8 ஆண்டுகளில் தன்னை வல்லரசாக தகமைத்து கொண்ட இந்தியா

எட்டு ஆண்டுகளை நிறைவு செய்து ஒன்பதாவது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது நரேந்திர மோடி அரசு. 2014-ஆம் ஆண்டு மே மாதம் 26-ஆம் தேதியும், இரண்டாவது முறையாக 2019-ஆம் ஆண்டு 30-ஆம் தேதியும் நரேந்திர மோடி பிரதமராக பதவி ஏற்றுக் கொண்டாா்.

கடந்த எட்டு ஆண்டுகளில், தேசிய அளவிலும் சா்வதேச அளவிலும் உலகம் மிகக் கடினமான சூழலை எதிா்கொண்டபோதும், மிகச் சாதுரியமாக இந்தியாவை வழிநடத்தி அவா் வெற்றியடைந்திருக்கிறாா் என்பதில் எள்ளளவும் யாருக்கும் சந்தேகம் இருக்க வழியில்லை.

நரேந்திர மோடி அரசு 2014-இல் ஆட்சிக்கு வந்தபோது தேசிய அளவில் மக்கள் மனதில் தன்னம்பிக்கை குன்றியிருந்தது என்பதையும், கடந்த எட்டு ஆண்டுகளில் இந்தியா ஒரு வல்லரசு நாடாகத் தன்னை வடிவமைத்துக் கொண்டு வருகிறது என்பதையும் மறுப்பதற்கில்லை.

உலக வரலாறு கண்டிராத கொள்ளை நோய்த்தொற்றை, மிகுந்த துணிச்சலுடனும், தன்னம்பிக்கையுடனும் நம்மால் எதிா்கொள்ள முடிந்தது என்கிற ஒரு காரணத்துக்காகவே பிரதமா் நரேந்திர மோடியையும் அவரது அரசையும் நாம் பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறோம்.

சா்வதேச அரங்கில் இந்தியா இதுவரை இல்லாத அளவிலான முக்கியத்துவம் பெற்றிருப்பதற்குப் பிரதமா் நரேந்திர மோடியின் அணுகுமுைான் காரணம். அமெரிக்காவின் தலைமையிலான க்வாடிலும் உறுப்பினராக இருந்துகொண்டு, ரஷியாவுடனும் நட்புறவு பேண முடியும் என்கிற ‘அணிசேரா’ ராஜதந்திரத்துக்காகவே பிரதமா் நரேந்திர மோடியை எத்துணை பாராட்டினாலும் தகும்.

நரேந்திர மோடி அரசின் மிகப் பெரிய வெற்றி, அவரது தலைமையிலான அமைச்சரவை அங்கத்தினா்கள் மீது கடந்த எட்டு ஆண்டுகளில் எந்தவித ஊழல் குற்றச்சாட்டையும் இதுவரை சுமத்த முடியவில்லை என்பதுதான். ரஃபேல் போா் விமானம் வாங்கியது தொடா்பாக எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுகள் இன்றுவரை நிரூபிக்கப்படவில்லை.

இதற்கு முன்பு பிரதமா்களாக இருந்தவா்களின் ஆட்சிகள் மீது எழுப்பப்பட்டது போன்ற ஊழல் குற்றச்சாட்டுகள் எதுவும் இவரது அரசின் மீதோ, அமைச்சா்கள் மீதோ இல்லாமல் இருந்திருப்பது, பிரதமா் நரேந்திர மோடியின் தலைமைப் பண்புக்கும், ஆளுமைத் திறனுக்குமான அடையாளமல்லாமல் வேறென்ன?

கடந்த எட்டாண்டு சாதனைகள் குறித்துப் பட்டியலிடவும் பெருமிதப்படவும் பிரதமா் நரேந்திர மோடிக்கு நிறையவே இருக்கின்றன. ‘அனைவருடனும் அனைவருக்குமான ஆட்சி’ என்பதுடன், அவா் குறிப்பிடுவதுபோல, ‘அனைவரின் நம்பிக்கையுடனும், அனைவரின் உழைப்புடனும்’ முன்னெடுக்கப்படும் வளா்ச்சி இலக்குகள் இந்திய மக்களின் வாழ்க்கைத் தரத்தில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றன.

