விநாயகர் என்றால் ஒப்பில்லாத மேலானவர் என்று பொருள் படும். ஆனைமுகனுக்கு மேல் வேறு உயர்ந்தசக்தி ஒருவரும் இல்லை என்பதை உணர்த்துவதே விநாயகரின் தத்துவம். ஓம் எனும் ஓங்கார வடிவமாக விநாயகப் பெருமான் அவதரித்ததினத்தை நாம் விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடடுகிறோம்.
நாம் எந்த ஒரு செயலைச் செய்ய தொடங்கினாலும் விநாயகரை மனதாரநினைந்து துதித்து அச்செயலை ஆரம்பித்தால் சுபமாகமுடியும். ஆகையினாலேயே எழுதத்தொடங்கும் முன் பிள்ளையார் சுழி போட்டுத் தொடங்குகிறோம்.
பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் ஒருலட்சம் வீடுகளில் வாசலில் விநாயகர் சிலை வைத்து, விநாயகர் திரு அகவல் பாடி வழிபட இருக்கிறோம். தமிழர்கள் அனைவரும் தங்கள் வீட்டின் வாசலில் உங்கள் கோலத்தின் மீது விநாயகர் சிலையை வைத்து வழிபடுங்கள். வல்லப கணபதியை உங்கள் வாசலுக்கு வரச்சொல்லுங்கள். ‘பாலும்தெளிதேனும் பாகும் பருப்புமிவை நாலும் கலந்துனக்கு நான் தருவேன் கோலஞ்செய் துங்கக்கரிமுகத்துத் தூமணியே நீ எனக்கு சங்கத் தமிழ் மூன்றும் தா’ என்று பாடிய ஔவையார் இயற்றிய விநாயகர் அகவலை படிப்போம்.
மற்ற மதத்தினரையும் உங்கள் வழிபாட்டிற்கு அழையுங்கள். மரியாதையுடன் அவர்களுக்கும் நம் மனக்காயங்களை சொல்லுங்கள். விநாயகர் சிலைகளை மரபுப்படி நீங்களே சென்று நீர்நிலைகளில் கரையுங்கள்.
விநாயகரை நினைந்து செய்யும் அனைத்து செயல்களையும் பிள்ளையார் சிறப்பாக முடித்துத் தருவார் என்ற நம்பிக்கையுடன் அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்!
நன்றி அண்ணாமலை
பாஜக மாநில தலைவர்
உயர் மன அழுத்தம் நாம் தினமும் சாப்பிடும் உணவின் தன்மை . எளிதில் உணர்ச்சி வசப்படுதல். மது ... |
அல்லிப் பூ குளிர்ச்சி உள்ளது. உடலுக்கும் குளிர்ச்சியைத் தரவல்லது. எனவே உடலில் காணும் ... |
வெள்ளரி காயை, தினசரி காலையில் எழுந்ததும் முகத்தில் தேய்த்துவர முகத்தில் அதிகமாக எண்ணெய் ... |