இன்னும் 2 வருடங்களில் 50சதவீத விபத்து குறைஞ்சிடும்.. மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உறுதி!

பீகார் மாநிலத்தில் சுல்தாங்கஞ்ச் பகுதியில் கடந்த ஏப்ரல்மாதம் 20ம் தேதி இடியுடன் கூடிய கனமழைபெய்தது. இதில் கங்கைநதியின் மீது கட்டப்பட்டு வரும் பாலத்தின் ஒருபகுதி இடிந்து விழுந்தது. புதிதாக கட்டப்பட்டு வரும்பாலம் இடிந்து விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பாலம் இடிந்து விழுந்தது குறித்து விசாரணை நடத்த அம்மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்தியசாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி கடந்த ஏப்ரல் மாதம் 29ம் தேதி, பீகார் மாநிலம் சுல்தாங்கஞ்ச் என்ற இடத்தில் பாலம் ஒன்று இடிந்துவிழுந்தது. இதற்கான காரணத்தை, எனது செயலாளரிடம் கேட்டேன். பலமான காற்று வீசியதால் பாலம் இடிந்து விழுந்ததாக சொன்னார். இதுபோன்ற காரணத்தை ஒருஐஏஎஸ் அதிகாரி எப்படி நம்புகிறார் என்றும், முறையான காரணத்தை விசாரிக்க உத்தரவிட்டுள்ளதாகவும் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, இரண்டு ஆண்டுகளில் விபத்துகளை 50 சதவீதம்குறைக்கவும், அடிக்கடி விபத்துகள் நிகழும் சாலைகளில் உள்ள கரும்புள்ளிகளை கண்டறியவும் தனது அமைச்சக அதிகாரிகளை கேட்டுகொண்டுள்ளார்.

சாலைபாதுகாப்பு பிரச்சினைகள் குறித்து அதிகாரிகள், பொதுமக்களுடன் இணைந்து கூட்டாக விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும் என்று கட்காரி வலியுறுத்தியுள்ளார். இது மிகவும் தீவிரமான பிரச்சனை என்றும் சாலைவிபத்துகளை குறைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

சாலை பாதுகாப்பை மேம்படுத்த சேவ்லைஃப் அறக்கட்டளை முன்வைத்த பல்வேறு உத்திகள் மற்றும் தீர்வுகளை விரைவில்பரிசீலித்து செயல்படுத்த மூத்த அதிகாரிகளுக்கு கட்கரி உத்தரவிட்டுள்ளார்.

நடவடிக்கை எடுக்கும் போது, ​​உடனடி நடவடிக்கைகள், இடைக்கால நடவடிக்கைகள் மற்றும் நீண்ட கால நடவடிக்கைகள் என 3 விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ள கட்கரி, அனைத்து மண்டல அலுவலர்கள் மற்றும் திட்டஇயக்குநர்கள் விபத்துக்கள் அற்ற பகுதியை உருவாக்குவோம் என விபத்துக்கான உறுதிமொழி எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

மத்திய அரசு இதற்கு முன்னதாக சாலைவிபத்துக்களை குறைக்கும் விதமாக குழந்தைகளுக்கு ஹெல்மேட் கட்டாயம், வாகனத்தின் அனைத்து வேரியன்ட்கள் மற்றும் பிரிவுகளிலும் குறைந்தபட்சம் 6 ஏர்பேக்குகள் கட்டாயம் போன்ற விதிமுறைகளை அறிமுகப்படுத்தி வருகிறது. மேலும் விபத்துகளை 50 சதவீதம் குறைக்கும்நோக்கில், மத்திய அமைச்சர் நிதின்கட்கரி, மகாராஷ்டிராவில் உள்ள நாக்பூரில், செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் திட்டமான “iRASTE” திட்டத்தை, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சோதனை முயற்சியாக தொடங்கிவைத்தது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

சாலைகளை தூய்மையாக வைத்திருக்க ...

சாலைகளை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் -நிதின் கட்கரி “யாராவது பான் மசாலா சாப்பிட்டுவிட்டு சாலையில் துப்புவதை பார்த்தால், ...

மேற்காசியா போர் பதற்றம் அதிகரி ...

மேற்காசியா போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் பிரதமர் மோடி ஆலோசனை மேற்காசியா போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் இன்று பாதுகாப்பு ...

தூய்மை இந்தியா திட்டத்தின் மூல ...

தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் இந்தியா பிரகாசிக்கும் -மோடி பெருமிதம் 'தூய்மை இந்தியா திட்டம் எந்த அளவுக்கு வெற்றி பெறுகிறதோ ...

காங்கிரசை ஆதரிக்கும் பாகிஸ்தா ...

காங்கிரசை ஆதரிக்கும் பாகிஸ்தான் அரசு -பிரதமர் மோடி சாடல் '' காங்கிரஸ் ஒரு ஏமாற்றுக் கட்சி. அதனை பாகிஸ்தான் ...

ஜனநாயகம் எங்கே உள்ளது தமிழிசை க ...

ஜனநாயகம் எங்கே உள்ளது தமிழிசை கேள்வி உதயநிதியை துணை முதல்வராக்க வேண்டும் என வலியுறுத்தும்படி, கூட்டணிக் ...

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் ...

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திவரும் நிலையில் பிரதமர் மோடி இஸ்ரேல் பிரதமருடன் ஆலோசனை லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் ...

மருத்துவ செய்திகள்

தொப்புள் கொடி உயிர் அணு (Stem Cord Cells)

Stem Cord Cells (தொப்புள் கொடி உயிர் அணு) சேமிப்பு பற்றி இப்பொழுது ...

வயிற்றுவலி குணமாக

நற்சீரகம் 100 கிராம், ஓமம் 100 கிராம் இரண்டையும் இளம் வறுப்பாய் வறுத்து ...

நீரிழிவுநோய் உடையவர்களுக்குத் தேவைப்படும் உடற்பயிற்சிகள்

நீரிழிவுநோய் கட்டுப்பாட்டில்,உடற்பயிற்சி மிக முக்கிய இடத்தைப் பெறுகிறது. எனவே நீரிழிவுநோய் உடையவர்கள் தொடர்ந்து ...