இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதையே தனது அரசு முறை நோக்கம் – மோடி

இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதையே தனது அரசு நோக்கமாக கொண்டுள்ளது’ என பிரதமர் மோடி தெரிவித்தார்.

டில்லி நடந்த தனியார் மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது: உலக நாடுகளின் ஒவ்வொரு தேர்தலின் போது ஆட்சிகள் மாறுகின்றன. இந்திய மக்கள் 3வது முறையாக பா.ஜ., அரசை தேர்ந்தெடுத்துள்ளனர். இதற்கு முன்பு தேர்தல் வெற்றிக்காகவே அரசுகள் நடந்தன. பா.ஜ., ஆட்சியில் மக்கள் நம்பிக்கையை மீட்டெடுத்துள்ளோம். மக்களின் வளர்ச்சியே பா.ஜ., அரசின் தாரக மந்திரம். இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதையே தனது அரசு நோக்கமாக கொண்டுள்ளது. இந்திய மக்கள் தங்கள் நம்பிக்கையை எங்களிடம் ஒப்படைத்துள்ளனர்.

கடந்த 10 ஆண்டுகளில் நாட்டின் இளைஞர்கள் வளர்ச்சி அடைந்து வருகின்றனர். 1.25 லட்சத்திற்கு அதிகமான ஸ்டார்ப் அப் நிறுவனங்கள் துவங்கப்பட்டுள்ளன. இளைஞர்கள் தேசத்தை பெருமைப்படுத்த ஆர்வமாக உள்ளனர்.

முந்தைய காலத்தில் பயங்கரவாதம் இந்திய மக்களை பாதுகாப்பற்றதாக உணர வைத்தது. இப்போது காலம் மாறிவிட்டது. பயங்கரவாதிகள் தங்கள் வீடுகளில் பாதுகாப்பற்றதாக உணர்கிறார்கள். தனது அரசு ஓட்டு வங்கி அரசியலில் இருந்து விலகி, நாட்டின் வளர்ச்சிக்காக உழைத்து வருகிறது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நாம் விழித்தால் கலப்படத்தை முழ ...

நாம் விழித்தால் கலப்படத்தை முழுமையாக நீக்கலாம் – அண்ணாமலை ''கலப்பட பொருள் இருந்தால், கடைக்காரரிடம் நாம் கேள்வி எழுப்ப ...

இந்தியாவில் விமான பயணம் செய்வோ ...

இந்தியாவில் விமான பயணம் செய்வோர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு உள்நாட்டு விமான போக்குவரத்து சந்தையில் சிறப்பான வளர்ச்சியை பெற்றுள்ள ...

சீனா செல்கிறார் வெளியுறவு செயல ...

சீனா செல்கிறார் வெளியுறவு செயலர் மத்திய வெளியுறவு அமைச்சக செயலர் விக்ரம் மிஸ்ரி, வரும் ...

குடியரசு தின விழாவில் பங்கேற்க ...

குடியரசு தின விழாவில் பங்கேற்க இந்தோனேசியா அதிபர் இந்தியா வந்தார் டில்லியில் நடக்கும் நாட்டின் 76வது குடியரசு தின விழாவில் ...

கொள்கை ரீதியான திட்டங்களை 10 ஆண் ...

கொள்கை ரீதியான திட்டங்களை 10 ஆண்டுகளில் நிறைவேற்றிவிட்டோம் – அமித் ஷா ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது ...

டங்ஸ்டன் ஏலம் ரத்து : மக்களின் க ...

டங்ஸ்டன் ஏலம் ரத்து : மக்களின் கோரிக்கையை ஏற்றது மத்திய அரசு உள்ளூர் மக்களின் கோரிக்கையை ஏற்று, மதுரை அருகே அமைய ...

மருத்துவ செய்திகள்

சர்க்கரை நோய் குணமாக

முற்றிய வேப்பிலையையும் வில்வ இலையையும் இடித்துச் சாறு எடுத்து காலையும் மாலையும் ஒரு ...

குப்பைமேனியின் மருத்துவ குணம்

குப்பைமேனி இலையைக் கொண்டு வந்து, காரமில்லாத அம்மியில் வைத்து அத்துடன் சிறிதளவு உப்புச் ...

முருங்கை இலைக் காம்பு | முருங்கை இலை காம்பின் மருத்துவ குணம்

முருங்கை இலை காம்புகளை சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சீரகம்,கறிவேப்பிலை,பூண்டு, சோம்பு, சின்ன ...