‘அம்மா’ என்பது சாதாரண வார்த்தை அல்ல

கடந்த ஜூன் 18-ம்தேதி பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் தனது 100-வது பிறந்த நாளை கொண்டாடினார். அப்போது காந்திநகருக்கு சென்ற பிரதமர் மோடி, தாய்க்கு பாதபூஜை செய்து வணங்கினார். அதோடு தாயின் வாழ்க்கை குறித்த நினைவலைகளை வலைப்பதிவில் வெளியிட்டார். அதன் சாரம்சம் வருமாறு:

‘அம்மா’ என்பது சாதாரண வார்த்தைஅல்ல. அன்பு, பொறுமை,நம்பிக்கை என அந்த வார்த்தைக்கு ஆயிரம்அர்த்தங்கள் உள்ளன. ஒரு தாய் குழந்தையை பெற்றெடுப்பதோடு மட்டுமல்லாமல், அந்த குழந்தையின் குணநலன்கள், தன்னம்பிக்கையை செதுக்கிவளர்க்கிறார். பிள்ளைகளுக்காக அனைத்தையும் தியாகம் செய்கிறார்.

எல்லா தாய்மார்களையும்போல எனது தாயும் மிகவும் எளிமையானவர், அற்புதமானவர். குஜராத்தின் வட்நகரில் மண் சுவர், ஓடு வேய்ந்த ஒற்றை அறைகொண்ட சிறிய வீட்டில் நாங்கள் வசித்தோம். அந்த வீட்டில் கழிப்பறை, குளியல்அறை கிடையாது.

வீட்டை ஒட்டி மூங்கிலால் ஒருபரணை எனது தந்தை அமைத்தார். அதுதான் எங்களது சமையல் அறை. அந்தபரணில் ஏறி எனது தாய் சமையல் செய்வார்.ஒருபோதும் அவர் உணவு வகைகளை வீணாக்க மாட்டார்.

எனது தந்தை வட்நகர் ரயில் நிலையத்தில் தேநீர் விற்பனைசெய்தார். நாள்தோறும் அதிகாலை 4 மணிக்கு அவர் பணிக்குச்செல்வார். அப்போதே எனது தாயும் எழுந்துவிடுவார். வீட்டு வேலைகள் அனைத்தையும் அவர் ஒருவரேசெய்வார். வீட்டுச் செலவுகளை சமாளிக்க அண்டைவீடுகளில் பாத்திரங்களை கழுவினார். அதோடு ராட்டையில் நூல் நூற்றார்.

மழைக்காலத்தில் எங்கள் வீட்டின் கூரைஒழுகும். அப்போதுஎனது தாய் வாளிகள், பாத்திரங்களில் மழைநீரை சேகரிப்பார். அந்த தண்ணீரை அடுத்த சிலநாட்கள் வீட்டு தேவைகளுக்கு பயன்படுத்தி கொள்வார். அப்போதே அவர்மழைநீரை சேகரித்தார். எனது தாய் எப்போதுமே தூய்மைக்கு முன்னுரிமை அளிப்பார். பசு சாணத்தால் வீட்டை மெழுகி சுத்தமாக வைத்திருப்பார். மண் சுவரில் கண்ணாடி துண்டுகளை பதித்தும் ஓவியங்களை வரைந்தும் வீட்டை அழகு படுத்துவார்.

எனது தாய் பெயரில் சொத்துகள் எதுவும் இல்லை. அவர் தங்க நகைகளை அணியவில்லை, நான்வீட்டை விட்டுவெளியேற முடிவுசெய்தபோது, “உன் மனம் சொன்னபடி செய்” என்று ஆசிர் வதித்தார். கடந்த 2001-ம் ஆண்டு குஜராத் முதல்வராக பதவியேற்பதற்கு முன்பாக தாயை சந்தித்து ஆசிபெற சென்றேன்.

அப்போது அவர், ‘‘உன்னுடைய அரசு பணி என்னவென்று எனக்குத் தெரியாது. ஆனால் நீ ஒருபோதும் லஞ்சம் வாங்காதே’’ என்று அறிவுறுத்தினார். அதன் பிறகு தொலைபேசியில் பேசும்போதெல்லாம், ‘‘எந்தத்தவறும் செய்யாதே, ஏழைகளுக் காக உழைத்துக்கொண்டே இரு” என்று அன்பு கட்டளையிட்டார். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி தனது நினைவலைகளைப் பகிர்ந்துள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தேசத்தைக் கட்டியெழுப்புவதில் ...

தேசத்தைக் கட்டியெழுப்புவதில்  முயற்சிகளில் உறுதியான பங்காளியாக இருந்தார் மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடாவிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, ...

பிறப்பின் அடிப்படையில் திமுக த ...

பிறப்பின் அடிப்படையில் திமுக தலைமை நவீன தீண்டாமை தெலுங்கர்கள் பற்றி சர்ச்சையாகபேசிய கஸ்தூரிக்கு திமுக எம்பி ஆ ...

இந்தியா – சவூதி அரேபியா உறவுக ...

இந்தியா – சவூதி அரேபியா உறவுகளை வலுப்படுத்தும் வெற்றிகரமான பயணத்தை பியுஷ் கோயல் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் ...

இந்திய பொருளாதார நிபுணர் காலமா ...

இந்திய பொருளாதார நிபுணர் காலமானார் பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் தலைவரும், இந்தியப் பொருளாதார நிபுணருமான ...

சொல்வது எளிது செய்வது கடினம் மோ ...

சொல்வது எளிது செய்வது கடினம் மோடி காங்கிரசை சாடல் உண்மைக்கு புறம்பான வாக்குறுதிகளை அளிப்பது எளிது. ஆனால், அதனை ...

தீபாவளி வாழ்த்து சொல்வதில் முத ...

தீபாவளி வாழ்த்து சொல்வதில் முதலமைச்சருக்கு என்ன தயக்கம் L. முருகன் கேள்வி தீபாவளிக்கு வாழ்த்து சொல்வதில் முதல்வர் ஸ்டாலினுக்கு என்ன தயக்கம்? ...

மருத்துவ செய்திகள்

அகத்திக் கீரையீன் சிறப்பு

அகத்தை சுத்த படுத்துவதால் அகத்தி என பெயரை வைத்துள்ளனர்..சுமார் 50பது ஆண்டுகளுக்கு முன்பு ...

ஆலமரத்தின் மருத்துவ குணம்

ஆலமரத்தின் மொக்கு, பூ இவைகளைக் கொண்டு வந்து அம்மியில் வைத்துப் பால்விட்டு மைபோல ...

சுவையான தகவல்கள்

ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்கிற ஆசை எல்லோருக்கும் உள்ள நியாயமான ஆசை. ஆனால் ...