நக்சல்களை சுற்றி வளைத்த 10,000 வீரர்கள்

சத்தீஸ்கர் – தெலுங்கானா – மஹாராஷ்டிரா எல்லையில், நக்சல்களுக்கு எதிராக கடும் தாக்குதலை, மூன்று மாநிலங்களின் நக்சல் ஒழிப்புப் படையினர், கடந்த ஐந்து நாட்களாக நடத்தி வருகின்றனர். 10,000க்கும் மேற்பட்ட பாதுகாப்பு படையினர் நக்சல்களை சுற்றி வளைத்துள்ளனர்.

இதனால், சரணடைவது அல்லது உயிரிழப்பது என்ற நிலைக்கு நக்சல்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

அடுத்தாண்டு மார்ச்சுக்குள் நாட்டில் நக்சல்கள் முற்றிலும் ஒழிக்கப்படுவர் என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஏற்கனவே தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் கடந்த சில மாதங்களாக நக்சல்களுக்கு எதிராக பாதுகாப்பு படையினர் தீவிரமாக தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

தெலுங்கானா, சத்தீஸ்கர், மஹாராஷ்டிரா மாநிலங்களின் எல்லையில், கடந்த 21ல் துவங்கிய நக்சல் எதிர்ப்பு தாக்குதல்களுக்கு, மூன்று மாநிலங்களின் உள்துறை அமைச்சர்கள் நேரடி கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதில், இந்திய விமானப்படையும் சேர்ந்துள்ளது. ஆட்கள் அணுக முடியாத காட்டுப் பகுதிகளில், வீரர்களை ஹெலிகாப்டர்கள் இறக்கி விடுகின்றன.

அங்கு ஒவ்வொரு அங்குலமாக சல்லடை போட்டு தேடும் வீரர்களின் கண்களில் சிக்கும் நக்சல்கள் கொல்லப்படுகின்றனர்.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் மூன்று பெண் நக்சல்கள், அதிரடிப்படை வீரர்கள் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர். நான்கு நக்சல்களின் உடல்கள் மீட்கப்பட்டுஉள்ளன.

இந்த மூன்று மாநிலங்களிலும், 10,000க்கும் மேற்பட்ட வீரர்கள் இந்த தேடுதல் மற்றும் தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

அவர்களால், வனத்தில் பதுங்கியுள்ள 500க்கும் மேற்பட்ட நக்சல்கள் வேட்டையாடப்படுகின்றனர்.

இதனால், சரணடைவது அல்லது துப்பாக்கி குண்டுகளுக்கு இரையாவது என்ற நிலைக்கு நக்சல்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

நக்சல் தலைவர்களான ஹித்மா, தேவா, விகாஸ் மற்றும் தாமோதர் போன்றோர் தலைமையில் நக்சல்கள் சண்டையிட்டு வருகின்றனர்.

நக்சல் எதிர்ப்பு வேட்டையில், அப்பாவி கிராம மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க, வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என, அறிவுறுத்தப்பட்டுள்ளனர். வனத்திற்குள் செல்லும் வீரர்களுக்கு, அந்தந்த பகுதி போலீசார் உதவி செய்து வருகின்றனர்.

ட்ரோன்கள் மற்றும் ஹெலிகாப்டர்களும் இந்த தாக்குதலில் பயன்படுத்தப்படுகின்றன.

இதனால், இதுவரை இல்லாத அளவுக்கு மிகவும் மோசமான பாதிப்புகளை நக்சல்கள் சந்தித்து வருகின்றனர். எனினும், வனத்தில் நடக்கும் மோதல்கள் குறித்து, தெளிவான தகவல் இதுவரை இல்லை.

நக்சல்கள் பதுங்குமிடமாக கருதப்படும் சத்தீஸ்கர் மாநிலத்தின் பஸ்தான் பகுதியில் மட்டும், கடந்த நான்கு மாதங்களில், 350 நக்சல்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தீவிரவாதமும், அமைதிப் பேச்சுவா� ...

தீவிரவாதமும், அமைதிப் பேச்சுவார்த்தையும், ஒருங்கே செல்லவியலாது நாம் அனைவரும் கடந்த சில தினங்களில் நாட்டின் வலிமையையும் ...

பொய் பிரச்சாரம் செய்யும் பாகிஸ� ...

பொய் பிரச்சாரம் செய்யும் பாகிஸ்தான் – உமர் அப்துல்லா 'பாகிஸ்தான் பொய் பிரசாரம் செய்கிறது. அது உலகிற்கே தெரியும்' ...

பாகிஸ்தான் பொருளாதாரத்தையே நி� ...

பாகிஸ்தான் பொருளாதாரத்தையே நிலைகுலைய செய்துவிட்டார் பிரதமர் மோடி புதுடில்லி: இந்தியா சர்வதேச எல்லையைக் கடந்து தங்களின் எல்லைக்குள் ...

டில்லியில் முப்படை தலைமை தளபதி� ...

டில்லியில் முப்படை தலைமை தளபதிகளுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை டில்லியில் முப்படை தலைமை தளபதிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை ...

புத்தரின் போதனைகள் உலக அமைதிக் ...

புத்தரின் போதனைகள்  உலக அமைதிக்கு வழிவகுக்கும் – பிரதமர் மோடி ''புத்தரின் போதனைகள் எப்போதும் உலக சமூகத்தை அமைதியை நோக்கி ...

இந்தியா – பாகிஸ்தான் ராணுவ அத� ...

இந்தியா – பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள்  இன்று பேச்சு வார்த்தை இந்தியா- பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் இன்று மாலை பேச்சு ...

மருத்துவ செய்திகள்

குழந்தைகளின் மேனி பட்டுப்போல் இருக்க

பிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; தேய்க்கணும். குழந்தை ...

வெற்றிலையின் மருத்துவக் குணம்

செரிமானமூட்டியாகவும், கப அகற்றியாகவும் செயல்படுகிறது.

குங்குமப் பூவின் மருத்துவக் குணம்

தலைவலி, கண்நோய், காதுநோய், கபநோய், ஜுரம், தாது நஷ்டம், தாகம், மேக நோய், ...