இந்தியாவும் தாலிபானும் :

பக்ராம் விமான தளம் சுற்றிவளைக்கப்பட்டதாகவும் தாலிபான் காபூல் நகருக்குள் சென்றுவிட்டதாகவும் ஆப்கான் ஜனாதிபதி பதவி விலக போவதாகவும் தகவல்கள் வருகின்றன. புதிய அரசாங்கம் எப்படி இருக்கும் என்ற நிலையில் இந்தியா தாலிபான் உறவுகளை பற்றி யோசித்து பார்க்கிறேன்.

1. தாலிபானுக்கும் இந்தியாவுக்கும் மறைமுக யுத்தமே அவர்கள் ஆட்சி செய்த 1996 முதல் 2001 வரையிலான காலத்தில் நடந்திருக்கிறது. Northern Alliance என்றழைக்கப்பட்ட பழங்குடி கூட்டத்திற்கு தாலிபனுக்கு எதிராக போரிட ராணுவ உதவி செய்த நாடுகளில் இந்தியாவும் ஒன்று. வாஜ்பாய் அரசு சுமார் 100 கோடிக்கு மேல் ஆயுதங்கள், போர் தளவாடங்கள் என்று அவர்கள் கரங்களை உறுதிப்படுத்த செலவு செய்தது.

2. இந்திய எல்லைக்கு வெளியே தஜகஸ்தானில் இந்திய விமான படை அமைத்த ஒரே வெளிநாட்டு தளமும் Northern Alliance இற்கு உதவி செய்ய, அவர்கள் வீரர்களுக்கு மருத்துவ வசதி செய்ய அமைக்கப்பட்டதே. இந்தியா எந்தளவு தாலிபனுக்கு எதிரான செயல்திட்டத்தோடு இருந்தது என்பதற்கு இதுவே சான்று.

3. தாலிபான் மேற்கால் அங்கீகரிக்கப்படும் விடுதலை குழுவோடு பலவகையில் முரண்பட்டவர்கள் என்றும் புனிதர்கள் அல்ல என்றும் யாரும் ஏற்றுக்கொள்வார்கள். தியோபந்தி மதரசா குழுவினருடனும் ஷரியா ஆதரவான பல குழுவினருடனும் கொள்கைரீதியான பிணைப்புகள் இருந்தன. ஆனால் அதே நேரம் தங்கள் நாடு சார்ந்து இவர்களின் கொள்கைகளில் விலக்கம் நிறைய உள்ளவர்களும் கூட. தாலிபனுக்கும் அல் கொய்தாவிற்கும் உள்ள வேறுபாடுகள் அங்கு நுழைந்த அமெரிக்கர்களாலே முதலில் புரிந்துகொள்ளப்படவில்லை. இரண்டும் கலந்துவிட்டதாக கூட அவர்கள் நினைத்தனர். 2010ஆம் வருடம் அங்கே வெறும் 100 அல் கொய்தாவினர் இருக்கலாம் என்று சிஐஏ வெளியிட்ட செய்தியே பின்னர் தான் அவர்களுக்கு கள நிலவரம் புரிந்தது என்பதற்கான ஆதாரம்.

4. 1999 ஆம் வருடம் காத்மண்டுவிலிருந்து தில்லி வரவிருந்த IC 814 விமானம் கடத்தப்படுகிறது. கடத்தியவர்கள் தாலிபான்களுடன் ஹக்கானி நெட்ஒர்க் மூலமாக இணைந்திருக்கலாம் ஆனால் அதில் தாலிபான்கள் ஈடுபட்டதாக எந்த ஒரு உறுதியான தகவலும் கிடையாது.

5. கடத்தப்பட்ட விமானம் அம்ரித்சரில் இறங்கினால் இந்திய கமேண்டோக்களின் தாக்குதலில் விடுவிக்கப்படும் என்று விமான கடத்தல் தீவிரவாதிகள் நினைத்தனர். எனவே பைலட்டின் எதிர்ப்பையும் மீறி விமானத்தை லாகூருக்கு பறக்க வைக்கின்றனர்.

