இல.கணேசன் என்ற சாம்பிராஜ்யம்

பாஜகவின் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ்-ஐ தமிழகத்தில் காலூன்றச் செய்தவர்களில் இல.கணேசன் மிக முக்கியமானவராக பார்க்கப்படுகிறார்.

தஞ்சாவூரில் 1945 ஆம் ஆண்டு பிப்ரவரிமாதம் 16 ஆம் நாள் இலக்குமி ராகவன் – அலமேலு தம்பதியின் மகனாக பிறந்தார். சிறுவயதில் தந்தையை இழந்ததால் அண்ணன் அரவணைப்பில் வளர்ந்தார். ஆர்எஸ்எஸ் அமைப்பில் ஈடுபாடுகொண்டு திருமணம் செய்யாமலும், தனது வேலையை விட்டுவிட்டும் முழுநேர செயல்பாட்டாளராக பொதுவாழ்விற்கு வந்தார்.

மதுரை, ராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி மண்டலப் பொறுப்பாளர், குமரி முதல் திருச்சி வரையிலான மாவட்டங்களின் பொறுப்பாளர், தமிழக இணை அமைப்பாளர் என இல.கணேசன் படிப்படியாகத் தமிழகத்தில் பாஜகவின் முகமாகமாறினார். ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் தனது பயணத்தை தொடங்கிய இல.கணேசன் 1991-ல் பாஜக-வின் தேசியசெயற்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டார். பின்னர், விரைவிலேயே மாநில தலைவர் பதவிக்கு நிகரான மாநில அமைப்புச் செயலாளர் பதவி கட்சி தலைமையால் வழங்கப்பட்டது.

1970-ல் திருச்சியில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் கூட்டத்தில், அப்போதைய ஆர்.எஸ்.எஸ் மாநில அமைப்பாளர் ராமகோபாலன் முன்னிலையில், அரசு வேலையை விட்டுவிட்டு ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் முழு நேரப்பிரசாரகராக இணைந்தார். அதைத் தொடர்ந்து, திருமணம் செய்துகொள்ளாமல் ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்காகவும், பாஜக-விற்காகவும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டு பொதுவாழ்வில் இறங்கினார். குஜராத்தில் தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மாவட்ட பொறுப்பாளராக பதவிவகித்த நேரத்தில், ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தமிழ்நாட்டின் மாவட்ட பொறுப்பாளராக இல.கணேசன் பதவிவகித்தார். 30 ஆண்டுகளாக பாஜக தேசிய  செயற்குழு உறுப்பினராக இருந்துவரும் இல.கணேசன் அக்கட்சியின் தேசிய தலைவராகவும், தேசிய துணை தலைவராகவும், தமிழக தலைவராகவும் பதவிவகித்திருக்கிறார். 2009 மற்றும் 2014 ஆகிய நாடாளுமன்றத் தேர்தல்களில் பாஜக சார்பாக தென்சென்னை தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார். இருப்பினும், பின்னர் மத்திய பிரதேச மாநிலத்தின் சார்பாக மாநிலங்களவை உறுப்பினராக இவரை பாஜக தேர்வுசெய்து தோற்றாலும் எம்.பி என்ற அந்தஸ்தை வழங்கி சிறப்பித்தது.

சித்தாந்த ரீதியாகவும், கட்சிக் கொள்கைகளின் அடிப்படையிலும் தமிழக அரசியல் தலைவர்களுடன் இல.கணேசன் முரண்பட்டாலும், திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி, கம்யூனிஸ்ட் கட்சியின் சங்கரய்யா மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் என அனைவருடனும் அரசியலுக்கு அப்பாற்பட்டு அன்புடன் பழகக்கூடியவர். அரசியல்வாதியாக தேசியளவில் அறியப்படும் இல.கணேசன் பத்திரிகையாளரும்கூட. எழுதுவதில் ஆர்வம்கொண்ட இவர் பாஜகவின் ‘ஒரே நாடு’ பத்திரிகையின் ஆசிரியராகப் பணியாற்றியிருக்கிறார். மேலும், ‘பொற்றாமரை’ இலக்கிய அமைப்பையும் அரசியல் பணிகளுக்கு மத்தியில் தொய்வில்லாமல் நடத்தி வருகிறார்.

இல.கணேசனின் அரசியல்பயணத்தில் ஆளுநர் பதவி மிகப்பெரிய ‘மைல்கல்லாக’ அனைவராலும் பார்க்கப்படுகிறது. குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தமிழக பாஜக மூத்த தலைவர் இல.கணேசனை மணிப்பூர் மாநிலத்தின் 17-வது ஆளுநராக நியமித்து உத்தரவு பிறப்பித் திருக்கும் நிலையில், அவரின் பதவியேற்பு குறித்ததான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அடுத்த ஆண்டில் நான்மீண்டும் வர ...

அடுத்த ஆண்டில் நான்மீண்டும் வருவேன் வளர்ச்சிக்கு ஆர்வமுள்ள வட்டாரங்கள் என்ற நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் ...

காந்தி ஜெயந்தியையொட்டி தூய்மை ...

காந்தி ஜெயந்தியையொட்டி தூய்மைப் பணியில் ஈடுபட்ட மோடி காந்தி ஜெயந்தியையொட்டி பிரதமர் நரேந்திரமோடி, உள்துறை அமைச்சர் அமித் ...

பேச்சுசுதந்திரம் குறித்து யார ...

பேச்சுசுதந்திரம் குறித்து யாரும் எங்களுக்கு பாடம் நடத்த வேண்டாம் “கனடாவில் இந்திய துாதரக அதிகாரிகள் மிரட்டப்படுவதால், அவர்களுக்கு மிகப்பெரிய ...

பிஎம் விஸ்வகர்மா திட்டம் தொடங் ...

பிஎம் விஸ்வகர்மா திட்டம் தொடங்கப்பட்டது பிஎம் விஸ்வகர்மா திட்டத்தை பிரதமர் நரேந்திரமோடி டெல்லியில் நேற்று ...

இந்தியாவின் கலாசாரத்தின் மீது ...

இந்தியாவின் கலாசாரத்தின் மீது தாக்குதல் சுவாமி விவேகானந்தர், லோக்மான்ய திலகருக்கு உத்வேகம்அளித்த சனாதன தர்மத்தை ...

யாத்திரையை திசை திருப்பும் திம ...

யாத்திரையை  திசை திருப்பும் திமுக தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலையின் "என் மண், என் ...

மருத்துவ செய்திகள்

இனிப்பு

இயற்கையான பழ உணவு உடலுக்குத் தீங்கு விளைவிக்காது. நீரிழிவு உள்ளவர்கள் மிகவும் குறைவாகப் ...

சிறுநீரகக் கோளாறுகள்

உடலின் நலத்தைக் காப்பதில் சிறுநீரகங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. சிறுநீரகம் சரியாக செயல்படவில்லை ...

வசம்பு என்னும் அறிய மருந்து

சுக்கு, மிளகு, திப்பிலி போல இந்த வசம்பு முக்கிய இடத்தைப் பெற்ற மருந்துப் ...