தமிழ் பேசும் சீனர் என்ற ஆபத்து எச்சரிக்கை

*தமிழ் பேசும்சீனர், நமது வாழ்க்கை இன்னும் எண்ணற்ற பெயர்களில் சீனாவைசேர்ந்த பெண்கள் மழலை தமிழில் பேசுவதைபார்த்து இருப்பீர்கள் / நீங்களும் அதனை ரசித்து அந்தபக்கத்தை பின் தொடர்ந்து (follow ) செய்து இருக்கலாம்.*

*ஆனால் எப்போதாவது அந்தபக்கத்தில் china state controlled media என இருப்பதை கவனித்து இருக்கிறீர்களா ?* *முகநூல் நிறுவனம் ரஷ்யா, சீனா நாடுகளில்இருந்து அரசாங்கத்தால் கட்டுப்படுத்தப்படும் பக்கங்கள் பத்திரிக்கை ஆகியவற்றை state controlled media என வகைப்படுத்தியது, காரணம் இந்தஇரண்டு நாடுகளிலும் எதையும் அரசாங்க அனுமதி(தணிக்கை ) இல்லாமல் பேசுவதோ எழுதுவதோ இயலாது.*

*மேலும் ரஷ்யா, சீனா நாட்டைசேர்ந்தவர்கள் அமெரிக்க மக்களை குழப்பசெய்வதுடன் முகநூல் மூலம் நல்லவர்கள் போல்வேடமிட்டு அமெரிக்க மக்களை தங்களது காரியத்திற்கு பயன்படுத்தி உளவு பார்க்கவும், தாங்கள் நினைக்கும் போராட்டத்தை தூண்டவும் பயன் படுத்தியது கண்டறியப் பட்டு சீனாவை சேர்ந்தவர்கள் அமெரிக்கர்களை கவரவோ, விளம்பரம் செய்யவோ இயலாத நிலையில் மாற்றத்தை கொண்டுவந்தது.*

*தற்போது அமெரிக்காவில் என்ன திருட்டுத்தனத்தை சீனா செய்ததோ அதே போன்று இந்தியமொழிகள் அனைத்திலும் சீன இளம் பெண்களை பேசவைத்து தற்போது ஆட்கள் பிடிக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது, தற்போது சமையல் குறிப்புபோடும் சீன பெண்கள் நாளை நமது மாநில, நமது நாட்டின் அரசியல் குறித்தும் பேசுவார்கள், தமிழர்களை மூளை சலவை செய்வார்கள்.*

*நாளை மிகப்பெரும் ஆபத்து வரப்போவது தெரியாமல் தமிழ் மீதுகொண்ட ஆர்வம் அல்லது வெறியின் காரணமாக சீனா வலையில் சிக்கிவிடாதீர்கள். பார்ப்பதற்கு வேடிக்கையாக தோன்றலாம், ஆனால் உண்மை இதுதான்.*

*மத்திய மாநில உளவு அமைப்புகள் இப்போது இது குறித்து கவனத்தில்கொண்டு இருக்கும் என நம்புவோம், இருப்பினும் நம் வருங்கால சந்ததியினர் நலன் கருதி சீனாவில் இருந்து தமிழர்களை குறிவைத்துவரும் பல்வேறு தரவுகளை நம்பாதீர். முக்கியமாக அந்த வீடீயோக்களை பகிராதீர்.*

*அப்புறம் ஒரு கேள்வி தன் பிள்ளைகளை தமிழ் வழியில் படிக்க யோசிக்கும் பலருக்கு சீனாக்காரன் தமிழில் பேசுனா என்ன மலையாளத்தில் பேசினால் என்ன ? நம் மொழியை நம் தாய் மொழியை நம் பிள்ளைகளை பேசவைப்போம், பிறகு சீனாக்காரன் பேசுற தமிழை ரசிப்போம், இதில் ஒரு தமிழக ஊடகம் வேறு சீனாவில் கமழும் தமிழ் மணம்..* *கீழடி குறித்து பாடம் நடத்திய சீனபேராசிரியை என ஒரு வீடியோ பதிவு செய்து விளம்பரம் வேறு….*

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

டாக்டர் அம்பேத்கரின் நினைவு தி ...

டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டுப் பிரதமர் மரியாதை டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டுப் ...

டிரில்லியன் டாலர் பொருளாதாரத் ...

டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கிய இந்தியாவின் பயணத்தில் உயிரி்ப் பொருளாதாரத்துடன் நானோ அறிவியல் 5 டிரில்லியன்டாலர் பொருளாதாரத்தை நோக்கிய இந்தியாவின் பயணத்தில் உயிரி்ப் ...

மாற்றம் வேண்டும் என்பதில் மக்க ...

மாற்றம் வேண்டும் என்பதில் மக்கள் உறுதி தமிழக பாஜக தலைவர் அண்ணா மலை என் மண், ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை த ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை தனது நண்பன் என கூறுகிறது ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை நண்பனாக கருதுகிறது’ என பிரதமா் ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வரு ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வருவது அசோக் சிங்ஹல் அயோத்தி என்றால் ஶ்ரீ ராமனுக்கு அடுத்து நினைவுக்குவருவது அசோக் ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்தநாடாக மாறும் என்று ...

மருத்துவ செய்திகள்

வேப்பம் பூவின் மருத்துவக் குணம்

வேப்பமரத்தின் பூக்கள் உடலுக்கு உரமளிக்கும். வயிற்று வலியைக் குணப்படுத்தும். குடற்புழுக்களைக் கொல்லும். இரத்தத்தைச் ...

ஆல்பொகாடா பழம்

இதன் சுவை இனிப்பும்,கொஞ்சம் புளிப்பும் உடையதாய் இருக்கும். இது உடம்பிற்கு குளிரச்சியை உண்டாக்கும். இது ...

நம் உடலில் இரத்தத்தில் சர்க்கரை இருக்க வேண்டிய அளவு

உணவு உண்ணும் முன்பாக 60 – 110 மில்லிகிராம்% (வெறும் வயிற்றில் எடுக்க ...