‘மக்கள் ஆசிர்வாதம்’ யாத்திரையை தொடங்கிவைத்தபின் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை இணையமைசச்ர் எல்.முருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
கடந்த ஜூலை மாதத்தில் பதவியேற்றபிறகு இன்று மக்களை யாத்திரை மூலமாக மக்களை சந்திக்கிறேன். இந்த யாத்திரை முழுவதும் மக்களை சந்திப்பதுதான். கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம் ஆகிய மாவட்டங்களில் அடுத்த மூன்றுநாட்கள் இந்த யாத்திரை நடைபெற உள்ளது. கொரோனா குறைந்துள்ளதால் யாத்திரை நடத்துகிறோம். கொரோனா பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளோடு மக்களை சந்திப்போம்.
சமூக நீதியைக் போற்றுவதில் முக்கிய பங்காற்றுவது பாஜகதான். என்போன்ற ஏழைகள் மத்திய அமைச்சராவது காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகளுக்கு பிடிக்கவில்லை. அதனால், நாடாளுமன்றத்தில் ஏழைஅமைச்சர்களை அறிமுகம் செய்வதை திட்டமிட்டு தடுத்து விட்டார்கள்.
திமுகவின் 100 நாட்களில் சொன்ன பலஅறிவுப்புகள், வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. திமுக நல்லதுசெய்தால் ஆதரிப்போம். செய்யமுடியாத வாக்குறுதிகளை அளித்து வாக்குகளை வாங்கிவிட்டு தற்போது நடைமுறைசிக்கல் என்று திமுக கூறிவருகிறது.
பெட்ரோல் விலைகுறைப்பு என்பதை திமுக தேர்தல் வாக்குறுதியாக கொடுத்தது. அதனை தற்போது நிறைவேற்றி யுள்ளார்கள். மத்திய அரசு கச்சா எண்ணெய் விலையைபொறுத்து பெட்ரோல் ,டீசல் விலையை குறைக்கும்.
மக்களின் நிலைப்பாடு, விருப்பம் என்ன என்பதை பொறுத்துதான் கொங்குநாடுவிவகாரம் இருக்கும். கூட்டணி குறித்து பாமக ராமதாஸ் பேசியது குறித்து அவரிடம்தான் கேட்க வேண்டும்.
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆவது ஒன்றும் புதிதல்ல. ஏற்கெனவே பலகோவில்களில் மாற்று சமுதாயத்தை சேர்ந்தவர்கள் அர்ச்சகர்களாக பணியாற்றி வருகின்றனர் என்று அண்ணாமலை கூறினார்.
சிறுநீர்க் கோளாறுகளுக்கு குணம் தர வல்லது. இரண்டு மூன்று மாதங்களுக்கு விடாமல் நெல்லிச்சாறு ... |
இரத்த கொதிப்பு (உயர் இரத்த அழுத்தம்) சமீபகாலமாக நம்நாட்டு மக்களில் பெரும்பாலானவர்களை பாதித்து ... |
சிவப்பு சித்ர மூல வேர்ப்பட்டையை நன்கு உலர்த்தி பொடித்து தேன் அல்லது பாலில் ... |
2grandchildren