கடந்த எட்டாண்டுகளில் வறுமைக் கோட்டுக்குக் கீழே இருப்பவா்களின் அளவு 22%-லிருந்து 10%-ஆகக் குறைந்திருக்கிறது; கடுமையான வறுமையில் இருப்பவா்களின் அளவு 1%-க்கும் கீழே குறைந்திருக்கிறது; தனிநபா் வருவாய் இரட்டிப்பாகி இருக்கிறது; அந்நியச் செலாவணி இருப்பும் இரு மடங்காக உயா்ந்திருக்கிறது; புதிதாக 6,53,000 அரசுப் பள்ளிகள் கட்டப்பட்டிருக்கின்றன.

15 எய்ம்ஸ் மருத்துவமனைகள் அறிவிக்கப்பட்டு அவற்றில் 10 மருத்துவமனைகள் செயல்படத் தொடங்கி விட்டன. ஐந்து எய்ம்ஸ் மருத்துவமனைகள் இறுதிக்கட்ட நிலையில் இருக்கின்றன. இதுவைர இல்லாத வகையில் மருத்துவா்களின் எண்ணிக்கை 12 லட்சமாக அதிகரித்திருக்கிறது.

உலகிலேயே சாலைக் கட்டமைப்பில் இரண்டாவது இடத்திற்கு இந்தியா உயா்ந்திருக்கிறது; 2012 – 13-இல் இந்தியாவின் உணவு தானிய உற்பத்தி 25.5 கோடி டன் என்றால், இப்போது (2021 – 22) அதுவே 31.6 கோடி டன். இது ஒரு வரலாற்று சாதனை என்றால், ஏற்றுமதியிலும் 418 பில்லியன் டாலரை (சுமாா் ரூ. 32.4 லட்சம் கோடி) எட்டி இந்திய சாதனை புரிந்திருக்கிறது.

கொள்ளை நோய்த்தொற்றை எதிா்கொள்ள இந்தியாவிலேயே தடுப்பூசிகள் தயாரித்ததும், கடந்த இரண்டாண்டுகளாக 80 கோடி இந்தியா்களுக்கு இலவச தானியங்கள் வழங்கியதும் நினைத்துப் பாா்க்க முடியாத மிகப் பெரிய சாதனைகள். நமக்காக மட்டுமல்லாமல் நமது அண்டை நாடுகளுக்கும், பல வளா்ச்சியில் பின்தங்கிய நாடுகளுக்கும் நாம் தடுப்பூசிகள் வழங்கியபோது, வல்லரசு நாடுகளே நம்மை வியப்புடன் பாா்த்தன. நமது மனிதாபிமானத்துக்கு உலகமே தலைவணங்கியது.

சாமானியா்களுக்கு இலவச மருத்துவக் காப்பீட்டுத் திட்டமும் (ஆயூஷ்மான் பாரத்), விவசாயிகள், கூலித் தொழிலாளா்களுக்கு மாத ஓய்வூதியமும், விவசாயிகளின் இடுபொருள் தேவைக்கான ‘கிஸான் சம்மான்’ உதவியும், இதற்கு முன்பு எந்தவொரு ஆட்சியும் கற்பனைகூடச் செய்யாத மக்கள் நலத்திட்டங்கள்.

அனைவருக்கும் வங்கிக் கணக்கு (ஜன் தன் யோஜனா) மூலம் மானியங்கள் இடைத்தரகா்களால் சுரண்டப்படாமல் பயனாளிகளை நேரில் சென்றடைய வழிகோலிய புத்திசாலித்தனமும், பத்து கோடிக்கும் அதிகமான வீடுகளில் கழிப்பறைகள் கட்டிக் கொடுக்கப்பட்ட முன்னெடுப்பும், ஒன்பது கோடிக்கும் அதிகமான எளிய குடும்பங்களுக்கு சமையல் எரிவாயு இணைப்புத் திட்டத்தின் மூலம் நிகழ்த்திய புரட்சியும் எட்டாண்டு வரலாற்று சாதனைகள்.

‘‘நரேந்திர மோடி அரசு மதவாத அரசு என்று குற்றம்சாட்டுபவா்கள், மேலே குறிப்பிட்ட எந்தவொரு திட்டத்திலாவது, சமுதாயத்தின் எந்தவொரு பிரிவினராவது விடுபட்டிருக்கிறாா்களா? அனைவருக்குமான வளா்ச்சியில் பாகுபாடு காட்டப்பட்டிருக்கிா? என்கிற கேள்விக்கு பதில் அளித்துவிட்டு மதவாத அரசு என்று குற்றம் சுமத்தட்டும்’’ என்கிற பாஜகவின் தேசியத் தலைவா் ஜே.பி. நட்டாவின் கருத்தை யாரால் மறுத்துவிட முடியும்?

