இந்திய குறைதீர்வு அதிகாரியை நியமிக்க டுவிட்டர் நீண்டகாலம் எடுத்துக் கொள்வதை கடுமையாக கண்டித்துள்ள டில்லி உயர்நீதிமன்றம் , பிரச்னையை சந்திக்க வேண்டியிருக்கும் எனவும் எச்சரித்துள்ளது.
மத்திய அரசின் புதியதகவல் தொழில்நுட்ப விதிப்படி, 50 லட்சத்துக்கும் மேற்பட்ட பயனர்களை கொண்ட சமூக ஊடக நிறுவனங்கள் அனைத்தும் இந்தியாவைசேர்ந்த நபர்களை மட்டுமே குறைதீர்வு அதிகாரியாக நியமிக்கவேண்டும். முதலில் டுவிட்டர் நிறுவனம் இதற்கு இணங்க மறுத்தது. பின்னர் காலஅவகாசம் கேட்டது. குறிப்பிட்ட காலத்திற்குள் இந்திய ஐ.டி., விதிகளுக்கு இணங்காததால் டுவிட்டரின் சட்ட பாதுகாப்பை மத்திய அரசு நீக்கியது. இதனால் அதன்தளத்தில் வெளியாகும் சட்டவிரோத கருத்துக்கள், படங்கள், வீடியோக்களுக்கு நிறுவனமே பொறுப்பேற்கும் சூழல் ஏற்பட்டது.
இதற்கிடையே கடந்த ஜூன் மாதம் டுவிட்டரின் இடைக்கால குறைதீர்வு அதிகாரியாக நியமிக்கப்பட்ட தர்மேந்திரசதுர் பதவி விலகினார். அதன் பிறகு அமெரிக்காவைச் சேர்ந்த அதிகாரிகளே இந்திய குறைவுதீர்வு அதிகாரிகளாக செயல்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இந்தியவிதிகளை பின்பற்றவில்லை என டுவிட்டருக்கு எதிராக வழக்கறிஞர் அமித் ஆச்சார்யா என்பவர் தொடர்ந்தவழக்கு டில்லி உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
டுவிட்டர் சார்பில் ஆஜரான மூத்தவழக்கறிஞர் சஜன் பூவய்யா, இந்திய அதிகாரி ஒருவரை நியமிக்கும் பணிகள் நடந்து வருவதாகவும், மேலும் 2 வாரங்கள் அதற்கு தேவைப்படும் என்று கூறினார்.
இப்பதிலை கேட்டு அதிருப்தி அடைந்த நீதிபதி ரேகா பாலி, “உங்கள் பணிகள் முடிய எவ்வளவுநாள் ஆகும். எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் நம் நாட்டில் எடுத்துக்கொள்ளலாம் என டுவிட்டர் கருதினால், நான் அதைஅனுமதிக்க மாட்டேன். டுவிட்டரிடமிருந்து முறையான காலக்கெடுதேவை. தெளிவான பதிலுடன் வருவது நல்லது. இல்லை என்றால் சிக்கலை சந்திப்பீர்கள்” என்றார்.
கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் போன்றவற்றைப் பொடித்து இரவில் படுக்கும்முன் ஒரு தேக்கரண்டியளவு வெந்நீரில் ... |
30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 மாதம் முதல் ... |
சேவல் இறைச்சி அதிக சூடு உண்டாக்கும். அன்றியும் தாது நஷ்டம் உண்டாகும். ஆகையால் ... |