பாரதத்தை அமெரிக்காவுடன் ஒப்பிடாதீர

எந்த ஒரு நாட்டையும் அதன் அதிகாரப்பூர்வமான பெயரைத்தவிர வேறு பெயரால் குறிப்பிடுவது சட்ட பூர்வமாகவும் நடைமுறையிலும் நிச்சயமாகப் பொருத்தமாக இருக்காது. அவ்வாறு குறிப்பிடுவது நியாயமாகவும் அறிவுக்கு உகந்ததாகவும் இருக்குமா என்பது கேள்வி. அந்த கேள்விக்கு பதிலளிக்க முயற்சிக்கிறேன்.

United states of america என்ற சொற்றொடர் எதைக் குறிக்கிறது என்றால் அமெரிக்காவில் உள்ள மாநிலங்கள் அனைத்தும் இணைந்து இருக்கின்றன. United States என்று பன்மையில் குறிப்பிடப்பட்டு இருப்பது கவனித்துப் பார்த்தால் அதன் சட்டபூர்வ பெயரே ஒற்றைத் தேசமாக குறிப்பிடாமல் பல்வேறு மாநிலங்களில் கூட்டமைப்பாக குறிப்பிடுகிறது.

Congress renames the nation “United States of America”

அதே சொற்றொடரை இந்தியாவிற்கு பயன்படுத்த முடியுமா என்று பார்க்கும்போது 1947 க்கு செல்ல வேண்டும். சுதந்திரம் அளிக்க முடிவு செய்த பிரிட்டன் அரசு இந்தியா பாகிஸ்தான் என்ற இரு தேசங்களை அறிவித்தது. இந்த இரண்டு தேசங்களிலும் சேராமல் அப்போது இருந்த ஒரு சில மாகாணங்களுக்கு இவ்விரண்டு தேசத்திலும் ஏதோ ஒரு தேசத்தில் இணையவும் தனியாகவே இருக்கவும் வாய்ப்பு வழங்கப்பட்டது. காலப்போக்கில் அனைத்து மாகாணங்களும் ஏதோ ஒரு தேசத்தின் பகுதியாக மாறின. இந்தியாவில் உள்ள மாநிலங்கள் அனைத்தும் இணைந்து இந்தியா உருவாக வில்லை. இந்தியா என்று தேசத்தில் குறிப்பிட்ட மாகாணங்கள் இணைக்கப்பட்டன. பிறகு நிர்வாக வசதிக்காகப் பல்வேறு மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டன.

இதில்கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால் மாநிலங்களின் எல்லையை எப்பொழுது வேண்டுமானாலும் மாற்றி அமைக்கவும் மாநிலங்களை இணைக்கும் பிரிக்கவும் மத்திய அரசுக்கு முழுஅதிகாரம் உண்டு. அமெரிக்காவில் அது சாத்தியமே இல்லை சம்பந்தப்பட்ட இரு மாநிலங்களும் ஒப்புக்கொண்ட பிறகுதான் மத்திய அரசின் பார்வைக்கு எடுத்துச் செல்லப்படும். ஏனென்றால் இந்தியா பல மாநிலங்களாக நிர்வாக வசதிக்காக பிரிக்கப்பட்டிருக்கும் ஒரே நாடு.

அமெரிக்காவில் தங்கள் மாநில எல்லைகளை மூடவும் சுங்கம்வசூலிக்கவும் மாநிலங்களுக்கு முழு உரிமைஉண்டு. இந்தியாவில் மாநிலங்களுக்கு அத்தகைய உரிமைகள் எதுவும்கிடையாது.அமெரிக்காவில் வரையறுக்கப்பட்டது தவிர மிச்சமிருக்கும் அதிகாரங்கள் அனைத்தும் மாநிலங்களுக்கு உரிமையுடையதாகும். இந்தியாவில் வரையறுக்கப்பட்ட தவிர மிச்சமிருக்கும் அதிகாரங்கள் அனைத்தும் மத்தியஅரசுடையது.

