சீனர்களுக்கு சட்ட விரோதமாக, ‘விசா’ வாங்கித்தந்த விவகாரத்தில், சிவகங்கை எம்.பி., கார்த்திசிதம்பரம் விரைவில் கைதாகிறார். 50 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றது தொடர்பாகவும் வலுவான ஆதாரங்கள் சிக்கிஇருப்பதால், அவரை கைதுசெய்ய, சி.பி.ஐ., அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
தமிழகத்தைச் சேர்ந்த, காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரம், மத்திய நிதியமைச்சராக இருந்தார். அப்போது, அவரதுசெல்வாக்கை பயன்படுத்தி, அவரது மகனும், சிவகங்கை எம்.பி., யுமான கார்த்தி சிதம்பரம், சீன நாட்டினர் 263 பேருக்கு, சட்டவிரோதமாக ‘விசா’ பெற்றுத் தந்துள்ளார். இதற்காக, அவருக்கு 50 லட்சம் ரூபாய் லஞ்சம் தரப்பட்டுள்ளது. இதன் பின்னணியில், சென்னை கோடம் பாக்கத்தைச் சேர்ந்த, கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர ராமன், 55, என்பவர் இருந்துள்ளார். இதை, டில்லி சி.பி.ஐ., அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து, முதல் குற்றவாளியாக பாஸ்கரராமன், இரண்டாவது குற்றவாளியாக கார்த்திசிதம்பரம் மற்றும் அவர்களின் கூட்டாளிகள் மற்றும் அவர்கள் நடத்திவந்த நிறுவனங்கள் மீது, டில்லி சி.பி.ஐ., அதிகாரிகள் வழக்குப் பதிவுசெய்தனர். அதன் அடிப்படையில், இருதினங்களுக்கு முன், சென்னை, டில்லி, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில், 18 இடங்களில் சோதனை நடத்தினர். சென்னையில் உள்ள சிதம்பரம், கார்த்தி, பாஸ்கர ராமன்வீடு, அலுவலகங்களில், 12 மணி நேரத்திற்கு மேல் சோதனை நடத்தி, முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்.
சட்ட விரோதமாக விசாபெறுவது பற்றி, சீன நாட்டினருடன் பாஸ்கர ராமன், தகவல் பரிமாற்றம் நடத்தியதற்கான ஆதாரங்களை, சிபிஐ., அதிகாரிகள் கைப்பற்றினர். இதையடுத்து, பாஸ்கரராமன் கைது செய்யப்பட்டு, விமானம் வாயிலாக, டில்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டார். விசாமோசடி விவகாரத்தில், கார்த்திக்கு நெருக்கமான தொழில் வர்த்தர்கள் சிலருக்கும் தொடர்புஇருப்பது பற்றி, சி.பி.ஐ., அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
‘தனியார் நிறுவனம் சார்பில் மேற்கொள்ளப்பட்ட, மின்திட்ட பணிகளுக்காகத் தான் சீன நாட்டினர் வரவழைக்கப்பட்டனர்’ என, சி.பி.ஐ., அதிகாரிகளிடம் பாஸ்கரராமன் தெரிவித்துள்ளார். ஆனால், சீனநாட்டினர் உளவாளியாக கூட இருக்கலாம் என, சி.பி.ஐ., அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். அவர்கள் பற்றிய விபரங்களையும் திரட்டிவருகின்றனர்.
கார்த்தி சிதம்பரம் தற்போது, வெளிநாட்டில் உள்ளார். நாடு திரும்பியதும், கைது செய்யப்படுவார் என, சிபிஐ., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கார்த்தி சிதம்பரம் ஏற்கனவே, ஐஎன்எக்ஸ்., ‘மீடியா’ மற்றும் ‘ஏர்செல் மேக்சிஸ்’ ஊழல் விவகாரம் தொடர்பாக, இரண்டுமுறை கைதாகி, ஜாமினில் வெளியே வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
காய கல்ப மூலிகைகள் என்று போற்றப்படுபவைகளில் முக்கியமான இடத்தைப் பிடித்திருப்பது அருகம்புல்லாகும். இது ... |