8 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு கொண்டாட்டங்களுக்கு தயாராகும் பாஜக

பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான தேஜ., கூட்டணி அரசு, 2014ல் பொறுப்பேற்று எட்டு ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு, சிறப்பான கொண்டாட்டங்களுக்கு, பாஜ., தயாராகிவருகிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக, கொரோனா காரணமாக, எந்தவொரு நிகழ்ச்சியும் நடத்தமுடியாத நிலை இருந்தது. அவற்றை ஈடுகட்டும் வகையில், இந்தஆண்டு மொத்தமாக கொண்டாடிவிட வேண்டுமென, நிர்வாகிகளும், தொண்டர்களும் ஆர்வமாக உள்ளனர்.இதையடுத்து, கடந்த சிலவாரங்களாகவே மேலிடத்தலைவர்கள் இது பற்றிய ஆலோசனையில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், பா.ஜ., தேசியதலைவர் ஜேபி.நட்டா உத்தரவின் பேரில், 26 பக்கங்களை கொண்ட சிறுகையேடு தயாரிக்கப்பட்டுள்ளது.

‘சேவை, சிறந்தநிர்வாகம், ஏழைகளுக்கான நலன்கள்’ என்ற தலைப்பிலான இந்த கையேட்டில், மத்தியஅரசின் நலத்திட்டங்களை பொதுமக்கள் மத்தியில் எடுத்துச்செல்ல வேண்டு மென அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதுபற்றிய விபரம்:ஒவ்வொரு பா.ஜ., தொண்டரும், 10 நாட்களுக்கு, மொத்தம் 72 மணிநேரம் செலவிட்டு, மக்கள் நலத்திட்டங்கள் அனைத்தையும் பிரசாரம் செய்திட வேண்டும். கொரோனா தடுப்பூசி பணிகள் உள்ளிட்ட, பொது சேவைகளில் ஈடுபட்ட கட்சி தொண்டர்கள், மற்றும் மத்திய அரசின் நலத்திட்டங்களின் நேரடி பயனாளிகளை அடையாளம்கண்டு, அவர்களை கவுரவிக்க வேண்டும்.பா.ஜ., அரசு, பல்வேறு துறைகளில், கடந்த எட்டு ஆண்டுகளில் செய்துள்ள சாதனைகளை, பாடல்கள், இணையதளம், பாக்கெட் டயரிகள் என விதவிதமான வழிகள் வாயிலாக மக்களிடம் சென்று சேர்க்கவேண்டும்.

சமூக வலைதளங்கள், சினிமா தியேட்டர்கள் ஆகியவற்றிலும், மத்தியஅரசின் சேவைகளை விளம்பர படங்களாக எடுத்து பொது மக்களிடம் வெளிப்படுத்த வேண்டும்.மத்திய அமைச்சர்கள், நடைபயணம் மேற்கொண்டு மக்களைச்சந்திக்க வேண்டும். பா.ஜ., ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள், மாநில அரசின் நலத் திட்டங்கள் குறித்த சிறுபுத்தகங்களை தயாரித்து மக்களிடம் வினியோகிக்க வேண்டும்.

சிறுபான்மை சமூகங்களுக்காக செய்யப்பட்ட நலத்திட்ட நடவடிக்கைகள்குறித்து வீதிகள் தோறும் பிரசாரங்கள், சிறுசிறு ஆலோசனை கூட்டங்கள், கருத்தரங்குகளை, வரும் ஜுன் 6 முதல் 8 வரையில் நடத்தவேண்டும்.இளைஞரணி சார்பில், ஜுன் 7 முதல் 13 வரையில், மாவட்டங்கள் தோறும், பைக்பேரணிகளை நடத்த வேண்டும்; அவற்றில் மத்திய அமைச்சர்கள் பங்கேற்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெரும்பாலான மாநகராட்சிகள் ‘பா ...

பெரும்பாலான மாநகராட்சிகள் ‘பாஜக – சிவ சேனா’ கூட்டணி வசம் இந்தியாவின் பணக்கார மாநகராட்சியான மும்பை உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட ...

வாழ வேண்டும் என்றால், பா.ஜ., வேண் ...

வாழ வேண்டும் என்றால், பா.ஜ., வேண்டும் “மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜியின் காட்டாட்சிக்கு விரைவில் ...

வடகிழக்கு இந்தியாவின் வளர்ச்ச ...

வடகிழக்கு இந்தியாவின் வளர்ச்சி திருவிழா பிரதமர் நரேந்திர மோடி இன்று குவஹாத்தியில் உள்ள லோகப்ரியா ...

S. I. R. உருப்படியான வேலையை முடித்த ...

S. I. R.  உருப்படியான வேலையை  முடித்திருக்கிறது தேர்தல் கமிஷன் S. I. R. மூலம் உருப்படியான ...

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபி ...

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபின் பா.ஜ.க-விற்கு புதிய தலைவர் நியமிக்கும்திட்டம் நீண்ட நாட்களாக கிடப்பில் ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும் ம ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும்  முக்கோண அரசியல்! தற்போதைய முக்கோண அரசியல் போட்டி அதிக சுவாரசியத்தை ஏற்படுத்தி ...

மருத்துவ செய்திகள்

கருவுற்றிருக்கும் போது உணவில் கவனிக்க வேண்டியவை

சாதாரணமாக வேலை செய்கின்ற பெண்களுக்குத் தேவைப்படுகின்ற கலோரியை விட மாதமாய் இருக்கிற கர்ப்பிணிகளுக்கு ...

மிளகாயின் மருத்துவக் குணம்

பசி தூண்டியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.

உடல் சூட்டை தணிக்கும் எலுமிச்சை

மஞ்சள் நிறத்துல இருக்குற எலுமிச்சையை உங்களுக்கு நன்றாக தெரிஞ்சிருக்கும். எலுமிச்சை பழம், காய்,இலை ...