தமிழ் சமுதாயம், வேளாண்மையை அடிப் படையாகக் கொண்டது. மாடுகள், விவசாயிகளின் நண்பனாக இருந்திருக்கிறதேதவிர, அது உணவாக பயன்படுத்திய வரலாறு இல்லை.
புலால் உணவு, இந்தநாட்டை ஆக்கிரமித்த அன்னியர்களிடம் தொற்றிய வியாதி. சிலர் வலிந்து தமிழ் சமுதாயத்தின் மீது, குறிப்பாக ஆதிதிராவிடமக்கள் மீது, மாட்டுக்கறி அடையாளத்தை திணிக்க நினைக்கின்றனர். தமிழர்களின் 75 சதவீதம் பேர், எந்தக்காலத்திலும் மாட்டுக்கறி உணவை தொடாதவர்கள். மீதமுள்ள 25 சதவீத மக்களும், சில சூழல்களில் மட்டுமே மாட்டுக்கறி சாப்பிட கூடியவர்கள். முகலாயர்கள், ஆங்கிலேயர்களால் செய்யமுடியாததை, அம்பேத்கர் பெயரில் அரசியல் நடத்தும் திருமாவளவன் போன்றவர்கள் முயற்சிக் கின்றனர். சிறுபான்மையினரின் ஓட்டுகளைப் பெறும் அரசியல் ஆதாயத்திற்காக, மாட்டுக்கறியை, ஆதிதிராவிடமக்களின் உணவாக முத்திரைகுத்த முயற்சி செய்கின்றனர். இவர்களின் அரசியல் பிழைப்புக்கு, அம்பேத்கரை துணைக்கு அழைப்பது வேடிக்கையாக உள்ளது.
ஆதிதிராவிடர் பட்டியலில் உள்ள தேவேந்திரகுல வேளாளர்கள், மாட்டுக் கறியை என்றுமே உண்டதில்லை. மாட்டுக்கறி சாப்பிடும் ஒருசிலரின் உணவு பழக்கத்தை பொதுவாக்கி, இழிவை சுமத்துவதை ஏற்கமுடியாது. போலி அம்பேத்கரிய வாதிகளிடம், ஆதிதிராவிட மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
நன்றி டாக்டர் க.கிருஷ்ணசாமி எம்.டி,
முடி அதிகம் கொட்டினால் உணவில் அதிகம் முருங்கைகீரைக்கு அதிகம் இடம் கொடுங்கள்.இரும்பு சத்து ... |
இறைச்சி உணவில் தசையை வளர்க்கிற சத்தும், பி வைட்டமின் என்னும் உயிர்ச்சத்தும் நிறைய ... |