“ஒரே நாடு ஒரே வாகனப் பதிவு எண்”

ஒரே நாடு ஒரே வாகனப் பதிவு எண்’- பிஎச் வரிசை எண் அறிமுகம்

வாகனஉரிமையாளர், மாநிலம் விட்டு மாநிலம் மாறும்போது மீண்டும் வாகனப் பதிவு செய்வதைத் தவிர்க்க, புதியவாகனப் பதிவில் பிஎச் என தொடங்கும் மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.

பொதுவாக ஒரு குறிப்பிட்ட மாநிலத்தில்இருந்து மற்றொரு மாநிலத்திற்கு எடுத்துச் செல்லப்படும் வாகனங்கள் போக்குவரத்து வாகன விதிகளின்படி ஓராண்டிற்குள் மறு பதிவு செய்யப்பட வேண்டும். இப்பதிவுடன் அந்த மாநிலத்திற்கான சாலைவரியையும் உரிமையாளர்கள் கட்ட வேண்டும்.

தொழில் மற்றும் வேலை ஆகியவை காரணமாக ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு மாறும் நிலை தற்போது பலருக்கு நிலவிவருகின்றது. அவ்வாறு மாறுவோர்களில் பலர் தங்களின் வாகனத்தை அந்த மாநிலத்திற்கு ஏற்றவாறு பதிவை மாற்றுவதில் பல்வேறு சிக்கல்களை அனுபவித்து வந்தனர்.

இந்தநிலையில் புதிய பாரத்வரிசை என்கிற புதிய பதிவு முறையை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இந்த அறிவிப்பின்படி பிஎச் வாகன பதிவு வசதி, தன்னார்வ அடிப்படையில் பாதுகாப்பு பணியாளர்கள், மத்திய, மாநில அரசு ஊழியர்கள், மத்திய, மாநில பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் துறை நிறுவனங்களின் ஊழியர்களுக்கு பொருந்தும். இந்தப் பதிவின்கீழ் மோட்டார் வாகன வரி கூடுதலாக இருக்கும்.

இதுகுறித்து சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது:

அரசு மற்றும் தனியார்துறை ஊழியர்கள் பணியிட மாற்றம் செய்யப்படும்போது அந்த நபர் பயன்படுத்தும் வாகனங்களை, வேறு எந்தமாநிலத்திலும் அதே பதிவெண்ணுடன் 12 மாதங்கள் பயன்படுத்திக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.

அதன் பின், அவர்கள் பணியாற்றும் மாநிலத்தில் தங்கள்வாகன எண்ணை மாற்ற வேண்டிய நிலை உள்ளது. இதனால் ஏற்படும் அலைச்சலைத் தவிர்க்கும் நோக்கில், வாகன உரிமையாளர் மாநிலம் விட்டு மாநிலம் மாறும் போது, மீண்டும் பதிவுசெய்வதைத் தவிர்க்க, புதிய வாகனப் பதிவில் ‘பிஎச் – பாரத் தொடர்’ (BH – Bharat series) எனத் தொடங்கும் பதிவு எண் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

டாக்டர் அம்பேத்கரின் நினைவு தி ...

டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டுப் பிரதமர் மரியாதை டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டுப் ...

டிரில்லியன் டாலர் பொருளாதாரத் ...

டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கிய இந்தியாவின் பயணத்தில் உயிரி்ப் பொருளாதாரத்துடன் நானோ அறிவியல் 5 டிரில்லியன்டாலர் பொருளாதாரத்தை நோக்கிய இந்தியாவின் பயணத்தில் உயிரி்ப் ...

மாற்றம் வேண்டும் என்பதில் மக்க ...

மாற்றம் வேண்டும் என்பதில் மக்கள் உறுதி தமிழக பாஜக தலைவர் அண்ணா மலை என் மண், ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை த ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை தனது நண்பன் என கூறுகிறது ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை நண்பனாக கருதுகிறது’ என பிரதமா் ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வரு ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வருவது அசோக் சிங்ஹல் அயோத்தி என்றால் ஶ்ரீ ராமனுக்கு அடுத்து நினைவுக்குவருவது அசோக் ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்தநாடாக மாறும் என்று ...

மருத்துவ செய்திகள்

சிறுகுறிஞ்சாவின் மருத்துவ குணம்

சிறுகுறிஞ்சா இலையை எடுத்துக் கொண்டு, தேவையான அளவு நாவல் கொட்டைகளை வெய்யிலில் காயவைத்து ...

தலைக்கு ஷாம்பு அவசியம் தானா?

இயற்கையே நம் தலையில் ஆயிலை சுரக்க வைக்கிறது. அந்த ஆயில் நம் ...

அலரியின் மருத்துவக் குணம்

இதில் வெண்மை, செம்மை, அரக்கு மஞ்சள், மஞ்சள் நிறமாகவும் பூக்கும் தன்மையுடையது. வெண்மையாகப் ...