டெல்லி மாடல் படம்காட்டும் திமுக

தமிழகத்துக்கு டெல்லி மாடல் கல்வித் திட்டத்தை அம்மாநில முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை அழைத்துவந்து அறிமுகப்படுத்தி உள்ளது திமுக அரசு. .அதாவது ஏழை எளிய மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்தும் முயற்சியாம் இது.

மக்களின் வாழ்க்கைத்தரம் உயர கல்வி அவசியம். ஏழை பணக்காரன் என்ற ஏற்றத்தாழ்வுகள் இன்றி அனைவருக்கும் அது கிடைக்கப்பெற வேண்டும். பணம் படைத்தவர்களின் பிள்ளைகளுக்கு ஒரு தரம், அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு ஒரு தரம் என்றொரு நிலையெல்லாம் மாறவேண்டும். இடம் பொருள் பார்த்து வருவதல்ல ஞானம். அன்னை சரஸ்வதி ஆடம்பரங்கள், செல்வங்களை பார்த்து வருபவள் அல்ல, ஏழைகளின் இல்லங்களை அதிகம் நேசிப்பவள். ஆனால் தமிழகத்தில் இன்றைய கல்வித் திட்டங்களோ சரஸ்வதிக்கே சவால் விடுபவை. ஆசிரியர்கள் தேர்வில் குளறுபடி, மாணவர்கள் மது போதையில், என்று லஞ்ச லாவண்யங்களால் சீரழிந்து வருகிறது.

இதற்கு மத்தியில்தான் டெல்லி மாடல் என்ற கபட நாடகம் எல்லாம் அரங்கேற்றப்பட்டு வருகிறது. உண்மையில் மாணவச் செல்வங்களின் மீது அக்கறை இருந்திருந்தால் அனைவருக்கும் சமச்சீரான கல்வியை வழங்கவல்ல மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை எதிர்க்காமலாவது இருந்திருக்கலாம். அது பணபலம் நிறைந்த கார்ப்ரேட் பள்ளிகளிலிருந்து, ஆடம்பரங்களற்ற அரசு பள்ளிகள் வரை ஒரே மாதிரியான பாடத்திட்டத்தை, திறன் மேம்பாட்டு பயிற்சிதனை வழங்கவல்லது.

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் சர்வதேச தரத்தில் வெற்றிகரமாக இயங்கும் அரசு பள்ளியான கேந்திரிய வித்யாலயா மாடலையாவது பின்பற்றி இருக்கலாம் அல்லவா?. மாவட்டத்துக்கு ஒன்றிரண்டு பள்ளிகளையாவது அந்த தரத்தில் நிர்வகித்து இருக்கலாம் அல்லவா?, இல்லையே…

ஏன் மத்திய அரசின் முழு நிதியுதவியுடன் கார்ப்பரேட் கல்வி நிறுவனங்களுக்கு இணையான கல்வியை தரவல்ல, கிராமப்புற ஏழை எளிய மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்துவதையே நோக்கமாக கொண்ட, நவோதையா கல்வி நிறுவனங்களை தமிழகத்தில் எதிர்க்காமலாவது இருந்திருக்கலாம் அல்லவா?. மாவட்டத்துக்கு ஒன்று வீதம் 40க்கும் அதிகமான பள்ளிகள். வருடத்துக்கு 10000க்கும் அதிகமான மாணவர்கள் என்று , கடந்த 15 வருடத்தில் லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலன் அடைந்து இருப்பார்கள் அல்லவா. மாறாக தாயமொழியுடன் ஹிந்தி போன்ற மொழிகள் கூடுதலாக கற்றுத்தரப்படுகிறது என்பதை காரணம் காட்டி எதிர்த்தவர்கள் இவர்கள்.

மாறாக இன்று டெல்லி மாடல் என்று சொல்லி செட்டிங் போட்டு தமிழக மக்களிடம் படம் காட்டுகிறார்கள். இவர்களுடைய பொய்கள் நிறைந்த கபடநாடகம் எல்லாம் வெளுக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை என்பதே நிதர்சனம்.

நன்றி தமிழ் தாமரை வி.எம் வெங்கடேஷ்

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

குப்பைமேனியின் மருத்துவ குணம்

குப்பைமேனி இலையைக் கொண்டு வந்து, காரமில்லாத அம்மியில் வைத்து அத்துடன் சிறிதளவு உப்புச் ...

நீரிழிவுநோய் தாக்குதலுக்கு அதிக வாய்ப்புள்ளவர்கள்

தாய் அல்லது தந்தை – இருவரில் யாராவது ஒருவருக்கு நீரிழிவுநோய் இருந்தால், அவர்களுடைய ...

சந்தனத்தின் மருத்துவக் குணம்

சிறுநீர் பெருக்கியாகவும், உடல் பலம் பெருக்கியாகவும் செயல்படுகிறது.