‘க்வாட்’ அமைப்பின் மதிப்பை சீா்குலைக்க முயற்சி

‘தவறான தகவ ல்கள் மூலம் ‘க்வாட்’ அமைப்பின் மதிப்பை சீா்குலைக்க நடை பெறும் முயற்சிகள், உறுப்பு நாடுகளின் தலைவா் களால் கவனிக்கப் பட்டு வருகிறது’ என்று மக்களவையில் மத்தியஅரசு வெள்ளிக்கிழமை பதிலளித்தது.

இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் அங்கம்வகிக்கும் ‘க்வாட்’ அமைப்புக்கு சீனா எதிா்ப்பு தெரிவித்துவரும் நிலையில், மத்திய அரசு இவ்வாறு கூறியுள்ளது.

இது தொடா்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, வெளியுறவுத்துறை இணையமைச்சா் வி.முரளீதரன் எழுத்து பூா்வமாக அளித்த பதில்வருமாறு:

இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு, சா்வதேச சட்டம் மற்றும் விதிகள் சாா்ந்த ஒழுங்கு முறை கோட்பாடுகளின் அடிப்படையில், இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் சுதந்திரம், வெளிப்படைத் தன்மை, அமைதி, வளம் ஆகியவற்றை நிலை நாட்டுவதற்கான உறுதிப் பாட்டை ‘க்வாட்’ நாடுகள் பகிா்ந்துள்ளன.

தவறான தகவல்கள் மூலம் இந்த அமைப்பின் மதிப்பை சீா்குலைக்க நடை பெறும் முயற்சிகள், உறுப்பு நாடுகளின் தலைவா்கள் மற்றும் அமைச் சா்களால் கவனிக்கப்பட்டு வருகிறது. அதே சமயம், சுகாதாரம், பாதுகாப்பு, பருவநிலை மாறுபாடு, எரி சக்தி, விநியோக சங்கிலி, போக்குவரத்து தொடா்பு, உள் கட்டமைப்பு, கல்வி மற்றும் விண்வெளி ஆகிய துறைகளில் இந்திய-பசிபிக் பிராந்திய நாடுகள் பலனடைவதற்கான உறுதியான செயல் திட்டத்தில் ‘க்வாட்’ அமைப்பு கவனம் செலுத்தும். இப்பிராந்தியத்தில் ‘க்வாட்’ நடவடிக்கைகளை அமலாக்கு வதற்கான பணிக் குழுக்களும் இதர அமைப்பு முறைகளும் உருவாக்கப் பட்டுள்ளன. இந்த செயல் திட்டத்தின் கீழ், கம்போடியா, தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு இந்தியா வால் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கரோனா தடுப் பூசிகள் கடந்த ஆண்டு வழங்கப்பட்டன. மேலும், இயற்கை பேரிடா் களின் போது மனிதாபிமான உதவிகள் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் கூட்டுறவை நிறுவுவதில் இந்தியா முனைப்புடன் செயலாற்றி வருகிறது என்றாா் அவா்.

மற்றொரு கேள்விக்கு பதிலளித்த முரளீதரன், ‘கரோனா பரவல் சூழலைத்தொடா்ந்து, கடந்த 2 ஆண்டுகளாக அமெரிக்க விசா பெறுவதில் இந்திய மாணவா்கள் எதிா்கொண்டுள்ள சவால்கள் குறித்து வெளியுறவு அமைச்சகம் அறிந்துள்ளது. இந்தவிவகாரம், அமெரிக்க அரசின் உயா் நிலை அளவில் எடுத்துச் செல்லப் பட்டுள்ளது’ என்றாா்.

மக்களவையில் கேள்வியொன்றுக்கு பதிலளித்த வெளியுறவுத்துறை இணையமைச்சா் மீனாட்சி லேகி, ‘ரஷிய-உக்ரைன் போரைத்தொடா்ந்து, ‘ஆபரேஷன் கங்கா’ நடவடிக்கை மூலம் உக்ரைனில் இருந்து மாணவா்கள் உள்பட 18,282 இந்தியா்கள் மீட்கப் பட்டனா்’ என்றாா்.

உக்ரைனில் கல்வியைதொடர அங்கு பயணிக்க இந்திய மாணவா்கள் அனுமதிக்கப் படுகின்றனரா? என்ற கேள்விக்கு, ‘மாணவா்கள், உக்ரைனுக்கு செல்லமுடியும். ஆனால், உக்ரைனில் நிலவும்சூழல் மற்றும் பாதுகாப்புகருதி, அங்கிருந்து இந்தியா்கள் வெளியேறவே மத்தியஅரசு அறிவுறுத்தியுள்ளது’ என்று மீனாட்சி லேகி பதிலளித்தாா்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மாற்றம் வேண்டும் என்பதில் மக்க ...

மாற்றம் வேண்டும் என்பதில் மக்கள் உறுதி தமிழக பாஜக தலைவர் அண்ணா மலை என் மண், ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை த ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை தனது நண்பன் என கூறுகிறது ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை நண்பனாக கருதுகிறது’ என பிரதமா் ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வரு ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வருவது அசோக் சிங்ஹல் அயோத்தி என்றால் ஶ்ரீ ராமனுக்கு அடுத்து நினைவுக்குவருவது அசோக் ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்தநாடாக மாறும் என்று ...

111 பதக்கங்கள் என்பது சிறிய எண்ணி ...

111 பதக்கங்கள் என்பது சிறிய எண்ணிக்கை அல்ல ஆசியபாரா விளையாட்டில் இந்தியாபெற்ற 111 பதக்கங்கள் என்பது சிறிய ...

தேசியக் கொடி அவமதிப்பு திமுக ம ...

தேசியக் கொடி அவமதிப்பு  திமுக மன்னிப்பு கேட்க வேண்டும் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்திற்கு இந்திய தேசியக் கொடியை கொண்டு ...

மருத்துவ செய்திகள்

வயிற்றுப்புண் மற்றும் வாயுக் கோளாறுகள் நீங்க உணவுப் பொருட்கள்

ஜீரணமாகாத காரணத்தால் புளிச்ச ஏப்பம், சாப்பிட்ட உணவு மேல் கிளம்பி விடுதல், வாயில் ...

எள்ளுச் செடியின் மருத்துவக் குணம்

கண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் பூவைக் கொண்டுவந்து, ...

ஆலமரத்தின் மருத்துவ குணம்

ஆலமரத்தின் மொக்கு, பூ இவைகளைக் கொண்டு வந்து அம்மியில் வைத்துப் பால்விட்டு மைபோல ...