நமது கட்சியின் முன்னாள் மாநில தலைவரும் மேற்கு தெலுங்கானா மாநில ஆளுநரும் புதுச்சேரி பிரதேசத்தின் துணைநிலை ஆளுநருமான டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்களின் மேன்மைக்கும் பெருமைக்கும் சிறுமை செய்கிறோம் என்று நினைத்துக்கொண்டு, பெயர் சொல்லக்கூட தகுதியற்ற திமுகவைச் சேர்ந்தவர் மிகவும் தரம் தாழ்ந்து விமர்சித்த செய்தியை தமிழகத்தை சேர்ந்த எந்த தாய்மாரும் விரும்பமாட்டார்கள்.
பெண்களை இழிவுபடுத்துவதை பெருமையாக நினைத்துக் கொண்டு, நிலை தாழ்ந்து தரங்கெட்டு விமர்சிக்கும் இந்த திமுகவின் வழக்கத்தை நான் கண்டிக்கக் கூட விரும்பவில்லை. ஏனென்றால் அவர்கள் திருத்த முடியாதவர்கள்.
சட்டமன்றத்தில் எங்கள் எம்எல்ஏக்களின் செயல்பாட்டை பொறுத்துக் கொள்ள முடியாமல் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் தினமும் ஏதாவது கட்டுக்கதையை அவர்கள் அவிழ்த்து விட்டுக் கொண்டிருக்கிறார்கள். நாங்களும் சட்டரீதியாக நேர்மையாக அதற்கு ஒவ்வொன்றாக பதில் அளித்துக் கொண்டிருக்கிறோம். அவர்களுக்கும் புதிது புதிதாக பல கட்டுக் கதைகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
காங்கிரஸ் முதலமைச்சர் சித்தராமையா அவர்கள் ஆட்சிக்காலத்தில் கர்நாடகத்தில் நான் காவல்துறை பணியில் இருந்த போது பணப்பட்டுவாடாவில் ஏதோ தகவல் சிக்கியிருக்கிறது என்று ஒரு புதிய கட்டுக்கதையை கிளப்பி இருக்கிறார்கள்.
கர்நாடகத்தில் இருந்த முதலமைச்சர்கள் பலரிடம் வேலை பார்த்த அனுபவம் எனக்கு இருக்கிறது கடைசியாக திரு குமாரசாமி அவர்கள் முதல்வராக இருந்தபோது நான் ராஜினாமா செய்ய கடிதம் கொடுத்து இருந்தபோது ஒரு நாள் முழுவதும் அதனை ஏற்றுக்கொள்ள முடியாமல் வைத்திருந்து கனத்த மனதுடன் எனக்கு பணி விடுப்பு கொடுத்த அந்த நாளை நான் மறக்க முடியாது.
ஆட்சியாளர்கள் தவறுக்கு மேல் தவறுகளை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்கள். அதை பார்த்துகொண்டு எங்களால் சும்மா இருக்க முடியாது எதிர்த்துக் கேள்வி கேட்டுக் கொண்டுதான் இருப்போம். அதற்காக எங்கள் மீது பொய்யான புனைகதைகளை உருவாக்கி அதை தாக்குதல் நடத்துகிறோம் என்று அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் திமுக அதன் நம்பகத்தன்மையை இழந்து கொண்டிருக்கிறது.
காலம் வரும்போது கைது நடவடிக்கை இருக்கும் என்று ஒரு பத்திரிக்கைக்கு பேட்டி கொடுத்து இருக்கிறார்கள்.
நாங்களும் ஆட்சியில் தான் இருக்கிறோம் என்பதை திமுகவினர் மறந்துவிடக்கூடாது.
ஒரு தவறும் செய்யாத என்னையே கைது செய்வோம் என நீங்கள் அச்சுறுத்துகிறீர்கள். 2ஜி வழக்கில் குற்றப்பத்திரிகை மற்றும் அமலாக்கப் பிரிவினரால் திமுகவினர் மேல் பதியப்பட்டிருக்கிறது. திமுகவின் அமைச்சரவையில் இருப்பவரே அமலாக்கப் பிரிவில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். நான் கைது செய்யப்படுவேன் என்றால் அப்போது திமுகவில் பாதிக்கு மேற்பட்டவர்கள் கைதாகி இருப்பார்கள்.
மத்திய தலைமை நடவடிக்கை எடுப்பதாகவும் விரைவில் தலைமை மாற்றப்படும் என்றும் செய்தி பரப்புகிறார்கள். பாரதிய ஜனதா கட்சி பற்றி திமுகவினர் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை. எங்கள் கட்சியில் யாரும் பரம்பரை தலைவராகவும் நிரந்தர தலைவராக இருப்பதில்லை. என் எதிர்ல இருப்பவர்களில் ஒருவர் அடுத்த தலைவராக வரக்கூடிய வாய்ப்பு பாரதிய ஜனதா கட்சியில் மட்டும்தான் உண்டு.
ஆகவே திரு ஆர் எஸ் பாரதி அவர்கள் அவதூறு வழக்கு தொடுத்து 610 கோடி ரூபாய்க்கு இதுவரை மொத்தமாக நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இதையெல்லாம் கண்டு நாங்கள் அஞ்சப்போவதில்லை. பின்தங்கப் போவதில்லை இன்னும் கூடுதல் வேகத்துடன், தவறுகளை துணிச்சலாக தட்டிக் கேட்போம். கோடான கோடி பாரதிய ஜனதா கட்சியின் தொண்டர்கள் துணிச்சலுடன் உங்களையெல்லாம் எதிர்க்க தயாராக இருக்கிறார்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
நன்றி அண்ணாமலை
பாஜக மாநில தலைவர்
சரியான நேரத்தில் தடுப்பூசி போடாப்படாத குழந்தைகள், வெயில் காலங்களில் அம்மை தொற்றுக்கு உள்ளாகிறார்கள் ... |
பூக்கும் தாவர இனத்தைச்சேர்ந்த ஓர் பேரினமாகும். தமிழில் இத்தாவரம் கற்றாழை, குமரி, கன்னி. ... |
நீரிழிவுநோய்க் கட்டுப்பாட்டில் உணவுமுறை ஒரு முக்கியப்பங்கு வகிக்கிறது. அதனால் நீரிழிவுநோய் உள்ளவர்கள் சரியான, ... |