6. கார்கில் போர் நடந்த அடுத்த வருடமாடு என்றபோதும் கூட பாகிஸ்தான் அங்கே விமானத்தை தரையிறக்க விடவில்லை. தளத்தில் இறங்க உதவும் வழிகாணும் கருவிகளையும் விமான நிலைய விளக்கையும் அணைத்துவிட்டார்கள். இறங்குவதில் உறுதியாக இருந்ததால் இறுதி நேரத்திலேயே விளக்கை எரியவிட்டு இறக்க விட்டார்கள். அதுவும் எரிபொருள் ஏற்றப்பட்ட பிறகு கிளப்பிவிட்டுவிட்டார்கள். ISI ஒற்றை செயல்பாட்டின் கீழ் இல்லாததால் அது உதவி செய்ததா என்று உறுதியாக சொல்லமுடியாது ஆனாலும் எதோ வகையில் ஆதரவளித்திருப்பார்கள்.

7. துபாய் சென்றுவிட்டு திரும்பிய விமானம் கந்தஹாரில் இறங்க முதலில் தாலிபான்கள் விடவில்லை. விட்டபின்னும் அவர்களை அங்கிருந்து கிளப்பவே குறியாக இருந்தார்கள். இந்தியாவை பேச்சுவார்த்தைக்கு அழைத்து பங்குகொண்டது இந்திய தரப்பினராலே அங்கீகரிக்கப்பட்டது.

8. 20 மில்லியன் டாலர் பணத்தையும் ஒரு தீவிரவாதியின் பிணத்தையும் கடத்தல் தீவிரவாதிகள் கோரிக்கையிலிருந்து எடுக்க தாலிபானே காரணம். அது இஸ்லாமுக்கு ஒவ்வாதது என்று தடுத்துவிட்டார்கள்.

9. விமானத்தை சுற்றி தங்கள் வீரர்களை நிறுத்தி வைத்தார்கள். இந்திய கமாண்டோ தாக்குதலுக்கு அனுமதிக்கவில்லை. அதே நேரம் பயணிகளை கொல்லக்கூடாது என்றும் எதிரியின் கையை கட்டிப்போட்டிருந்தனர். ஆப்கான் கமாண்டோக்கள் தாக்குவார்கள் என்ற அச்சம் தீவிரவாதிகளுக்கு இருந்ததாக பயணி ஒருவரின் பேட்டியில் தெரியவருகிறது. தாலிபனோ சர்வதேசிய பிரச்சனையில் மாட்டாமல் எப்படி நழுவுவது என்று குறியாக இருந்தார்கள். செப்டம்பர் 11 க்கு பின் மீட்புக்கான வழியே இல்லாமல் போய்விட்டது.

10. தீவிரவாதிகளை அகதிகளாக ஏற்க மறுத்தபோதும் அவர்களை இந்தியா விடுவித்த மூன்று தீவிரவாதிகளோடு தப்பிக்க விட்டார்கள். அது விமான விடுவிக்கும் ஒப்பந்தத்தில் உள்ளது என்று சாதித்தார்கள். அப்போது அவர்களின் நிலை தெளிவில்லை என்ற போதும் செப்டம்பர் 11 தாக்குதலின் பின் அது இன்னமும் தெளிவானது. அமெரிக்கா பின் லாடனை ஒப்படைக்கா விட்டால் ஆப்கான் மீது படையெடுப்போம் என்று மிரட்டிய போதும் தாலிபான்கள் காட்டிக்கொடுக்க மறுத்துவிட்டார்கள். அவர்கள் சொன்ன காரணங்கள் இரண்டு. ஒன்று உங்களுக்கும் எங்களுக்கும் குற்றவாளி மீட்டோப்படை ஒப்பந்தம் (extradition treaty) இல்லை. மேலும் அமெரிக்கா எங்களை முறையான அரசாக இன்னமும் அங்கீகரிக்கவில்லை. இந்தியாவிற்கும் இது பொருந்தும். இரண்டாவது ஒரு முஸ்லிமை இஸ்லாமல்லாத நாட்டிற்கு ஒப்படைக்க மாட்டோம் என்பது. முல்லா உமர் அதை மீண்டும் மீண்டும் சொன்னார். இரண்டு வருடங்களுக்கு பின் நடந்த இந்த சம்பவத்தை வைத்துப்பார்க்கும் போது அவர்களின் கொள்கைகளை ஓரளவு புரிந்துகொள்ள முடிகிறது. ஒரு இஸ்லாமிய இறைமை ஆட்சி இப்படி இருக்காவிட்டால் தான் ஆச்சரியம். 20 வருடங்களுக்கு பின் தற்போதும் யாரேனும் ஒரு முஸ்லீமை ஒப்படைக்காவிட்டால் போர் தொடுப்போம் என்று அமெரிக்கா சொன்னாலும் மேல் சொன்ன இரண்டாவது பாயிண்ட்டையே திரும்ப சொல்வார்கள்.

