தரமான உள்கட்டமைப்பு மூலம் பொருளாதாரம் வலுப்பெறுவதுடன், வேலை வாய்ப்பு பெருகும்” என ‘கதி சக்தி’ திட்டத்தை துவக்கிவைத்து பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
நாட்டின் 75வது சுதந்திரதின விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, உள்கட்டமைப்பு, பொருளாதார மேம்பாட்டிற்காக ரூ.100 லட்சம்கோடி மதிப்பில் ‘கதிசக்தி’ திட்டம் செயல்படுத்தப் படும் என அறிவித்திருந்தார்.
இந்ததிட்டத்தை துவக்கிவைத்து பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: அடுத்த 25 ஆண்டுக்கான அடித்தளத்தை நாங்கள் அமைத்துள்ளோம். தேசியமாஸ்டர் பிளான் ஆனது, 21ம் நூற்றாண்டின் வளர்ச்சி திட்டங்களுக்கு ‘கதிசக்தி’ அளிப்பதுடன், இந்த திட்டங்களை குறிப்பிட்ட காலத்திற்குள் நிறைவுபெற உதவும்.
முந்தைய காலங்களில் திட்டங்கள் நடைபெறுகிறது என பதாகைகளை பலஇடங்களில் பார்க்கமுடியும். திட்டங்கள் துவக்கப்பட்டாலும், அது நிறைவு பெறாது. ஆனால், அதனை நாங்கள் மாற்றிஉள்ளோம். நாங்கள் திட்டமிட்டு, வளர்ச்சி திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளோம். வளர்ச்சிக்கு தடையாக உள்ள விஷயங்கள் அகற்றப்படும். இலக்கு நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் திட்டப்பணிகளை முடிக்க நடவடிக்கை எடுக்கப் பட்டு உள்ளது.
உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு எந்தகட்சியும் முன்னுரிமை அளிப்பது கிடையாது. அக்கட்சிகளின் தேர்தல் அறிக்கையிலும் இடம்பெற்றதில்லை. ஆனால், நிலையான வளர்ச்சிக்கு தரமான உள்கட்டமைப்பு அவசியம். இதன்மூலம் பொருளாதாரம் கட்டமைக்கப்படுவதுடன், வேலைவாய்ப்பு பெருகுகிறது. இவ்வாறு மோடி பேசினார்.
குப்பைமேனி இலையைக் கொண்டு வந்து, காரமில்லாத அம்மியில் வைத்து அத்துடன் சிறிதளவு உப்புச் ... |
தினமும் எட்டுமுறை 8 அவுன்ஸ் டம்ளரில் தண்ணீர்குடியுங்கள். தண்ணீர் அதிகமாக குடிப்பது கொழுப்பைகரைத்திட ... |