மத்திய அமைச்சராக எல்.முருகன் தேர்வு

தமிழக பாஜக.,வின் தலைவராக இருந்த தமிழிசை சௌந்தர் ராஜன், 2019-ம் ஆண்டில் தெலங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப் பட்டார். அதனையடுத்து, ஓரிருமாதங்கள் கழித்து பா.ஜ.க தலைவராக எல்.முருகன் நியமிக்கப் பட்டார். பா.ஜ.க தலைவராக எல்.முருகன் நியமிக்கப் பட்டதிலிருந்து அவர், தமிழகத்தில் பா.ஜ.க வளர்த்தெடுக்கத் தீவிரமுயற்சிகளை மேற்கொண்டார்.

இதன்படி தமிழ்நாடு முழுவதும் வேல்யாத்திரை அறிவித்தார். அதிமுக கூட்டணியில் இருந்தபோதும் ஆட்சிக்கு எதிராக வேல்யாத்திரை அறிவித்தார். தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.கவுடன் கூட்டணி அமைத்து பாஜக தேர்தலை எதிர்கொண்டது. 20 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக, 4 சட்டமன்ற உறுப்பினர்களை பெற்றது.

இந்நிலையில் மத்தியில் பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான பா.ஜ.க. கூட்டணி மந்திரிசபை, 2-வது முறையாக கடந்த 2019-ம் ஆண்டு மே 30-ந் தேதி பதவி ஏற்றது. 2 ஆண்டுகள் முடிந்தும் மத்திய மந்திரி சபையில் இதுவரை எந்தவிதமான மாற்றமோ, விஸ்தரிப்போ நடைபெறவில்லை.

இந்நிலையில் இன்று மாலை மத்திய மந்திரிசபை விரிவாக்கத்துடன் மாற்றம் செய்யப்பட்டது. அதற்கான 43 புதியமத்திய மந்திரிகளின் பட்டியல் வெளியிடபட்டது. இதில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகனின் பெயர் இடம் பெற்றிருந்தது.

இதனைத் தொடர்ந்து புதிய மத்திய மந்திரிகளின் பதவியேற்பு விழா, இன்று மாலை 6 மணிக்கு குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்றது. அதில் மத்தியமந்திரியாக தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணம் செய்துவைத்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆய ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆயிரம் கோடிக்கான திட்டங்களை  கொண்டுவந்துள்ளோம் தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி, தமிழகத்தினுடைய ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் ப ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் பணி சார்ந்த ட்ரோன் மத்திய அரசு சார்பில் கடந்த2022-ம் ஆண்டு ‘நமோ ட்ரோன் ...

ரயில்வேயில் ‘மேட் இன் இந்தியா’

ரயில்வேயில் ‘மேட் இன் இந்தியா’ நாட்டில் கடந்த 10 ஆண்டுகள் நடைபெற்ற ஆட்சி வெறும் ...

10 புதிய வந்தே பாரத் ரயில்களை கொட ...

10 புதிய வந்தே பாரத் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்த பிரதமர் ரயில்வே உள்கட்டமைப்பு, இணைப்பு மற்றும் பெட்ரோகெமிக்கல்ஸ் துறைக்கு பெரும் ...

மருத்துவ செய்திகள்

சித்த மருத்துவம்

சித்தர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி, தேசம் என்ற பாகுபாடு இல்லை. அகத்தியர், ...

பொடுகு நீங்க

பொடுகு காரணமாக தலையில்_அரிப்பு போன்றவை ஏற்படும். இதுபோன்ற பொடுகு பிரச்னையை திர்க சில ...

காரம்

காரம் சுவையுள்ளதாகும். மிளகு, மிளகாய், கடுகு, இஞ்சி, சுக்கு, கருணைக்கிழங்கு, கலவைக்கீரை, வேளைக்கீரை ...