11. அவர்களின் மோசமான நடவடிக்கை 2008ஆம் வருட காபூலில் உள்ள இந்திய தூதரக தாக்குதல். 58 பேர் இறந்தனர். பலர் காயமுற்றனர். ISI திட்டமிட்ட இந்த தாக்குதல் அல் கொய்தாவோ தாலிபனோ நடத்தியது. மிக தெளிவாக இந்தியாவிற்கு எதிரான மறைமுக போரில் பங்கேற்றுவிட்டனர்.

12. தற்போது எந்தவித இந்திய எதிர்ப்பு நடவடிக்கையில் இறங்கமாட்டோம் என்று சொல்லியிருக்கிறார்கள். இந்தியா கட்டிய அணைகள் ரோடுகளை ஒன்றும் செய்யவில்லை. இந்திய தூதரகத்தின் உரிமையாளருக்கு தொலைபேசியில் அழைத்து பாதுகாப்பிற்காக கட்டிடத்தை பூட்டி வைக்க ஆணையிட்டிருக்கிறார்கள். தோஹா ஒப்பந்தப்படி தங்கள் மண்ணில் இருந்து எந்த நாட்டிற்கு எதிரான தீவிரவாத நடவடிக்கையும் நடக்க விட மாட்டோம் என்கிறார்கள். ஆனால் நம்பமுடியாதவர்கள்.

எப்படி இனி தாலிபானை மோதி அரசு கையாள்கிறது என்பதே இந்திய வெளியுறவு கொள்கைக்கு சான்று. ஏழை நாடாக இருந்தபோது பின்பற்றிய பஞ்சசீல கொள்கையை விட தெற்காசியாவில் முக்கிய கையாக இருக்கும்போது எடுக்கும் முடிவுகளுக்கு மிகுந்த நெஞ்சுறுதியும் திட்டமிடலும் வேண்டும். கவனமாக நடந்துகொள்ள வேண்டிய நேரமிது என்பதில் மட்டும் சந்தேகமில்லை.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக்க பாஜக உறுதிபூண்டுள்ளது மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை திரும்பக் கொண்டு வருவதற்காக ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆய ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆயிரம் கோடிக்கான திட்டங்களை  கொண்டுவந்துள்ளோம் தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி, தமிழகத்தினுடைய ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் ப ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் பணி சார்ந்த ட்ரோன் மத்திய அரசு சார்பில் கடந்த2022-ம் ஆண்டு ‘நமோ ட்ரோன் ...

மருத்துவ செய்திகள்

வெண் தாமரைப் பூ

இதய நோய் இந்த இதழ்களைச் சாப்பிடுவதால் இருதய நோய்கள் நீங்கும். தொடர்ந்து சாப்பிட ஆண்மை ...

எட்டியின் மருத்துவ குணம்

எட்டிமரம் - புங்க மரம் போல் தோற்றமளிக்கும். ஆனால் இதில் ஆரஞ்சுப்பழ நிறத்தில் ...

நீரிழிவு நோயை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள:

நீரிழிவுநோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும் அதன்மூலம் பாதிப்புகள் ஏற்படாவண்ணம் பாதுகாத்துக் கொள்ளவும் உதவக்கூடிய ...