மத்திய அரசுக்கு எதிராகக் குற்றமே புரிந்திருந்தாலும் ஒருமாநிலத்தின் கவர்னரை நீக்க அமெரிக்க அதிபருக்கு அதிகாரம்கிடையாது. இந்தியாவிலோ எந்த ஒரு மாநில அரசையும் சட்டப் பிரிவு 356 பயன்படுத்தி கலைக்கும் உரிமை இந்திய அரசுக்கு உண்டு.

அமெரிக்காவில் மத்திய அரசின் சட்டத்தை மாநில அரசு செயல்படுத்தாமல் இருக்கும் வாய்ப்பும் உள்ளது. அதிகார பூர்வமாகவே) இந்தியாவில் மத்திய அரசின் சட்டம் நிச்சயமாக மாநிலத்திலும் செயல்படுத்தப்படும்.

இதில் முக்கியமாகக் கருத்தில் கொள்ளப்பட வேண்டிய விஷயங்கள் இந்தியத் திருநாட்டில் மத்தியஅரசிற்கான இந்த அதிகாரங்களை எல்லாம் வரையறுத்தது இப்போது உள்ள அரசாங்கமோ இதற்குமுந்தைய அரசாங்கமோ அல்ல. நம் அரசியல் சாசனத்தை வடிவமைத்தவர்கள் பல்வேறு விஷயங்களை கருத்தில்கொண்டும் நீண்ட நெடிய காலம் ஆராய்ச்சி செய்தும் கடுமையாக உழைத்தும் இந்தியாவிற்கு பொருந்தக்கூடிய அரசியல் சாசனத்தை உருவாக்கியுள்ளார்கள். ஒரேதேர்தலில் வெற்றி பெறுவதன் மூலம் அரசுக்கு முழுஅதிகாரம் சென்றுவிடக்கூடாது என்பதற்காக ராஜ்யசபாவை உருவாக்கியுள்ளனர். இந்திய மாநிலங்களின் சட்டமன்ற உறுப்பினர்கள் மூலமாக ராஜ்யசபா உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப் படுவதன் மூலம் மாநிலங்களுக்கு எதிராக மத்திய அரசு அநியாயமாக எதுவும் செய்துவிட முடியாது என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்தியா ஒரு தேசம்அல்ல பல்வேறு நாடுகளின் கூட்டமைப்பு என்று தொடர்ந்து முட்டாள்தனமாக கோஷமிட்டுவரும் நபர்கள் அரசியல் சாசனத்தை படித்து உணர்ந்தால் நன்றாக இருக்கும்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அமைச்சரவையில் மிஸ்ஸான தலைவர்க ...

அமைச்சரவையில் மிஸ்ஸான தலைவர்கள் மோடி தலைமையிலான 3.o அமைச்சரவை பதவியேற்கும் நிலையில், இதில் ...

நரேந்திரமோடி பிரதமராக 3-வது முற ...

நரேந்திரமோடி பிரதமராக 3-வது முறையாக பதவியேற்றுக் கொண்டார் பிரதமர் நரேந்திரமோடி நாட்டின் பிரதமராக 3-வது முறையாக பதவியேற்றுக் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

மருத்துவ செய்திகள்

கோழிக்கறியின் மருத்துவக் குணம்

சேவல் இறைச்சி அதிக சூடு உண்டாக்கும். அன்றியும் தாது நஷ்டம் உண்டாகும். ஆகையால் ...

கறிவேப்பிலை | கறிவேப்பிலையின் மருத்துவ குணம்

கொத்துமல்லி, புதினா, போன்று கறிவேப்பிலையையும் நாம் வாசனைக்காக பல நூறு ஆண்டுகளாக பயன்படுத்தி ...

யானைக்கால் நோய் குணமாக

முற்றிய வேப்பிலை, தும்பை இலை, குப்பைமேனி இல்லை, கீழா நெல்லி இலை, முருங்கைக் ...