ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸ் ரேபிட்செஸ் போட்டி இணையம் வழியாக நடந்துவருகிறது. கடந்த 21ம்தேதி நடந்த 8வது சுற்றில் உலகின் நம்பர் 1 செஸ் வீரர் கார்ல்சனை எதிர்கொண்டார் தமிழகத்தைசேர்ந்த 16 வயது இளம் வீரரான பிரக்ஞானந்தா.
இந்த போட்டிக்கு முந்தைய 7 போட்டிகளிலும் சுமாராகவே விளையாடியிருந்த பிரக்ஞானந்தா, கார்ல்சனுக்கு எதிராக மிகச்சிறப்பாக விளையாடினார். உலகின் நம்பர் 1 வீரரான கார்ல்சனுக்கு டஃப் கொடுத்த இளம்வீரர் பிரக்ஞானந்தா, போட்டியின் முடிவில் கார்ல்சனை வீழ்த்தி வெற்றிபெற்றார்.
உலக செஸ் சாம்பியன் கார்ல்சனை தோற்கடித்து உலகளவில் கவனம் ஈர்த்த பிரக்ஞானந்தாவுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும் குவிந்து வருகின்றன.
அந்தவகையில், பிரதமர் நரேந்திர மோடி பிரக்ஞானந்தாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி பதிவிட்டுள்ள டுவீட்டில், நமது இளம் ஜீனியஸ் பிரக்ஞானந்தாவின் வெற்றியை நாம் அனைவரும் கொண்டாடிவருகிறார். சாம்பியன்மாக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி பிரக்ஞானந்தா பெருமைக்குரிய வெற்றியை பெற்றிருக்கிறார். இளம் திறமையான பிரக்ஞானந்தாவிற்கு எனதுவாழ்த்துக்கள். எதிர்காலத்தில் மேலும் பல சாதனைகளை படைக்கவும் வாழ்த்துகிறேன் என்ற பிரதமர்மோடி டுவீட் செய்துள்ளார்.
பொதுவாக மனித தோலை தோலமைப்பு பல தொழில் விற்ப்பன்னர் என அழைக்கலாம் உடலின் ... |
வெள்ளரி காய் சிறுநீரகம் தொடர்பான நோய்களை நீக்கும். தாகம் தணிக்கும், நரம்புகளுக்கு வலிமை ... |
கரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் காரணம். இதில் ... |