிறதா என்ற எதிர்பார்ப்பு அனைவர் மத்தியிலும் எழுந்தது. இதனை உறுதிப் படுத்தும் விதமாக கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட எம்ஆர்.காந்தி வெற்றி பெற்றுள்ளார்.
இவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர். குறிப்பாக பாஜகவின் எஸ்.ஆர்.சேகர் தனது ட்விட்டரில், ”ஒரு சாமானியன். 60 ஆண்டு காலமாக கட்சியின் அடிமட்டதொண்டன். பெயரும் செயலும் ஒன்றான காந்தி. உன்வெற்றி ஏழைகளின் வெற்றி” என்று குறிப்பிட்டுள்ளார். இதேபோல் நெல்லை தொகுதியில் பாஜக.வின் நாயனார் நாகேந்திரன் 25000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னணி பெற்றுள்ளார்.
மொடக்குறிச்சியில் பாஜக வேட்பாளர் சரஸ்வதி 55,397 வாக்குகள் பெற்று முன்னணியில் உள்ளார். கோவை தெற்கு தொகுதியில் காலை முதல் மக்கள் நீதிமய்யம் கட்சியின் கமல் ஹாசன் முன்னிலை பெற்ற நிலையில், 23வது சுற்று வாக்கு எண்ணிக்கையின் முடிவில் பாஜகவின் வானதி சீனிவாசன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதன் இலையை வதக்கி கட்டிகளுக்குக்கட்ட அவை பழுத்து உடையும். செங்கல்லை பழுக்க காய்ச்சி ... |
பிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; தேய்க்கணும். குழந்தை ... |
நம்ம தமிழ் நாட்டுல ரசத்தையும், சாம்பாரையும் 'கமகமக்க' வைப்பதில் பெருங்காயத்தின் பங்கு அதிகம் ... |
1permitted