சட்டசேவை இலவசமாக வழங்கப்படும்

ஜெய்ப்பூரில் நடைபெற்ற 18ஆவது அகில இந்திய சட்டசேவைகள் கூட்டத்தில், “இந்த ஆண்டு முதல், தொலை சட்டசேவை நாட்டில் குடிமக்களுக்கு இலவசமாக வழங்கப்படும்” என்று மத்திய சட்டம் மற்றும் நீதித் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.

இதன் மூலம், ஒருலட்சம் கிராம பஞ்சாயத்துகளில் உள்ள பொதுசேவை மையங்களில் காணொலி உள்கட்டமைப்பு மூலம் வழக்கறிஞர்களை தொடர்புகொண்டு விளிம்புநிலை மக்கள் சட்ட உதவி பெறமுடியும் என தெரிவிக்கப் பட்டுள்ளது. எளிதான மற்றும் நேரடி அணுகலுக்காக, தொலை சட்டசெயலி 2021ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இது தற்போது 22 மொழிகளில் கிடைக்கிறது. இந்த டிஜிட்டல் புரட்சியின் பயனாக, தொலைசட்ட சேவைகள் வெறும் ஐந்து ஆண்டுகளில் 20 லட்சம் பயனாளிகளுக்கு விரிவுபடுத்தப் பட்டுள்ளன.

இந்த நிகழ்வின்போது, நீதித்துறை, சட்டம் மற்றும் நீதிஅமைச்சகம், தேசிய சட்டசேவைகள் ஆணையம் ஆகியவை இணைந்து சட்டசேவைகளை வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை பரிமாறிக் கொண்டன. அனைவருக்கும் நீதிக்கான காரணத்தை முன்னெடுத்துச் செல்வதற்கும், குடிமக்களை ஒருங்கிணைக்கும் மிகப்பெரிய காரணியாக சட்டத்தின் ஆட்சியை நிறுவுவதற்கும் எங்களின் கூட்டு உறுதிப் பாட்டின் அடையாளமாக இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் உள்ளது என்று மத்திய அமைச்சர் கூறினார்.

புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ், ஒவ்வொரு மாவட்டத்திலும் 700 வழக்கறிஞர்களின் சேவைகளை இத்திட்டத்தின்கீழ் பிரத்தியேகமாக ஆணையம் வழங்கும். இந்த வழக்கறிஞர்கள் தற்போது பரிந்துரை வழக்கறிஞர்களாகவும் செயல் படுவார்கள், மேலும் வழக்குக்கு முந்தைய கட்டத்தில் தகராறுதவிர்ப்பு மற்றும் தகராறு தீர்வுக்கான முறையை வலுப்படுத்தவும் உதவுவார்கள் என்றும் அமைச்சர் கிரண்ரிஜிஜு நம்பிக்கை தெரிவித்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

முருங்கைப் பூ, முருங்கை பூவின் மருத்துவ குணம்

முருங்கைப் பூ நாக்கின் சுவையின்மையை போக்கும் தன்மை கொண்டது. முருங்கை பூவை பாலில் வேகவைத்து- ...

தியானம் என்றால் என்ன?

தியானம் என்றால் எண்ணுதல் அல்லது நினைத்தல் என்று பொருளாகும். மனம் ஒரே பொருளின் மேலேயே ...

கருந்துளசியின் மருத்துவ குணம்

நஞ்சை முறிப்பவையாகவும், சீரணத்தைத் தூண்டுபவையாகவும் செயல்படுகிறது.