மத்திய அரசின் மக்கள் கோரிக்கையை நிறைவேற்றுமா தமிழக அரசு

நாட்டின் மிக முக்கிய பண்டிகையான தீபாவளி தினத்தன்று, மக்களுக்கு,
தீபாவளி பரிசாக பெட்ரோல் மீதான கலால் வரி 5 ரூபாயும், டீசல் மீதான வரி 10 ரூபாயும் குறைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. பெட்ரோல், டீசல் மீதான வரிக்குறைப்பு, மக்களுக்கு பிரதமர் மோடி அவர்கள் வழங்கும் தீபாவளி பரிசு என பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா அவர்கள் கூறியுள்ளார். மத்திய அரசின் இம்முடிவினால் விலைவாசியும் குறையும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு தாம் வரியைக் குறைத்ததோடு நில்லாது, , மாநில அரசுகளும் எரிபொருள் மீதான வாட் வரியை குறைத்து, நுகர்வோருக்கு ஏற்பட்டிருக்கும் சுமையை குறைக்க வேண்டும் என மத்திய அரசு எல்லா மாநிலத்தையும் கேட்டுக் கொண்டுள்ளது.

நம் மாண்புமிகு பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களின் உத்தரவைப் தொடர்ந்து, பாஜக ஆளும் பல அரசுகளும் இதைப் பின்பற்றி, மாநில அரசின் பெரும் பங்கான வாட் வரியை உடன் குறைத்து உத்தரவிட்டனர்.

இதன்படி புதுச்சேரி அரசு பெட்ரோல் விலையை ₹ 7-8 ரூபாயும் & டீசல்விலையை ₹ 9-10 ரூபாயும், குறைத்து உத்தரவிட்டது. புதுச்சேரி அரசு இந்த வரி குறைப்பு இன்று முதல் அமலுக்கு வருவதாகவும் இதன்மூலம் பெட்ரோல் விலை லிட்டருக்கு 12 ரூபாய் 85 காசும், டீசல் விலை 19 ரூபாயும் குறையும் என புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் 1 லிட்டர் பெட்ரோல் 94 ரூபாய் 92 காசுகளாகவும் டீசல் 83 ரூபாய் 57 காசுகளாகவும் குறைந்துள்ளது.

இதர பாரதிய ஜனதா கட்சி ஆட்சி நடைபெறும் மாநிலங்களான கர்நாடகா, குஜராத், கோவா, திரிபுரா, மணிப்பூர், அசாம் ஆகிய மாநில அரசுகளில் ₹7 ரூபாயும், உத்தரபிரதேச மாநில அரசில் ₹12 ரூபாயும், உத்தரகாண்ட் மாநில அரசில் ₹2 ரூபாயும் மாநில அரசின் வாட் வரியில் குறைத்துக் கொள்ளப்பட்டது.

ஆனால் நம் தமிழகத்தில் தேர்தலுக்கு முன்பு எதிர்க்கட்சியாக இருந்த திமுக அரசு, மாநில அரசு வரியை குறைக்க வேண்டும் என்று குரல் கொடுத்தது, பிறகு தேர்தல் சமயத்தில், திமுக ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் விலையை குறைப்பதாக வாக்குறுதி கொடுத்தது.

இப்போது மத்திய அரசு தங்களுடைய பங்கிலே பெட்ரோலுக்கு ஐந்து ரூபாயும் டீசலுக்கு பத்து ரூபாயும் குறைத்திருக்கும்போது, மற்ற மாநில அரசுகள் மக்களின் வரிச் சுமையை குறைத்திருக்கும்போது, தமிழக அரசு தன் நிலைப்பாட்டை இன்னும் அறிவிக்கவில்லை.

மாநில அரசு தங்கள் பங்கை குறைக்க முன் வந்தால்தான் குறைப்பதாக கட்டியம் கூறிய தமிழக அரசு இன்னும் மௌனம் சாதிப்பது ஏன்?. தமிழக அரசு தீபாவளி பரிசாக மக்கள் வரிச் சுமையை குறைக்க முன்வருமா? அப்படி குறைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டு உள்ள மத்திய அரசின் வேண்டுகோளை நிறைவேற்றுமா? அல்லது வழக்கம் போல் நாடகங்களில் ஈடுபடுவார்களா?

பெட்ரோல், டீசல் விற்பனையை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும் என்பது பொது மக்களின் நீண்டகால கோரிக்கையாகும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் வருவாயை இழக்க வேண்டியிருக்கும் என்பதால் பல்வேறு மாநில அரசுகள் வாகன எரிபொருள் விற்பனை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டுவர எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

எனவே பெட்ரோல், டீசல் தற்போதைக்கு ஜிஎஸ்டி வரம்பிற்குள் வருவதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை. இருப்பினும் மத்திய அரசின் தற்போதைய விலை குறைப்பு நடவடிக்கை, பொதுமக்களுக்கு பண்டிகை காலத்தில் வழங்கப்படும் ஆறுதலாக, நிவாரணமாக இருக்கும். தீபாவளி பண்டிகை கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு இது கூடுதல் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

நன்றி K. அண்ணாமலை

பாரதிய ஜனதா கட்சித் தலைவர்

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மாற்றம் வேண்டும் என்பதில் மக்க ...

மாற்றம் வேண்டும் என்பதில் மக்கள் உறுதி தமிழக பாஜக தலைவர் அண்ணா மலை என் மண், ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை த ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை தனது நண்பன் என கூறுகிறது ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை நண்பனாக கருதுகிறது’ என பிரதமா் ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வரு ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வருவது அசோக் சிங்ஹல் அயோத்தி என்றால் ஶ்ரீ ராமனுக்கு அடுத்து நினைவுக்குவருவது அசோக் ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்தநாடாக மாறும் என்று ...

111 பதக்கங்கள் என்பது சிறிய எண்ணி ...

111 பதக்கங்கள் என்பது சிறிய எண்ணிக்கை அல்ல ஆசியபாரா விளையாட்டில் இந்தியாபெற்ற 111 பதக்கங்கள் என்பது சிறிய ...

தேசியக் கொடி அவமதிப்பு திமுக ம ...

தேசியக் கொடி அவமதிப்பு  திமுக மன்னிப்பு கேட்க வேண்டும் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்திற்கு இந்திய தேசியக் கொடியை கொண்டு ...

மருத்துவ செய்திகள்

உறக்கத்தின் முக்கியத்துவம்

மனிதனுக்குக் கிடைத்த மிகப் பெரிய நன்மைகளில் உறக்கம் ஒன்றாகும். ஆழ்ந்த உறக்கம் உடலுக்கு ...

பழங்களை பயன்படுத்தும் முறை

பழங்களில் உள்ள சர்க்கரைச்சத்து நம் உடலில் உள்ள தசைநார்களை உறுதிப்படுத்துகின்றன. ஆரஞ்சு, சாத்துக்குடி, ...

கருவேல் இலையின் மருத்துவக் குணம்

கருவேலன் கொழுந்துடன் அதற்கு பாதியளவு சீரகத்தை சேர்த்து நெகிழ அரைத்து வடைபோல் தட்டி ...