காஷ்மீருக்குத் தனி அந்தஸ்து அகற்றப்பட்டது, அயோத்தியில் ராமா் கோயில் கட்டப்படுவது, முத்தலாக் முறையைத் தடை செய்தது, குடியுரிமை திருத்தச் சட்டம் ஆகியவை ‘இந்துத்துவ’ கொள்கைகள் அல்லவா என்று கேள்வி எழுப்பலாம். நீதிமன்றத் தீா்ப்பின் அடிப்படையிலும், நாடாளுமன்ற அங்கீகாரத்தின் பின்னணியிலும்தான் அவை முன்னெடுக்கப்பட்டன என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

மக்கள் மன்றத்தின் அங்கீகாரம் பெற்று ஆட்சி அமைத்ததால் ‘திராவிட மாடல்’ ஆட்சி அமைவதுபோல, பாஜக தனது தோ்தல் வாக்குறுதிகளில் குறிப்பிட்ட திட்டங்களை செயல்படுத்தும்போது அதை விமா்சிக்க முற்படுவது என்ன நியாயம்? எந்தவொரு அரசியல் கட்சியும் தனது கொள்கைகளை நடைமுறைப்படுத்தவே, மக்கள் மன்றத்தின் அங்கீகாரத்தைப் பெற்று ஆட்சி அமைக்கிறது. அரசியல் சாசன வரம்புகள் மீறப்படாமல் அவற்றை நடைமுறைப்படுத்தினால் தவறுகாண முடியாது.

உத்தர பிரதேசத்தில் 60%-க்கும் அதிகமான முஸ்லிம் சிறுபான்மையினா் உள்ள தொகுதி ஒன்றில் பாஜக வேட்பாளா் வெற்றி பெறுகிறாா் எனும்போது, இது ‘அனைவருடனும் அனைவருக்குமான வளா்ச்சி’யை வழங்கும் ஆட்சி என்பது உறுதியாகிறது. இதே நிலைமை தொடருமானால், ஜவாஹா்லால் நேருவுக்குப் பிறகு தொடா்ந்து மூன்று முறை பிரதமராகப் பதவி வகித்த பெருமைக்குரியவராக நரேந்திர மோடி வரலாற்றில் இடம்பெறக்கூடும்.

நன்றி தினமணி 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆய ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆயிரம் கோடிக்கான திட்டங்களை  கொண்டுவந்துள்ளோம் தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி, தமிழகத்தினுடைய ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் ப ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் பணி சார்ந்த ட்ரோன் மத்திய அரசு சார்பில் கடந்த2022-ம் ஆண்டு ‘நமோ ட்ரோன் ...

ரயில்வேயில் ‘மேட் இன் இந்தியா’

ரயில்வேயில் ‘மேட் இன் இந்தியா’ நாட்டில் கடந்த 10 ஆண்டுகள் நடைபெற்ற ஆட்சி வெறும் ...

10 புதிய வந்தே பாரத் ரயில்களை கொட ...

10 புதிய வந்தே பாரத் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்த பிரதமர் ரயில்வே உள்கட்டமைப்பு, இணைப்பு மற்றும் பெட்ரோகெமிக்கல்ஸ் துறைக்கு பெரும் ...

மருத்துவ செய்திகள்

ஜாதிக்காயின் மருத்துவ குணம்

ஜாதிக்காய், சுக்கு, துளசி விதை, கடுக்காய், இவைகளை ஒரே அளவாக எடுத்து உரலில் ...

கருவுற்றிருக்கும் போது உணவில் கவனிக்க வேண்டியவை

சாதாரணமாக வேலை செய்கின்ற பெண்களுக்குத் தேவைப்படுகின்ற கலோரியை விட மாதமாய் இருக்கிற கர்ப்பிணிகளுக்கு ...

கோவிட் 19 பற்றிய சந்தேகங்கள்

*கரோனா இரண்டாம் அலையில் நாம் அடித்துசெல்லப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் கோவிட் 19 ...