தியாகச்சுடர் தேசபக்த திலகம் வ.உ.சிதம்பரம் பிள்ளை 150வது பிறந்த நாள் இன்று.
‘வேளாளன் சிறை புகுந்தான், தமிழகத்தார்
மன்னனென மீண்டான்’ என்றே
கேளாத கதைவிரைவிற் கேட்பாய் நீ
வருந்தலைஎன் கேண்மைக் கோவே!
தாளாண்மை சிறிதுகொலோ யாம்புரிவேம்
நீஇறைக்குத் தவங்கள் ஆற்றி,
வாளாண்மை நின்துணைவர் பெறுகெனவே
வாழ்த்துதிநீ வாழ்தி! வாழ்தி!
1908ல் வ.உ.சிதம்பரம் பிள்ளையும் சுப்பிரமணிய சிவாவும் ராஜ துரோக வழக்கில் கைதுசெய்யப்பட்டனர். சிறைவாசத்திலிருந்து மீண்டுவந்து வ.உ.சி திலகரைப்போல தமிழகத்தின் மாபெரும் தலைவராக வலம்வருவார் என்று பாரதி நம்பினார், கனவுகண்டார்.
ஆனால் சிறையில் செக்கிழுத்து உடலும் உள்ளமும் நொந்து விடுதலையாகி வெளியேவந்த வ.உ.சியை வரவேற்க நான்கு பேருக்கு மேல் இருக்கவில்லை.
வ.உ.சியின் தியாகத்தைக் கண்டு தமிழ்நாட்டு இளைஞர் மனதில் வீரஉணர்வு மிகுந்து ‘வாளாண்மை’ தோன்றவேண்டும் என்ற தன் விழைவையே பாரதி இப் பாடலில் வெளிப்படுத்துகிறார். வாஞ்சிநாதனின் வீரச் செயல் அதை மெய்ப்பித்தது. ஆனால், தமிழகத்தில் சுதேசியத்தின் குரல்வளை ஆங்கில அரசின் முதல்கட்ட ஒடுக்குமுறை நடவடிக்கைகளிலேயே நெரிக்கப்பட்டு விட்டது.
ஆயினும், மகாகவியின் வாக்கு பொய்க்கவில்லை. கப்பலோட்டிய தமிழரின் தேசபக்தியும், துணிவும், உறுதியும் இன்றும் நமக்கு உந்துதலைத் தந்து கொண்டிருக்கிறது. வ.உ.சி நம் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
விளையாட்டு வீர்கள் ஒரு குறிப்பிட்ட உணவுகளை விரும்பி உண்டால் உணவில் மேற்கூறியபடி பல்வேறு ... |
தினமும் எட்டுமுறை 8 அவுன்ஸ் டம்ளரில் தண்ணீர்குடியுங்கள். தண்ணீர் அதிகமாக குடிப்பது கொழுப்பைகரைத்திட ... |
வெள்ளரி காயை, தினசரி காலையில் எழுந்ததும் முகத்தில் தேய்த்துவர முகத்தில் அதிகமாக எண்ணெய் ... |