மம்தா பானர்ஜியை தேசியளவில் ‘கார்னர்’ செய்யும் பாஜக

மேற்குவங்க மாநில சட்டப்பேரவை தேர்தலில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ்கட்சி வெற்றி பெற்றதை தொடர்ந்து, பல்வேறு மாவட்டங்களில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறின. தேர்தலுக்கு பிந்தைய இந்தவன்முறை சம்பவங்களில் மொத்தம் 16 பேர் உயிரிழந்துள்ளதாக மேற்குவங்க அரசு தெரிவித்துள்ளது.

ஆனால், அந்த வன்முறைச் சம்பவங்களில் 21 பேர் உயிரிழந்துள்ளதாக பாஜக தெரிவித்துள்ளது. தேர்தல்வன்முறை சம்பவத்தை வைத்து மம்தாவை தேசிய அளவில் ‘கார்னர்’ செய்ய மத்திய பாஜக திட்டமிட்டுள்ளதாக ‘டெக்கான் ஹெரால்டு’ வெளியிட்டசெய்தி ஒன்று தெரிவிக்கிறது. மேற்குவங்க பாஜக தலைவர்கள் மூலம் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்தச்செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

அந்தச்செய்தியில், ‘தேர்தலுக்குப் பிந்தைய வன்முறை தொடர்பாக பிற மாநிலங்களின் கட்சித் தலைவர்களை சந்தித்து மம்தாவுக்கு எதிராக குரல்கொடுக்க வலியுறுத்தவேண்டும் என்று பாஜகவின் மத்திய தலைமை, மாநிலப்பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளது. பிற மாநிலங்களில் பிரசாரம் செய்து மேற்கு வங்கத்தில் நடந்த வன்முறையை எடுத்துக்காட்டுவதன் மூலம் தேசிய அளவில் திரிணாமூல்கட்சி மற்றும் முதல்வர் மம்தா பானர்ஜிக்கு எதிராக மக்களிடம் எதிர்மறை இமேஜே ஏற்படுத்துவதே இதன்நோக்கம்.

மேற்கு வங்கத்தில் தற்போது இருக்கும் லாக்டவுன் போன்ற நிலைமை காரணமாக வன்முறை தொடர்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்த முடியாத சூழ்நிலையில் மாநில பாஜக உள்ளன. எனவேதான் பாஜக தலைமை தேசியளவில் உள்ள பிற மாநிலங்களில் உள்ள கட்சித் தலைவர்களுக்கு வன்முறையை எடுத்துரைத்து பிரசாரம் செய்ய முடிவு செய்துள்ளது.

இதன்மூலம் மம்தா பானர்ஜியை தேசியளவில் ‘கார்னர்’ செய்வதும் இந்தமுயற்சியின் முக்கிய குறிக்கோள் ஆகும். இதனைசெய்ய திலீப் கோஷ், எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து ஆதிகாரி, கைலாஷ் விஜயவர்ஜியா, பூபேந்திர யாதவ் போன்ற மாநில தலைவர்களுக்கு பாஜக மத்திய தலைமை அழுத்தம் கொடுத்துள்ளது.

இந்த அழுத்தத்தின் காரணமாக இதுவரை மாநில பாஜக தலைமை 13 மாநிலங்களின் கட்சித் தலைவர்களுடனும் ஒருயூனியன் பிரதேச தலைவர்களுடனும் சந்திப்புகளை நடத்தி வன்முறையின் தாக்கத்தை எடுத்துரைத்துள்ளது. மாநில பாஜக தலைவர் திலீப்கோஷ் உத்தரப் பிரதேசம், மணிப்பூர், இமாச்சலப் பிரதேசம் ஆகிய இடங்களில் பாஜக தலைவர்களுடன் நேரடி சந்திப்புகளையும், குஜராத் மற்றும் மேகாலயாவில் உள்ள கட்சித்தலைவர்களுடன் தொலைபேசி உரையாடல்களையும் நிகழ்த்தியுள்ளார்.

அவரைப்போலவே கைலாஷ் விஜயவர்ஜியா பீகார், பஞ்சாப், உத்திரகண்ட் மற்றும் யாதவ் ஆகிய இடங்களில் கட்சித் தலைவர்களுடன் சந்திப்புகளையும், பூபேந்திரயாதவ் அசாம் மற்றும் நாகாலாந்து மாநில கட்சித் தலைவர்களை சந்தித்தும் பேசியிருக்கின்றனர். இவர்கள் வலியுறுத்திய மற்ற மாநில தலைவர்களில் பாஜக ஆளும் மாநிலங்கள் பெரும்பாலாக இருந்தாலும், எதிர்க்கட்சிகள் ஆட்சிசெய்யும் சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் கூட மம்தாவை குற்றம்சாட்டி மேற்கு வங்க பாஜக பேசியிருக்கிறது. தொடர்ந்து இந்தபிரசாரத்தை தீவிரப்படுத்த கட்சித் தலைமை அக்கறை கொண்டுள்ளது’ என்று விவரிக்கிறது அந்தச் செய்தி.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக்க பாஜக உறுதிபூண்டுள்ளது மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை திரும்பக் கொண்டு வருவதற்காக ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

மருத்துவ செய்திகள்

கொடிமுந்திரிப் பழத்தின் பயன்

கொடிமுந்திரியோ பழத்திற்குச் சுரம், அருசி, அதிக தாகம், உடல்புண்கள், இரைப்பு, கஷாயம், இரத்த ...

கரு கூடாமல் போவதற்கு யார் காரணம்?

கரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் காரணம். இதில் ...

கொய்யாவின் மருத்துவ குணம்

கொய்யா மரத்தின் இலைகளைக் கொண்டு வந்து லேசாக வதக்கி ஒரு டம்ளர் தண்ணீர் ...